Published:Updated:

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கெட்டவர்கள் ஓஹோவென வாழ்வதும் ஏன்? - அதிகாலை சுபவேளை

வேல் வழிபாடு - அதிகாலை சுபவேளை
வேல் வழிபாடு - அதிகாலை சுபவேளை

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கெட்டவர்கள் ஓஹோவென வாழ்வதும் ஏன்? - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

16. 6. 21 ஆனி 2 புதன்கிழமை

திதி: சஷ்டி இரவு 7.33 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: மகம் இரவு 7.28 வரை பிறகு பூரம்

யோகம்: சித்தயோகம் இரவு 7.28 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

சந்திராஷ்டமம்: உத்திராடம் இரவு 7.28 வரை பிறகு திருவோணம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

இன்று: சஷ்டி விரதம்

நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கெட்டவர்கள் ஓஹோவென வாழ்வதும் ஏன்?

பொதுவாகவே நம்மில் பலருக்கும் சலிப்பு ஒன்று உண்டு. அது, ‘நல்லவர்கள் கஷ்டபடுகிறார்கள். ஆனால் அநியாய அக்கிரமம் செய்பவர்கள் ஓஹோவென வாழ்கிறார்கள்’ என்பதுதான். சமூகத்தை உற்று நோக்கினால் அந்த சலிப்பில் உண்மை என்பது இல்லாமல் இல்லை. நல்லவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். கடுமையாக உழைப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் தீய வழிகளைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் எளிதாக முன்னேறி வசதியாகவும் பெயர் புகழோடும் வாழ்வார்கள். வாழ்வில் இந்த முரண் ஏன் நிகழ்கிறது? இதுகுறித்து உளவியலும் ஆன்மிகமும் சொல்லும் விளக்கம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

உற்சாகம் : மனதில் உற்சாகமும் உடலில் சுறுசுறுப்பும் நிறைந்த நாள். தாய்வழி உறவுகள் தேடி வந்து உதவுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ரிஷபம்

குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். என்றாலும் செயல்கள் அனுகூலமாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். - எல்லாம் நன்மைக்கே!

மிதுனம்

நற்செய்தி : குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துப் போவார்கள். எதிர்பாராத பணவரவும் உண்டு. நற்செய்திகளும் தேடிவரும். - என் ஜாய் தி டே!

கடகம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவை. செலவுகள் அதிகரிப்பதால் கவலைப் படுவீர்கள். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

சிம்மம்

வெற்றி : செயல்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மனதளவிலிருந்த தொல்லைகள் நீங்குவதோடு நன்மையும் பணவரவும் உண்டாகும். - வெற்றிக்கொடிகட்டு!

கன்னி

அலைச்சல் : தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உறவினர்களோடு பேசும்போது பொறுமை அவசியம். பணவரவு உண்டு - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

துலாம்

நன்மை : சில குழப்பங்கள் இருந்தாலும் பிற்பகலுக்கு மேல் சரியாகிவிடும். வெளியே செல்லும்போது தக்க பாதுகாப்பு தேவை. செயல்கள் அனுகூலமாக முடியும். - நாள் நல்ல நாள்!

விருச்சிகம்

செலவு : எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கவும் நேரலாம். முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் செயல்கள் அனுகூலமாகும். - சிக்கனம் தேவை இக்கணம்!

தனுசு:

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். சிக்கல்களை சாதுர்யமாகச் செயல்பட்டு சமாளிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். - ஆல் இஸ் வெல்!

மகரம் -

நிதானம் : செயல்களில் நிதானம் தேவை. தேவையற்றவற்றைச் சிந்திக்க வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். சகோதர உறவுகளால் சிறு சங்கடம் உண்டாகும். - டேக் கேர் ப்ளீஸ்!

கும்பம்

ஆதாயம் : பிற்பகலுக்கு மேல் முயற்சிகள் சாதகமாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவும் உண்டு. - ஜாலி டே!

மீனம்

அனுகூலம் : வழக்கமான வேலைகளை கவனத்துடன் செய்துவாருங்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்கள் அனுகூலமாக முடியும். - ஆல் தி பெஸ்ட்!

அடுத்த கட்டுரைக்கு