காவடிப் பிரார்த்தனை என்றதுமே நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமானே. ஒரு திருத்தலத்தில், பிரார்த்தனையின் பொருட்டு ஐயனாருக்குக் காவடி எடுத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். அது எந்தத் தலம் தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் உள்ள மாந்தை எனும் கிராமம்தான் அது. பரம்பொருளின் சாந்நித்தியம் நிறைந்து திகழும் திருப்பாம்புரம், திருச்சிறுகுடி ஆகிய தலங்களுக்கு வடக்கிலும் திருநல்லம் எனும் கோனேரிராஜபுரத்துக்குக் கிழக்கிலும், நடன காவிரி எனப் போற்றப்படும் நட்டாற்றுக்குத் தெற்கிலுமாக அமைந்துள்ளது இவ்வூர். இங்கே ஶ்ரீபூர்ணா, புஷ்கலாம்பா சமேதராக இவ்வூரைக் காக் கும் தெய்வமாகக் கோயில் கொண்டுள்ளார் ஶ்ரீஹரிகர புத்ர ஐயனார்.

பிராமணர்களில் 18 பட்டி வாத்திமா பிரிவினரின் குல தெய்வமாக விளங்குகிறார் இந்த ஐயனார். இவர்களின் குடும்பத் தில் சுப வைபவங்கள் எது நடந்தாலும், முன்னதாக இந்த ஐயனாருக்குக் காவடி எடுத்து, அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

இந்தக் காவடி முற்றிலும் வேறு பட்டதாக இருக்கும். தென்னை ஓலை மற்றும் வாழைமர பட்டைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட காவடியைத் தயாரிப்பார்கள்.

மாந்தை அக்ரஹாரத்திலுள்ள விநாயகர் கோயிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரமுள்ள ஐயனார் கோயிலுக்கு அந்தக் காவடியைச் சுமந்து வருவார்கள். காவடிக்கு வழிநெடுக சாம்பிராணி புகை போட்டபடி, மேள தாளங்கள், வாணவெடிகள் முழங்க ஊர்வலமாக வருவார்கள். காவடியின் இரண்டு பக்கமும் பால் சொம்புகள் கட்டப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு ஐயனாருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு, பிரார்த்தித்துக் கொள்வார்களாம். இந்தத் திருக்கோயிலின் அர்ச்சகரான நாக.சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் வந்து வழிபடும் ஐயனாராக இவர் விளங்குகிறார். மிகவும் சாந்நித்தியம் கொண்டவர் இவர். ஆவணி மாதம் நல்லதொரு நாளில் கோலாகலமாக வீதியுலா நடைபெறும். ஐயனாருக்கு வெண்பூசணி பலி கொடுத்து, அர்ச்சனை செய்து வணங்குவோம். அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா கோலாகலமாக நடைபெறும்.

சுற்றுவட்டார ஊர்களிலிருந்து மக்கள் திரளாக வந்து கலந்துகொள்வார்கள். அன்றைய நாளில் ஐயனாரை வணங்கி வேண்டுவோர்க்கு, அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பூர்த்தியாகி நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

வீதியுலா நிறைவுற்றதும் ஐயனார் விநாயகர் கோயிலில் எழுந்தருள்வார். முன்பெல்லாம் திருப்பாம்புரத்திலிருந்து வந்து களியாட்டம் நடத்தி, பள்ளு பாடி, தாரை தப்பட்டை முழங்க விடையாற்றி நடத்துவார்கள்.

விவசாயம் செழிக்க இந்த ஐயனாரை வழிபடுவார்கள். இவரை வணங்கியபிறகே தங்கள் நிலங்களில் விவசாயப் பணிகளை ஆரம்பிக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

ஐயனாரை வணங்கி அவரின் விபூதியை அணிந்தால், சகல வியாதிகளும் தீரும் என்பதும் இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. மருத்துவர்களாலும் கைவிடப் பட்ட அன்பர்கள் பலரும் இங்கே வந்து ஐயனாரைச் சரணடைந்து விபூதிபெற்றுச் செல்கிறார்கள்.

விரைவில் நோயின் பாதிப்பு குறைந்துவிட, பெரும் மகிழ்ச்சியோடு மீண்டும் வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கிறார்கள்'' என்று உள்ளம் நெகிழ, விளக்கினார் நாக.சுப்ரமணியம்.

ஐயனார் முன் உள்ள குதிரை சிலை அருகே நின்றுகொண்டு, இவர் சொல்லும் ஐயனாரின் அருள்வாக்குகள் அப்படியே பலிக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

``என் வாழ்க்கை ஐயனார் தந்த வரம் என்றே சொல் வேன். எவ்வித வசதியில்லாத நான் என் மகன், மகள் படிப்புக்காக ஐயனாரிடம் வேண்டிக்கொண்டேன். இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் அன்பர் ஒருவர் தன் பிரச்னையைச் சமர்ப்பித்து தீர்வு வேண்டினார். அவருக்கு ஐயனாரின் அருள்வாக்கைச் சொன்னேன்; அது பலித்தது. அதனால் மகிழ்ந்த அந்த அன்பர் என் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை ஏற்றுக் கொண்டார். இன்று இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் ஐயனாரின் திருவருளே'' என்கிறார் நாக.சுப்ரமணியம்.

நீங்களும் ஒருமுறை இந்த ஹரிஹரபுத்ர ஐயனாரை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; நாலும் நன்மைகள் நடக்க வாழ்வு செழிக்க அந்த ஐயனார் அருள்பாலிப்பார்!

ஹால் டிக்கெட் பிள்ளையார்

ஆனைமுகனை வணங்கினால், பரீட்சையில் வெற்றி மட்டுமின்றி, அதிக மதிப்பெண்களும் கிடைக்கும்' என்பது பெரியோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிக்கிறார் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்.

தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுக் கோட்டையை அடுத்துள்ள ஊர் பேராவூரணி. இங்கு குடி கொண்டிருக்கும் ஶ்ரீநீலகண்ட பிள்ளையார், இந்தப் பகுதி மாணவர்களின் கண்கண்ட தெய்வம்!

பொதுத் தேர்வு காலத்தில், `ஹால் டிக்கெட்'டை இவரின் திருவடி யில் வைத்து வணங்கி எடுத்துச் செல்வதால், இவரை `ஹால் டிக்கெட் பிள்ளையார்' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

இவருக்கு அருகம்புல் சார்த்தி, 'பாலும் தெளிதேனும்' பாடலைப் பாடி, தேர்வு எண் (ஹால் டிக்கெட்), பேனா ஆகியவற்றை திருப்பாதத்தில் வைத்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட, தேர்வில் வெற்றி உறுதி என்பது நம்பிக்கை!

- மு.வேணு, சேலம்