புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

காரிய ஸித்தி அளிக்கும் அனுமன் சுப்ரபாதம்

அனுமன் சுப்ரபாதம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமன் சுப்ரபாதம்

அனுமன் சுப்ரபாதம்

பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் வேளையில் ராமனைத் துதித்தால் உடனே ஓடிவந்து அபயம் அளிக்கும் காருண்ய மூர்த்தி அனுமன். ராமநாம ஜபத்தையே தன் மூச்சாகக்கொண்டு வாழும் அந்த சிரஞ்சீவியைத் துதித்தால் நமக்கு இடர்கள் ஏதும் நேராது என்பது அடியவர்கள் வாக்கு.

அனுமன் சுப்ரபாதம்
அனுமன் சுப்ரபாதம்

அனுமனைத் துதிக்கப் பல்வேறு துதிகள், ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது அனுமன் சுப்ரபாதம். சதா ராம தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அனுமனைப் போற்றி அதிகாலையில் வியந்து பாடும் உத்திஷ்ட பாடலே அனுமன் சுப்ரபாதம்.

அனுமன் ஸ்தோத்திர பிரியர். அதுவும் ராமநாமமே தாரக மந்திரம் என்று இருப்பவர். ஈஸ்வரனின் அம்சமும் அவரே. அப்படிப்பட்ட அனுமனை அதிகாலையில் வணங்கி அவருக்குரிய சுப்ரபாதத்தைப் பாடி ஒரு நாளை தொடங்கினால் ராமரின் அருளும் ஈசனின் பேரருளும் இணைந்து அந்த நாளை இனிமையானதாக மாற்றும் என்கிறார்கள் பெரியோர்கள்.

ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த சுப்ரபாதத்தை தினமும் காலையில் சொல்லித் துதிக்கலாம். சனிக்கிழமைகளில் சொல்லி வழிபடுவது விசேஷ பலனைத் தரும். அனுமன் சுப்ரபாதம் சொல்லி வழிபடுபவர்களுக்கு எதிரிகளை வெல்லும் வல்லமை கூடும். தினமும் முழு ஸ்லோகமும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் கீழ்க்காணும் இரண்டு வரிகளையாவது சொல்லித் துதிப்பது நல்லது.

`அஞ்சனா சுப்ரஜா வீரா பூர்வா சந்த்யா ப்ரபத்ததே |

உத்திஷ்ட மாருதி கர்த்தவ்யம் தெய்வ மாஹ்நிகம் ||