Published:Updated:

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

மஞ்சமாதா கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சமாதா கோயில்

`ஐயப்ப' தகவல்கள்: அரவிந்த் சுப்ரமணியம்

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

`ஐயப்ப' தகவல்கள்: அரவிந்த் சுப்ரமணியம்

Published:Updated:
மஞ்சமாதா கோயில்
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சமாதா கோயில்

ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்?

ஐயப்பனின் கால்களில் காணப்படுவது கட்டு அல்ல; யோகப் பட்டம். ஐயப்பன் யோக நிலையில் இருப்பதால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள பட்டம் யோகப் பட்டம் எனப்படும். இதே மாதிரியான யோகப் பட்டத்தை, நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும்.

பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராணம் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன. அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோவில், ஆரியங்காவு ஆலயங்களில் காணலாம். சபரிமலையில், யோக நிலையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் முகமாக உள்ளார். ஏனென்றால், அது மகா யோக பீடம். பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதனால்தான் யோகப் பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலை `ஹரிவராசனம்' எனப்படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த யோக நிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப் பட்டம் பயன்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3-ம் முறை யாத்திரையில் மணி எடுத்துச் செல்வது அவசியமா?

முன்பே சொன்னதுபோல இதுவும் பல வகை காரணங்களுக்காக செய்யப்படும் தேசாச்சாரமே. சில கோயில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு. இந்த நம்பிக்கை சபரிமலையைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமானது.

மூன்றாவது யாத்திரை மிக புனித மாகக் கருதப்படுவதற்குக் காரணம், அப்போதுதான் ஒரு மனிதன் முழு நிலை அடைகிறான். தெய்வத்தின் கருணை இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் தன்னுடய மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்ய முடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையைக் காண்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

நமது மனதை ஆளும் கடவுள் சந்திரன். வளர்பிறை, தேய்பிறை போல, நமது மனமும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டிருக்கும். மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, பகவானை பொன்னம்பல மேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும்.ஆக, மூன்றாவது யாத்திரை முக்கியமானது. பகவானின் அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே, ஒருவரால் சபரி மலைக்கு மூன்றாவது முறை செல்ல முடியும். அதேபோல் மூன்றாம் முறையாக சபரிக்குச் செல்பவர்களை மணிகண்டன், கொச்சு ஸ்வாமி என்று அழைப்பார்கள்.இது அந்தந்த குழுவினரைச் சார்ந்ததே தவிர, கட்டாயம் கிடையாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐயப்பன் என்ற திருநாமம் எதற்கு?

பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில் கழுத்தில் அழகான மணிகளுடனும் ஆபரணங்களுடனும் ஜனித்ததால், மணிகண்டன் என்று திருப்பெயர் அவருக்கு. சரி, `ஐயப்பன்' என்ற பெயர் ஏன் தெரியுமா?

சாஸ்தாவுக்கு `ஐயன்' என்ற பிரசித்தி பெற்ற பெயர் உண்டு. ஐயன் என்பதற்கு, `மிக உயர்ந்தவர்’ என்று பொருள். இந்த ஐயன் வார்த்தைக்குப் பின்னால் `ஆர்’ என்கிற பதத்தைச் சேர்த்து (ஐயன் + ஆர்) ஐயனார் என்று தமிழ்நாட்டிலும் `அப்பன்’ என்ற பதத்தைச் சேர்த்து (ஐயன் + அப்பன்) ஐயப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.

மகா சாஸ்தா தியானம்

சாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா

ஸம்ரக்ஷணே தீக்ஷிதம்

த்ராதாரம் ஸகலாத்பயாத்

ஹரிஹரப்ரேமாஸ்பதம் சாச்வதம்

கந்தாரம் நிசிரக்ஷணாய

கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்

ப்ரத்யக்ஷம்து கலெள

த்ரியம்பகபுராதீஸம் பஜே பூதயே

கருத்து: உலகங்களைக் காப்பவரும், தன்னை வணங்கும் அடியார்களைக் காப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு-சிவன் ஆகிய இருவரது அன்புக்குப் பாத்திரமானவரும், அழிவற்றவரும், யானையின் மீது அமர்ந்தவரும், விரைவில் நன்மைகளை அளிப்பவரும், கலியில் கண்கண்ட கடவுளும், எருத்தமலை க்ஷேத்திரத்துக்கு ஈஸ்வரனுமான மகா சாஸ்தாவைப் பூஜிக்கிறேன். இந்த தியான சுலோகத்தைப் படிப்பதால் சத்ரு பயம், ரோகம், மனக் கவலை, சனி மற்றும் ராகு தோஷங்கள் நீங்கும்.

ஸ்வாமி ஐயப்பன்
ஸ்வாமி ஐயப்பன்

ஐயப்பமார்கள் சிராத்த காரியங்கள் செய்யலாமா?

சிராத்தங்களோ, தர்ப்பணங்களோ செய்வது நமது கர்மாவாகும். அதில் எந்தவிதமான இரண்டாவது கருத்துக்கும் இடமே இல்லை. ஒருவருடைய பிறந்த நாள், நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப் படுகின்றது. காரியங்களோ குறிப்பிட்ட திதியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு மாதத்தில் இரு நட்சத்திரங்கள் இருந்தால், அதில் இரண்டாவது நட்சத்திரத்தை பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றோம். ஆனால், காரியங்கள் செய்யும்போது அதை தள்ளிப்போடக்கூடாதென்ற காரணத்தினால் முதலாவதாக வருகின்ற திதியே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பகவான் ராமர், தனது தகப்பனார் தசரத மகாராஜாவுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பம்பா நதியும் கங்கைக்கு இணையான புனித நதியாக கருதப்படுவதால், பம்பா நதிக்கரையில், நிறைய பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்வதை நாம் கண்டுள்ளோம். அவர்கள் மாலையணிந்து கொண்டு செய்யவில்லையா என்ன?

எனவே, மாலையணிந்து கொண்டு சிராத்தங்கள் செய்வது என்பதில் எந்தத் தவறும் இல்லை. சபரி யாத்திரை விரதத்தின்போது இடையில் வரும் சிராத்தத்துக்காக மாலை அணிதலை பக்தர்கள் தள்ளிப்போட்டிருந்தால், இனி அவ்வாறு செய்யத் தேவையேயில்லை. ஏனெனில், முறையாக கர்மாக்கள் செய்பவரைக் கண்டு பகவானும் மகிழ்ச்சியே அடைவார்.

ஸ்வாமி ஐயப்பனை தர்ம சாஸ்தா என அழைப்பது ஏன்?

தர்மஸ்ய சாசனம் கரோதி

இதி தர்ம சாஸ்தா:

`சாஸ்தா' என்ற வார்த்தைக்கு உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர், தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம்.

முருகப்பெருமானை `பிரம்ம சாஸ்தா' என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளையிட்டவர். வீரபத்ரரை `தக்ஷ சாஸ்தா’ என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார். ஹரிஹர புத்திரனை `தர்ம சாஸ்தா' என்று அழைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகிறார்.

தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். `தர்மம் சர’ என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஒருவன் எப்போது தர்மத்தை நிலைநாட்டுகின்றானோ, அப்போது எல்லா நல்ல செயல்களும் தானாக நடக்கும். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில் இதைத்தான், `எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலைநாட்டுவேன்' என்று சொல்கிறார். இந்த தர்மத்தால்தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது.

ஸ்வாமி ஐயப்பன்
ஸ்வாமி ஐயப்பன்
ஓவியம் : கே.ரித்தேஷ்

ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டு கின்றானோ அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்விகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்விகத்தின் பிரதிநிதி யாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை, `தர்ம சாஸ்தா' என்று அழைக்கிறோம்.

சபரிமலை நடை திறப்பு...

சபரிமலை, ஒரு மகா யோகபீடம். அங்கே, பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். புராணப்படி, அவரைச் சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலத் தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. அந்த நாளில், பகவான் யோக நிலையில் இருந்து வெளிவந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதிகம் உண்டு.

ஆண்டுகள் கடந்தன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. கோயில் நிர்வாகிகள் பகவானிடம் தேவ பிரச்னம் கேட்டு உத்தரவு பெற்று, 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள், அதன்பின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, இப்போது மாதம் ஒருமுறை என்று கோயில் திறக்கப்பட்டு வருகிறது.

சபரிமலையில் ஐயப்ப தரிசனம்... ஒரு வருடத்தில் பக்தர்களுக்கு 120+ நாள்கள்; மீதம் உள்ள நாள்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல்லும் கருத்து.

மஞ்சமாதா கோயிலில் தேங்காய் உருட்டுவது ஏன்?

மஞ்சமாதா கோயில்
மஞ்சமாதா கோயில்

இதற்குப் பின்னால் எவ்விதமான சாஸ்திரங்களோ, சம்பிரதாயங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இது தேசாச்சாரமாக – நாளடைவில் யாரோ ஆரம்பித்து, அந்த இடத்தில் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை.

சமீபகாலமாக பன்னீரில் கையை நனைத்து, அதை விபூதியில் தொட்டு கொச்சு கடுத்தன் சந்நிதான சுவரில் பதிக்கும் வழக்கம் உண்டாகி வருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism