Published:Updated:

விதி வலியது

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

விதி வலியது

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

`விதி’ என்கிற ஒன்றைக் காலம் காலமாக நம் மூதாதையர்கள் வலியுறுத்திவந்திருக்கிறார்கள். `விதி வலியது’ என்று நாம் கேள்விப்பட்டிருந்தாலும், அதற்கான விளக்கங்கள் பல உண்மைச் சம்பவங்களின் மூலமாகவே நமக்குத் தெரியவந்திருக்கின்றன.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


அவர் பெயர் விட்டலய்யா. அவருடைய மகன் நாராயணய்யா. மகனை வேதம் படிக்கவைக்க வேண்டும் என்பது விட்டலய்யாவின் ஆசை. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில், ராஜம்பேட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் சிறந்த பண்டிதர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். மகனை அவரிடம் அனுப்பிவைத்தார். நாராயணய்யாவுக்கு சம்ஸ்கிருதம் சுத்தமாக வரவில்லை. வார்த்தைப் பிரயோகமோ, அதை உள்வாங்கிக்கொண்டு சொல்லும் திறனோ இல்லை. ஆசிரியரே தலையில் அடித்துக்கொள்ளும் அளவுக்கு அவருடைய கற்றல் முறை இருந்தது.

`வேத மந்திரங்களைச் சொல்ல முடியவில்லையே, தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே...’ என்று ஆதங்கப்பட்டார் நாராயணய்யா. ஒரு முடிவுக்கு வந்தார். ஊர் எல்லை தெய்வம் சித்தாளம்மா. அங்கே போனார். கோயிலில் இருந்த புற்றுக்குள் கையைவிட்டார். `சித்தாளம்மா நாகமாக வந்து என்னைக் கொன்றுவிடு. நான் வாழும் வாழ்க்கை வீண்’ என்று இறைஞ்சினார். அப்போது ஓர் அசரீரி கேட்டது... ``கையை எடுப்பா... விதி இருந்தால்தான் மிதிப்பவரையும்கூட பாம்பு தீண்டும். தாள்ளபாக்கத்துல சென்னகேசவ பெருமாள் கோயில் இருக்கு. அவரைக் கும்பிடு. உனக்கு வேதம் வரும். உன்னுடைய மூன்றாவது தலைமுறையில ஒரு மகா பாகவதன் தோன்றப் போகிறான்’’ என்றது அசரீரி.

அதன் பிறகு அவரால் சரளமாக வேதம் படிக்க முடிந்தது. அவருடைய மூன்றாவது தலைமுறையில் பிறந்த அந்த மகானுபாவர் அன்னமாச்சார்யா!

இன்றைக்கு மாணவர்களில் பலர் கில்லி. ஆசிரியர் களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

டீச்சர் கேட்டார்... ``தரையிலயும் நீர்லயும் வாழுற ஒரு உயிரனத்தைச் சொல்லு... பார்ப்போம்.’’

மாணவன் சொன்னான்... ``தவளை.’’

``இன்னோர் உதாரணம் சொல்லு?’’

``இன்னொரு தவளை டீச்சர்.’’