Published:Updated:

வழிபாடு... தூய்மை... தீபம்!

தீப வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
தீப வழிபாடு

தீப வழிபாடு துதிப்பாடல்

வழிபாடு... தூய்மை... தீபம்!

தீப வழிபாடு துதிப்பாடல்

Published:Updated:
தீப வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
தீப வழிபாடு

ஓம் அகிலம் காக்கும்

தீபம் போற்றி

ஓம் அடியேனைக் காப்பாய்

திருவே போற்றி

ஓம் அல்லல் நீக்கி

அருள்செய் போற்றி

ஓம் ஆகமம் ஆகி வந்த

ஒளியே போற்றி

ஓம் ஆகாரை (உருவுடையாள்) என வரும் சுடரே போற்றி

ஓம் ஆதவன் ஔிநிகர்

அருளே போற்றி

ஓம் இகபர சுகம்

அருள்வாய் போற்றி

ஓம் இன்னல் நீங்கிட

ஒளிர்வாய் போற்றி

ஓம் ஈகையாய் இருந்து

அருள்வாய் போற்றி

ஓம் ஈடேற்றி எம்மைக்

காப்பாய் போற்றி

ஓம் ஈடிலா ஈட்டம்* தந்தருள் போற்றி

ஓம் உற்ற துணை நீ சுடரே போற்றி

ஓம் உனதருள் வேண்டினேன் உடனருள் போற்றி

ஓம் ஊக்கம் தருவாய் தீபம் போற்றி

ஓம் ஊரெலாம் நாடும்

திருவே போற்றி

ஓம் எந்தனைக் காக்கும்

தெய்வம் போற்றி

ஓம் எண்ணம் ஈடேற

அருள்வாய் போற்றி

ஓம் ஏழ்மையை ஒழிப்பாய்

தேவி போற்றி

ஓம் ஏக்கம் தீர்த்து

அருள்வாய் போற்றி

ஓம் ஐமுகன் (சிவன்)

வடிவே போற்றி 20

ஓம் ஒட்டாரம் நீக்கியருள்

திருவே போற்றி

ஓம் ஒண்மையை* அளித்தருள் ஒளியே போற்றி

ஓம் ஓங்கிய செல்வமளி

சுடரே போற்றி

ஓம் ஔரசர் (குழந்தைகள்) நலம் பெற அருளும் ஒளி போற்றி

ஓம் ஔபாசன வடிவே

தேவி போற்றி

ஓம் ஔதாரியம் (மிகு கொடை) தந்தெமை ஆள்வாய் போற்றி

ஓம் கங்கணம் கட்டிக்

காப்பாய் போற்றி

ஓம் கஞ்சரன்(பிரம்மா)பணியும்

தேவி போற்றி

ஓம் கடன் இலா வாழ்வருள்

திருவே போற்றி

ஓம் கடை(தலை)வாசல் தனில் அருளும் சுடரே போற்றி

ஓம் காட்சி தந்தருளும்

தெய்வம் போற்றி

ஓம் காந்திமதி என ஔிரும்

தீபம் போற்றி

ஓம் கார்த்திகைச் சுடரே

விளக்கே போற்றி

ஓம் கிஞ்சனன் என் வறுமை தீர்

வாழ்வே போற்றி

ஓம் கிளையெலாம் நலம் பெற வைப்பாய் போற்றி

ஓம் கீணம் களைந்தருள்வாய் சுடரொளி போற்றி

ஓம் குவலயமெலாம் வீசும்

ஔியே போற்றி

ஓம் குன்றாத வாழ்வு அருள்வாய் போற்றி

ஓம் கெடுதலைச் செய்யும் வினை தீர்த்தருள் போற்றி

ஓம் கெழுமை (ஔி) நிறை தெய்வம் நீயே போற்றி 40

ஓம் கேடுகள் நீக்கி எமைக் காத்தருள் போற்றி

ஓம் கேள் எலாம் நலம்பெற அருள்வாய் போற்றி

ஓம் கைக்காணியாய் மனம் தந்தேன் காத்தருள் போற்றி

ஓம் கைதொழுது வழிபடுவேன்

வரமே போற்றி

ஓம் கொக்கரி பொழுதில்

ஒளிர்தீபம் போற்றி

ஓம் கொற்றவை வடிவே

அம்மா போற்றி

ஓம் கோகனத திருவே

செந்தாமரைச் செல்வி போற்றி

ஓம் கோணலை உடன்

தீர்ப்பாய் போற்றி

ஓம் கௌசலிகை (கொடை)

