Published:Updated:

அனுமன் சொல்லும் பாடம்

அனுமன்
பிரீமியம் ஸ்டோரி
அனுமன்

மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

அனுமன் சொல்லும் பாடம்

மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
அனுமன்
பிரீமியம் ஸ்டோரி
அனுமன்

சகல வசதிகளும் வாய்ப்புகளும் பெருகிவிட்ட தற்காலச் சூழலில், நம் இளைய தலைமுறையினர் சந்திக்கவேண்டிய தடைகளும் இடையூறுகளும் அதிகம்தான். அத்தகைய அனைத்துப் பிரச்னைகளையும் இடையூறுகளையும் எதிர்கொண்டு, அதை விழுங்கிச் சீரணித்துவிடும் மனோ வலிமை தற்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை.

பார்வையற்ற ஏழை ஒருவன் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டான். செய்வதறியாது கடவுளை வழிபட்டான். கடவுள் அவன் முன் தோன்றினார். தனது விருப்பங்களைப் பட்டியலிட்டுக் கூற முற்பட்டான்.


கடவுள் இடைமறித்து, ‘என்னால் ஒரே ஒரு வரம் மட்டுமே தர இயலும். ஆராய்ந்து உன் விருப்பத்தைக் கூறு!’ என்றார்.

‘தங்கத் தொட்டிலில் என் கொள்ளுப் பேரனை வைத்து, உறவினர்கள் புடைசூழ தாலாட்டும் நிகழ்ச்சியை நான் என் இரு கண்களால் பார்த்து மகிழவேண்டும்!’ என்று வேண்டினான். வேண்டுதல் பலிக்க வரம் தந்தார் கடவுள். அவனுக்குக் கண் பார்வை கிடைத்தது; ஏழ்மை அகன்றது; ஆயுள் நீண்டது; வம்சம் தழைத்தது; நான்காவது தலைமுறையைப் பார்க்க முடிந்தது. இத்தனையையும் அந்த ஒரு வரத்தில் அடக்கிவிட்டது அவன் மனம்.

ஆம், கிடைத்த அரிய வாய்ப்பைப் பயனுள்ளதாகச் செய்யும் திறன் மனதுக்கு இருக்க வேண்டும். மனோவலிமைக்கு சிறந்த உதாரணப் புருஷர் ஆஞ்சநேயர்.

`சீதை இருக்கும் இடத்தைத் தெரிந்து வரவேண்டும்!’ - இது சுக்ரீவனின் கட்டளை. கட்டளையை நிறைவேற்ற வானரப் படை கிளம்பியது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே கடற்கரையை அடைந்தது வானரப் படை. நிறைவேற்றாமல் திரும்புவது இயலாத ஒன்று. அதை ‘சுக்ரீவாக்ஞை’ என்று பெருமையாகச் சொல்வார்கள். வானரப் படை உயிரை மாய்த்துக் கொள்ளத் தயார் ஆனது.

அனுமன்
அனுமன்இந்நிலையில், ஜாம்பவான் ஆஞ்சநேயரை அறிவுறுத்தினார்.

``இங்கு தென்படவில்லை என்பதால், இதோடு தேடுதல் முடிவடையவில்லையே! கடல் கடந்து தேடலாம் அல்லவா? கடல் கடந்து தேட உனக்குத் தகுதியுண்டு. அதைப் பயன் படுத்தும் தருணம் இதுவல்லவா? அத்தனை வானரப் படையையும் உன்னால் காப்பாற்ற முடியும்’’ என்று சொல்லி, அனுமனைச் செயலில் இறங்கவைத்தார் ஜாம்பவான்.

சீதையைத் தேடுவதற்கு எந்த விதத் தடயமும் ஆஞ்சநேயருக்கு அளிக்கப்படவில்லை. அவர் சீதையைப் பார்த்ததும் இல்லை. கடலுக்கப்பால் இருக்கும் இடங்களிலும் அவருக்குப் பரிச்சயமில்லை. அப்படியிருந்தும் கட்டளையை நிறைவேற்றி, வெற்றி கண்டது ஆஞ்சநேயர் மனம்.

பயமில்லாமல் இருக்க வேண் டும். பலமாக இருக்க வேண்டும். சிந்தனைத் திறனும் சேர்ந்து இருக்க வேண்டும். இவற்றோடு இணைந்த மனம் இலக்கை எட்டிவிடும் என்ற படிப்பினையை அனுமாரின் செயல்பாடு உணர்த்துகிறது. பிறப்பில் மனித இனத்தின் முற்பிறவி, செயலில் மனித இனத்தின் தகுதியையும் மிஞ்சி விட்டார்.

சிங்கத்தின் பிடியில் மாட்டிக் கொண்ட மான், மீண்டு வந்ததாகச் சரித்திரம் இல்லை. அரக்கர்கள் பிடியில் மாட்டிக் கொண்ட ஆஞ்சநேயர் மீண்டு வந்ததாகச் சரித்திரம் உண்டு. அவரை அரக்கனிடமிருந்து விடுபட வைத்தது அவரது மனோ பலம். முனிவர்களைப் போல் தபோ வலிமையோ, அரசர்களைப் போல் படை வலிமையோ, வீரர்களைப் போல் ஆயுத வலிமையோ அவரிடம் எதிர்த்துப் போராட இருக்கவில்லை என்பது கவனத்துக்கு உரியது. இவற்றையெல்லாம் மீறிய வலிமை மனதுக்கு உண்டு என்று நடத்திக்காட்டியவர் அனுமான்.

உறுதியான மனம் சூழ்நிலையைப் புறக்கணித்து இலக்கை நோக்கிப் பாய்ந்து விடும். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று, அதன் துணையோடு சிந்தனையைச் செயல்படுத்தினார் ஆஞ்சநேயர்!

இன்றைய நம் இளைய தலைமுறையினருக்கும் நம்பகமான வழிகாட்டி அவர்களது பலம் பொருந்திய மனம்தான். நம் சாஸ்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் தரும் நல்லுரைகள் யாவும் அத்தகைய மனோவலிமையைத் தரவல்லவை.

நமக்குத் தேவை இந்த ஞானநூல்களின் மீதான நம்பிக்கையும் நாட்டமும்தான்.

சாயிபாபா
சாயிபாபா

எல்லா உயிர்களிலும் என்னைக் காணுங்கள்!’

உங்களது பெயரையும், வடிவத்தையும் நீக்கிவிட்டால், உள்ளே உணர்வு நிலை காணப்படும். இந்த உணர்வு நிலை உங்களிடத்தும், அனைத்து உயிர்களிடத்தும் நிலைபெற்றுள்ளது. அது நானேயாகும். இதைப் புரிந்து கொண்டு உங்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் என்னைக் காண முயலுங்கள். இந்தப் பயிற்சியின் மூலம் என்னுடன் ஒன்றாகும் நிலையை அடைய முடியும்!’’

- ஷீர்டி சாயிபாபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism