Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

ஶ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராகவேந்திரர்

லக்ஷ்மி சிவச்சந்திரன், ஓவியம்: பாரதிராஜா

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன், ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
ஶ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராகவேந்திரர்

ஒரு முறை, எங்கள் இரவுப் பிரயாணத்தின் போது வழியில் பிரச்னையில் மாட்டி னோம். “இந்த வழியாகப் போகாதீங்க. திருட்டுப் பசங்க இருக்கிற ஏரியா. பிரச்னையில் மாட்டிக்குவீங்க. வண்டி நின்னுட்டா ஒண்ணுமே பண்ண முடியாது” என்று சிலர் எச்சரித்ததையும் மீறி, நாங்கள் பயணத்ததைத் தொடர்ந்தோம். ஆனால் இறையருளால் தப்பித்தோம். அது தனிக் கதை. இப்போது நான் சொல்லப் போவது என் தோழியின் குடும்பம் மாட்டிக் கொண்டு, மீண்ட கதை.

லட்சுமி கடாட்சம்!

ப்போதுமே வழியில் மாட்டிக்கொண்டால் நம்மைக் காப்பது இறைவன் மட்டும்தான்; வேறு யாரும் காப்பாற்ற முடியாது... இல்லையா!

நாங்கள் சென்ற பாதை என்றில்லை... எங்குமே நமக்கு ஒரு கஷ்டம்- பிரச்னை வந்து அனுபவிக்கவேண்டும் என்றிருந்தால், அதுவும் இறைவன் செயல்தான். அதை எதிர் கொள்ளச் செய்வதும் இறைவன்தான். ‘நாம் ஏதோ ஒரு தப்பு செய்திருக்கிறோம், அதற்கான தண்டனை இது!’ என்று எண்ணி, அவனைச் சரணாகதி அடைந்துவிட்டால் பிரச்னை இல்லை. பல வருடங்களுக்கு முன், தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை என் பள்ளித்தோழி சந்திரா சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். முதலில் அதைச் சொல்லிவிடுகிறேன்.

தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒருமுறை காரில் மந்திராலயம் செல்வதற்காகப் புறப்பட்டிருக்கிறார்கள். கார் குறிப்பிட்ட ஓரிடத்தில் தடம் மாறி, தவறான பாதையில் போக ஆரம்பித்துவிட்டது. போகும் வழியில் டயர் பஞ்சர் வேறு! எந்தப் பக்கம் போவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

சுற்றிலும் கும்மிருட்டு. 40 வருடங்களுக்கு முன் இப்போது இருப்பது போன்ற ஜிபிஎஸ் வசதிகள் எல்லாம் இல்லையே!

தோழியின் கணவர் சாலையில் ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக்கொண் டிருக்க, பயத்தில் நடுங்கிப்போன சந்திரா, ‘ஐய்யய்யோ... சின்னக் குழந்தைகளை வச்சுக் கிட்டு நடுக்காட்டில் மாட்டிட்டோமே. நகை நட்டெல்லாம் வேற போட்டிருக்கோம். இப்ப என்ன பண்றது...' என்று கலங்கியவர் `ராக வேந்திரா... ராகவேந்திரா...’ என்று தொடர்ந்து பிரார்த்தித்தபடியே இருந்தாராம்.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இவர்களருகே வந்து நின்றது. முதியவர் ஒருவர் ஓட்டிவர, ஓர் இளைஞர் பின்னால் அமர்ந்திருந்தாராம். முதியவர் வேஷ்டிமட்டும் கட்டி, மேல்சட்டை இல்லாமல் துண்டு போர்த்தியிருந்தாராம். ராகவேந்திர பக்தர்கள் இடும் சந்தனக் கீற்று அவர் நெற்றியில்.

அவர் என் தோழியின் கணவரிடம், “எங்கே போறீங்க. இப்படி குழந்தைக் குட்டியோட வந்து நின்னுட்டிருக்கீங்களே?” என்று கேட்க, சந்திராவின் கணவர் தங்களின் நிலையை விவரித்ததுடன் ``ஸ்டெப்னியும் சரியா இல்ல... எங்கே போய் யாரைக் கூப்பிடறதுன்னு தவிச்சுப்போய் நிக்கிறோம்” என்றாராம்.

உடனே அந்தப் பெரியவர், “கவலைப் படாதீங்க... இப்போதைக்கு இந்த ஸ்டெப் னியை மாட்டிட்டுக் கிளம்புங்க. கொஞ்ச தூரத்தில் கடை இருக்கு. அங்கே ஸ்டெப்னியைச் சரி பண்ணிக்கலாம்” என்று சொன்னதுடன், காரில் இருந்த ஸ்டெப்னியை மாட்ட உதவி யிருக்கிறார்.

பிறகு, “நீங்க வந்த ரோடு தப்பு. இப்படியே போய் ரைட்டில் திரும்பிக் கொஞ்ச தூரத்தில் லெஃப்டில் திரும்பி நேரா போனீங்கன்னா மந்திராலயம் போற ரோட்டைப் பிடிச்சிட லாம்” என்று கூறிவிட்டுக் கிளம்பினாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சுமி கடாட்சம்!

எந்த ஸ்டெப்னி வேலை செய்யாது என்று நினைத்தார்களோ அதையே மாட்டி, பெரிய வர் சொன்ன பாதை வழியே பயணித்து, ஒருவழியாக மந்திராலயத்தை அடைந்தவர் களுக்கு ஆனந்த அதிர்ச்சி!

‘மந்திராலயம் போய்ச் சேர இத்தனை மணி நேரம் ஆகும்னு எல்லாம் சொன்னாங்க… நாம ரொம்ப ஈஸியா வந்துட்ட மாதிரி இருக்கே... நல்ல காலம் அந்தப் பெரியவர் கடவுள் மாதிரி வந்து உதவி செய்தார்' என்று மனம் முழுக்க நிம்மதியுடன் மந்திராலய மகா னைத் தரிசித்து, பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றி முடித்தனர்.

அதேநேரம், கோயிலில் முன்பு பூஜை செய்த பெரியவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரை நமஸ்காரம் செய்துவிட்டு வரலாம் என்று அவர் அருகே சென்றனர்.

இவர்களைப் பார்த்துப் புன்னகைத்த பெரியவர், “வழியில் மாட்டிக்கிட்டீங்களா? வழி சொல்லி, சீக்கிரமா வரவச்சாரா அந்த ராயரு!' என்று கேட்க, தூக்கிவாரிப் போட்ட தாம் தோழிக்கும் அவள் கணவருக்கும். ‘வந்தது ராயரா... அந்த மந்திராலய மகானா...’ என்று சிலிர்த்துப்போய் பேச்சற்று நின்றார் களாம். இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனாள் சந்திரா.

நம் கையில் எதுவுமே இல்லை. இறைவனை நினைத்துக்கொண்டு, அவன் மேல் பாரத்தைப் போட்டு நாம் போய்க்கொண்டே இருந்தால், தானாகவே பல விஷயங்கள் நடக்கும். எனக் கும் இதுபோல் பல அனுபவங்கள் நடந்தது உண்டு.

1982 – 83ல் ‘டோனி’ என்று ஒரு கன்னடப் படம். கர்நாடக மாநிலத்தில் முருடேஸ்வரர் கோயிலுக்கு கொஞ்சம் முன்னே ஷூட்டிங் நடந்தது. அங்கேயும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது.

உடுப்பி தொடங்கி கார்வார் வரை நீங்கள் பார்த்தால், அந்த ‘பெல்ட்’ முழு வதுமே கோயில்கள், சிவ ஸ்தலங்கள் என்று அந்தக் கடற்கரையே மிக அழகாக இருக்கும்.

நான் குறிப்பிட்ட கோயில் மிகச் சிறியதோர் ஈஸ்வரன் கோயில். அங்கே விசேஷம் என்ன வென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமர் 70 அடிக்கு மேலேதான் ஊர், சாலை, கோயில் எல்லாமே! கடலை ஒட்டிய ஊரின் விளிம்பில் இந்தக் கோயில் இருக்கும்.

ஒரு நாளில், இரு முறை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கடல் அலைகள் 70 அடிக்கு மேல் உயர்ந்து வந்து, சுவாமி விக்ரகத்தை அபிஷே கம் செய்துவிட்டுப் போகும் என்பது அந்தக் கோயிலின் சிறப்பு. இன்றும் அவ்வூர் மக்கள் கொண்டாடும் விசேஷ நிகழ்வு அது.

அக்கோயிலின் அருகேதான் நாங்கள் ஷூட் செய்தோம். கீழே இறங்கிப் போய், கடலலைகள் வரும் இடத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

அப்போது அங்கே வந்த ஊர்க்காரர்கள் சிலர், “சாயந்திரம் இந்த நேரத்துக்கு நீங்க இங்கே இருக்காதீங்க. 60- 70 அடி அளவுக்கு அலைகள் எழும்பி வந்து சுவாமியைக் குளிப்பாட்டிட்டுப் போகும்போது, இங்கே ஒரு துரும்புகூட இருக்காது. பாறையே இருந்தாலும் அடிச்சிக்கிட்டுப் போயிடும். தயவுசெஞ்சு மேல வந்திடுங்க!” என்று பல முறை எச்சரித்தனர்.

நமக்குத்தான் படப்பிடிப்பு என்றாலே சில சோதனைகள் வந்துவிடுமே. சூரிய வெளிச்சம் போவதற்குள் சில காட்சிகளையாவது முடிக்க நினைத்த இயக்குநர், ஷூட்டைத் தொடர்ந்து நடத்தினார்.

ஊர்க்காரர்களோ, ‘வந்திருங்க, வந்திருங்க..’ என்று அபாய எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

அப்போது ஒரு பாடல் காட்சி. அலையைத் திரும்பிப் பார்க்க வேண்டியது, ஒரு காட்சியை எடுக்க வேண்டியது. இப்படியே போய்க் கொண்டிருந்தது. நடனக் காட்சியில் எல்லோரும் மூழ்கிப் போயிருந்த வேளையில் திடீரென அந்தப் பேரிரைச்சல். அலையின் பெருஞ் சத்தம். திரும்பிப் பார்த்தால் அங்கே....

வாழ்வில் மறக்க முடியாத காட்சி அது!

- கடாட்சம் பெருகும்...