விரைந்தருளும் சுடரே போற்றி

ஓம் கௌரி உருவே ஒளியே போற்றி

ஓம் ஙனம்(வகை) இன்றி

உனைப் பணிந்தேன் போற்றி

ஓம் ஙனம் (தன்மை) இலா

எனக்கும் அருள்வாய் போற்றி

ஓம் சகோரம் என அலைபவர்க்கு

மழைத்துளியே போற்றி

ஓம் சங்கநிதித் தலைவன் (குபேரன்) பணிவான் போற்றி

ஓம் ஞஞ்ஞை (மயக்கம்) இன்றி

எனை ஆள்வாய் போற்றி

ஓம் ஞப்தி (தெளிந்த அறிவு) தந்து காத்தருள்வாய் போற்றி

ஓம் ஞானத்து இறைவி வடிவான

திருவே போற்றி

ஓம் தடையின்றி அருள்

செய்வாய் போற்றி

ஓம் தமியர்க்கு உனையன்றி

துணை வேறு யார் போற்றி

ஓம் தாவி ஔி வீசு படர்

ஜோதி போற்றி 60

ஓம் தா தா எனக் கேட்குமெனக்கு அருள்வாய் போற்றி

ஓம் நகர் (கோவில்-வீடு) தனில்

உறையும் தேவி போற்றி

ஓம் நந்தா விளக்காக

நலமருள்வாய் போற்றி

ஓம் நாகதீப (ஐந்து தலை விளக்கு) சுடராய் ஔிர் போற்றி

ஓம் நிதரிசனமாய் இருள் ஓட்டும் தேவி போற்றி

ஓம் நீலி எனப் பேர்படைத்த

நிமலை நீ போற்றி

ஓம் நுதற்கண்ணன் வடிவான

ஜோதி நீ போற்றி

ஓம் நூறி விடு (அழி) மன இருளை சுடரே போற்றி

ஓம் நெஞ்சிருந்து இடர் நீக்கு

திருவே போற்றி

ஓம் நேமிப்புள்(சக்கரவாகம்)

எனக்கு நீர் வார்ப்பாய் போற்றி

ஓம் நைவரல்(இரக்கம்) கொண்டு

எனை நையாமல் காத்திடு போற்றி

ஓம் நொய்யவன் (வறியவன்)துயர்தீர

செல்வம் வழங்கிடு போற்றி

ஓம் நோயின்மை தந்தெனைக்

காத்தருள் போற்றி

ஓம் நௌவியாய் (படகாக)

திகழ்ந்து காத்தருள் போற்றி

ஓம் பகவதியாம்

உனைப் பணிந்தேன் போற்றி

ஓம் பாசறை (துன்பம்) காணாது பகை நீக்கி அருள்வாய் போற்றி

ஓம் பிசங்க (பொன் கலந்த சிவப்பு) நிறத்தவளே பிணி நீக்கு போற்றி

ஓம் பீஜாட்சரம் சொல்லி

வழிபடுவோர் தெய்வம் நீ போற்றி 80

ஓம் புங்கவி(தெய்வப்பெண்)

ஆனவளே புகல் தருவாய் போற்றி

ஓம் பூதபதி (சிவன்) ஆனவளே

வாழ்வை மலரச்செய் போற்றி

ஓம் பூத பாவனன்(திருமால்ஆனவளே)

பூ(திரு)மகளே போற்றி

ஓம் பெருஞ்செல்வம் தந்தெனை

பேணும் தெய்வமே போற்றி

ஓம் பேறெலாம் அளித்தெனைப்

பெற்றவளாய்க் காப்பாய் போற்றி

ஓம் பைம்பூண்கள் பல தந்து

புன்வறுமை தீர்த்தாள்வாய் போற்றி

ஓம் பொச்சாப்பு (மறதி,பொல்லாங்கு போன்றன) நீக்கிடுவாய் தீபம் போற்றி

ஓம் போகும் திசை அறியேன் நான்

வழிகாட்டி அருள்வாய் போற்றி 100

ஓம் பௌமியவள் (சீதா) ஏற்றி

வைத்த விளக்குகளில் ஒளிர்பவளே

போற்றி

ஓம் மகவெலாம் நலம் பெற வை

மகிமை நிறைந்தவளே போற்றி

ஓம் மாடு(செல்வம்)பல தந்தருளும் மாதே உனைப் பணிவேன் போற்றி

ஓம் மீனாட்சி சந்நிதியில் ஒளிரும் அருள்சுடரே போற்றி

ஓம் முச்சுடராய் (சூரிய-சந்திர-அக்னி) ஔி வீசும் விளக்கே போற்றி

ஓம் மூலமாய் இருந்தாளும்

தீபம் ஜோதியே போற்றி

ஓம் மெய்க்கொண்டு (நம்பி) வழிபடும் எனைக் காப்பாய் போற்றி

ஓம் மேல் நோக்கி எந்நாளும் ஔிவீசும் சுடரே போற்றி போற்றி!