Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

நாங்கள் நண்பர்கள் இணைந்து ஆலய விமானங்கள் குறித்த தகவல்களைப் படித்தும் சேகரித்தும் வருகிறோம். மதுரை கூடலழகர் கோயிலில் அமைந்திருப்பது அஷ்டாங்க விமானம். இதேபோல் வேறு எந்த தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

-கே.ராம்சுந்தர், திருச்சி-2

அன்னபூரணி மகிமைகள், துதிப்பாடல்கள் மற்றும் வழிபாட்டு நியதிகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட புத்தகம் ஏதேனும் உள்ளதா, எங்கு கிடைக்கும். எவரிட மேனும் இந்த வழிபாட்டு நூல் இருந்தால் நகல் எடுத்து அனுப்புங்களேன். புத்தகம் கிடைக்கும் முகவரியைப் பகிர்ந்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.

-தெ.நித்யா, திருநெல்வேலி

அகத்தீஸ்வர ஆலயங்கள் போன்று, புலத்தியர் வழிபட்ட சிவாலயங்கள் குறித்த விவரங்கள் தேவை. இதுபற்றி அறிந்தவர்கள் விவரம் பகிருங்களேன்.

-கி.சங்கரன், கோவில்பட்டி

விஸ்வகர்மாவை தேவ சிற்பியாகப் போற்றுகின்றன ஞானநூல்கள். அவருக்கென தனிக்கோயில் உண்டா அல்லது ஏதேனும் ஆலயத்தில் அவர் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் எனில், அதுபற்றிய விவரம் தேவை.

-என்.கணேசன், செங்கல்பட்டு

ரேணுகாதேவி அம்மன் வழிபாட்டுப் பாடல்கள் தேவை. படவேடு ரேணுகாதேவி ஆலயம் போன்று இந்த அம்மனுக்கு வேறு எங்கு தனிக் கோயில்கள் உள்ளன.

-பி.அரவிந்தன், தாழையுத்து

எனக்குச் சில புத்தகங்கள் தேவை. திரிபுரஸூந்தரி வேதபாத ஸ்தோத்திரம் தமிழில் ஸ்லோகமும் அதன் விளக்கமும் கூடிய தொகுப்புப் புத்தகம், கவி காளிதாசன் அருளிய குமாரசம்பவம் தமிழில் விளக்கத்துடன் கூடிய புத்தகம், சிவகவிமணி சி.கே.சுப்ரமணிய முதலியார் எழுதிய கருணாம்பிகை சதகம். இவை எங்கு கிடைக்கும். பழைய நூல்கள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன்.

-ஆர்.கிருஷ்ணன், சென்னை-44

பிள்ளையார்
பிள்ளையார்


பிள்ளையார் மேனியில் ஒன்பது கிரகங்கள்!

`யானை தந்த அலங்காரத்துடன் விநாயகர் காட்சி தரும் கோயில் கும்பகோணத்தில் எங்குள்ளது, எப்படிச் செல்வது?’ என்று மதுரை வாசகர் கே.அருண்குமார் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை தஞ்சை வாசகர் தி.வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.

கும்பகோணத்தில், காவிரி ஆற்றின் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், மடத்துத் தெருவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது பகவத் விநாயர் திருக்கோயில். விநாயகர் எட்டுகோடி அவதாரங்கள் எடுத்ததாகத் தகவல் உண்டு. அவற்றில் அடங்காத திருக்கோலம் பகவத் விநாயகர் கோலம் எனும் சிறப்பு உண்டு.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம். பிறகு அகண்ட காவிரி, தனது அகலத்தைக் குறைத்து ஓடத் தொடங்கியதாகச் சொல்வர். தற்போது இங்கே கோயில் தனியாகவும், பகவத் படித்துறை என்பது தனியாகவும் அமைந்துள்ளது.

பகவர் முனிவர் என்பவர் வழிபட்டு அருள்பெற்ற விநாயகர் இவர் என்பார்கள். காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச் செல்வாராம். 1952-ம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகா பெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் பகவத் விநாயகருக்கு அளித்து வழிபட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் பகவத் விநாயகருக்கு, அந்தத் தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

திருவுருவிலும் மிக விசேஷமானவர் இந்தப் பிள்ளையார். நெற்றியில் சூரியன், நாபியில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ் கையில் புதன், சிரசில் குரு, இடது கீழ் கையில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு மற்றும் இடது தொடையில் கேது என நவகிரங்கள் அனைத்தையும் தன் உடலிலேயே கொண்டு விளங்குகிறார். ஆகவே, இவரை ஒருமுறை தரிசித்தாலே போதும், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism