தொடர்கள்
Published:Updated:

அனுமனுக்கு 60,000 லட்டு!

அனுமன் ஜயந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமன் ஜயந்தி

அனுமன் ஜயந்தி! மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது மகாவீர ஆஞ்ச நேயர் திருக்கோயில். இந்த ஆலயத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு சுவாமி வடக்கு முகமாக அருள்பாலிக்கிறார்.

அனுமன் ஜயந்தி
அனுமன் ஜயந்தி

பொதுவாக வடதிசை நோக்கிய ஆஞ்சநேயர் சந்நிதி அபூர்வம். இப்படி வடக்கு நோக்கிய ஆஞ்சநேய சுவாமியை வணங்கினால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே சனி தோஷம் தீர வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயம் வந்து வீர ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கிறார்கள். இவர் தன் வாலை சுருட்டித் தலைக்கு மேலே கிரீடம் போல் வைத்துக் கொண்டு காட்சி அருள்வது, விசேஷ அம்சம்!

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்
மகாவீர ஆஞ்சநேயர்
மகாவீர ஆஞ்சநேயர்
மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

காரியத் தடை, வறுமை, கடன் ஆகிய பிரச்னைகளால் தவிப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் அந்தப் பிரச்னைகள் உடனே தீரும்; அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

இங்ஙனம் வரப்பிரசாதியாகத் திகழும் மகாவீர ஆஞ்சநேயர் திருக் கோயிலில் அனுமன் ஜயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அனுமனுக்குச் சமர்ப்பித்துப் பிரசாதமாக வழங்கும் வகையில் 60 ஆயிரம் லட்டுகள் தயாராயின. இந்தப் பணியில் ஆலயத்தைச் சேர்ந்த வார வழிபாட்டுக் குழுவினர் ஈடுபட்டனர். அனுமன் ரக்ஷை, செந்தூரம், துளசி ஆகியவற்றோடு லட்டும் பக்தர்களுக்கு அனுமனின் திவ்யப் பிரசாத மாக வழங்கப்பட்டன. நீங்களும் ஒருமுறை ஈரோடு மகாவீர அனுமனைத் தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்விலும் சகல மங்கலங்களும் பெருக வரம் தருவார் அந்த அஞ்சனை மைந்தன்; உங்கள் எதிர்காலம் தித்திக்கும்!