Published:Updated:

கலக்கம் தீர்ப்பார் கணபதி!

கணபதி
பிரீமியம் ஸ்டோரி
கணபதி

சரணம் கணேசா

கலக்கம் தீர்ப்பார் கணபதி!

சரணம் கணேசா

Published:Updated:
கணபதி
பிரீமியம் ஸ்டோரி
கணபதி

மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் தோன்றிய அசுரன் கஜ முகன். அவன் அசுரர்களின் குருவாகிய சுக்ராசார்யரின் உபதேசத்தின்படி சிவபெருமானை எண்ணி தவம் இயற்றி, ஆயுதங்களால் அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். தனது வரத்தின் பலத்தினால் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை. இந்திரன் திருக்கயிலைக்குச் சென்று பிள்ளையாரிடம் முறையிட்டான். தேவர்களின் துன்பங்களைத் தீர்க்க திருவுளம் கொண்டார் விநாயகர்.

ஆகவே, கணங்களும் படை பரிவாரங்களும் சூழ, கஜமுகாசுரனுடன் போருக்குச் சென்றார். அசுரன் பல அஸ்திரங்களை விநாயகர் மீது ஏவினான். அவற்றை எல்லாம் தன் திருக்கரத்தில் இருந்த உலக்கையால் முறியடித்து வீழ்த்தியபடி, அசுரனை நெருங்கிய விநாயகர், அதே உலக்கையால் அவனது மார்பில் ஓங்கி அடித்தார். அப்போதும் அசுரன் மயங்கத்தான் செய்தானே தவிர, மடியவில்லை.

ஆயுதத்தால் அவனை அழிக்க முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் தன் தந்தத்தை உடைத்து, அவன் மீது ஏவினார். அசுரனோ, பெருச்சாளியாக உருவம் கொண்டு வந்தான். விநாயகர் அவனை ஆட்கொண்டு, தம்முடைய வாகனமாக அமர்த்திக் கொண்டார். இதுபற்றிய வேறொரு கதையும் உண்டு.

கலக்கம் தீர்ப்பார் கணபதி!

கஜாசுரன் ஒருமுறை விண்ணில் பறந்து சென்றபோது அங்கிருந்த அண்டச்சுவர் ஒன்றைக் கையால் இடித்துத் தள்ளினான். உடனே ஆகாய கங்கை உடைத்துக் கொண்டது. அதனால், உலகமே நீரில் மூழ்கியது. எங்கும் ஜலப் பிரளயம். தேவர்கள் கலங்கினர். அப்போது பூலோகத்தில் ஓர் இடம் மட்டும் மூழ்காமல் இருந்தது. எல்லோரும் அங்கு வந்து பார்த்தபோது, விநாயகர் வீற்றிருந்தார். தேவர்கள் அவரைப் பிரார்த்தித்தனர். உடனே, விநாயகர் தன் தும்பிக்கையால் பிரளய நீரை உறிஞ்சிவிட்டு, ஆகாச கங்கையின் அண்டச் சுவரையும் காத்து அருளினார்.

பின்னர் கஜாசுரனுடன் போரிட்டு, தோற்கடித்து அவனை மூஷிக வாகனமாகக் கொண்டார். அன்று முதல் அவர் ‘கலக்கம் தீர்த்த விநாயகர்’ எனப்பட்டார். அதன் பின், கஜாசுரனுக்கு செய்து வந்த தோப்புக்கரணம், நெற்றியில் குட்டிக்கொள்தல் ஆகியவற்றை விநாயகருக்குச் செய்து அவர் அருள் பெற்றனர் தேவர்களும் பக்தர்களும். தஞ்சை மாவட்டம், ஆலங்குடி குரு பகவான் கோயிலில் கலக்கம் தீர்த்த விநாயகரை தரிசிக்கலாம்.

ஹேரம்ப கணபதி!

ஹேரம்ப கணபதி
ஹேரம்ப கணபதி


விநாயகரின் திருவடிவங்களில் ஹேரம்ப கணபதி வடிவமும் ஒன்று. நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய ஒருமுகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்வதால் பஞ்சமுக விநாயகர் என்றும் இவரை வழிபடுகிறார்கள்.

கிழக்கு முகம் - சூரிய அம்சம்; உடல் நலனுக்கும் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும். மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களைக் காக்கும். வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; ஜயம் தரும். தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம், குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும். மேல் நோக்கிய திருமுகம்- சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும் என்கிறார்கள்.

- சி.ராஜு, அஞ்சுகிராமம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism