Published:Updated:

திருப்புகழ் பாடுவோம்!

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

அடியவர்கள் வாழ்வில் துயர்தீர்க்கும் அருமருந்தான திருப்புகழ் சிலவற்றை இங்கே காணலாம்.

திருப்புகழ் பாடுவோம்!

அடியவர்கள் வாழ்வில் துயர்தீர்க்கும் அருமருந்தான திருப்புகழ் சிலவற்றை இங்கே காணலாம்.

Published:Updated:
முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதியில் முருகக் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டாலும் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் விசேஷமானது. முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்த தீரத்தினை நிகழ்த்திக்காட்டும் அற்புதத் திருவிழா கந்த சஷ்டியின்போது நடைபெறும். கந்தனைத் துதிக்க பல்வேறு ஸ்தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவற்றுள் திருப்புகழ் மிகவும் முக்கியமானது. திருப்புகழின் பெருமையைக் கூறும்போது, ஞானம் பெறலாம், நலம் பெறலாம், வானுலகை ஆளும் வரம்பெறலாம், முக்தியைப் பெறலாம் என்று திருப்புகழின் நூற்பயன் குறிப்பிடுகிறது. அடியவர்கள் வாழ்வில் துயர்தீர்க்கும் அருமருந்தான திருப்புகழ் சிலவற்றை இங்கே காணலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முருகன்
முருகன்

பிணிகளைத் தீர்க்கும் தணிகை திருப்புகழ்

பிணிகளுள் பெரும்பிணி, பிறவிப் பிணி. அந்தப் பிறவிப்பிணிக்கே மருந்தாவான் தணிகைமலை வேலவன். அவனைப் போற்றும் திருப்புகழைப் பாட பிணிகள் நீங்கும் என்பது ஐதிகம். அதுவும் இப்பிறவியில் மட்டுமல்ல; இனி ஏழேழ் பிறவிகள் எடுத்தாலும் அந்தப் பிணிகள் நம்மைத் தொடராதாம்!

இருமல்உ ரோக முயலகன் வாதம்

எரிகுண நாசி விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை

எழுகள மாலை இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை

பெருவலி வேறு உளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத

படி உன தாள்கள் அருள்வாயே

வருமொரு கோடி அசுரர்ப தாதி

மடியஅ நேக இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட

வடிசுடர் வேலை விடுவோனே;

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு

தணிமலை மேவு பெருமாளே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வறுமை அகற்றும் அண்ணாமலை திருப்புகழ்

ருணையை நினைக்க முக்தி கிடைக்கும் என்பது பழமொழி. கனல் என்றால் நெருப்பு. கனல்மால்வரை என்றால் திருவண்ணாமலை. இந்த தலத்தில் உறையும் முருகப்பெருமான் கனல் வடிவானவன் மட்டுமல்லன்; கருணை வடிவானவனும்கூட. வானவரும் தொழும் அந்த வேலவனை வணங்க அருள் வளமும் பொருள் வளமும் பொங்கும். வறுமை போக்கும் அண்ணாமலை தலத்திருப்புகழைக் காலையும் மாலையும் சொல்லிவர செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிவமா துடனே அநுபோ கமதாய்

சிவஞா னமுதே பசியாறித்

திகழ்வோ டிருவோர் ஒருரூ பமதாய்

திசைலோ கமெலாம் அநுபோகி;

இவனே எனமா அயனோ டமரோர்

இளையோன் எனவே மறையோத

இறையோன் இடமாய் விளையா டுகவே

இயல்வே லுடன்மா அருள்வாயே

தவலோ கமெலா முறையோ எனவே

தழல்வேல் கொடுபோய் அசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா

தவம்வாழ் வுறவே விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்

கடனாம் எனவே அணைமார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவே

கனல்மால் வரைசேர் பெருமாளே.

முருகன்
முருகன்

மனக்கவலை தீர்க்கும் சிதம்பரம் திருப்புகழ்

றைவன் ஆனந்தக் கூத்தாடும் தலம் சிதம்பரம். கனக சபையில் ஆடும் அந்த ஆடல்வல்லானின் தரிசனம் அனைத்து வினைகளையும் போக்கும். இங்கு கோயில்கொண்டிருக்கும் முருகப் பெருமானோ அடியவர்கள் மனதுக்கு அமைதியை அருள்பவன். இங்கு கோயில் கொண்டுள்ள முருகக்கடவுளைப் பாட மனக் கவலைகள் மாறி மகிழ்ச்சி பிறக்கும் என்கிறார்அருணகிரியார். இதோ அந்த அற்புதத் திருப்புகழ் உங்களுக்காக...

நாடா பிறப்புமுடி யாதோ எனக்கருதி

நாயேன் அரற்றுமொழி வினையாயின்

நாதா திருச்சபையின் ஏறாது சித்தம்என

நாலா வகைக்குமுன தருள்பேசி;

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி

வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி

தோலா சனத்தியுமை அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த

தோழா கடப்பமலர் அணிவோனே;

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு

மேராள் குறத்திதிரு மணவாளா

ஈசா தனிப் புலிசை வாழ்வே சுரர்த்திரளை

ஈடேற வைத்தபுகழ் பெருமாளே.

திருமண வரமருளும் திருச்செந்தூர் திருப்புகழ்

க்தர் குறைதீர்க்க ஓடிவருபவன் திருச்செந்தூர் சண்முகன். இங்குதான் சூரசம்ஹாரம் நிகழ்ந்தது என்றாலும் இங்குள்ள இறைவன் ருத்திர அம்சமாக இல்லாமல் கருணை வடிவானவனாகவே காட்சிகொடுக்கிறார். சீரலைவாய்த்தலத்தில் வேண்டிக்கொள்ளும் யாவும் சீக்கிரம் நிறைவேறும். அந்த தலத்து இறைவனைப் போற்றி அருணகிரியார் பாடிய திருப்புகழைப் பாட திருமண வரம் கைகூடும். வள்ளிக்கு வாழ்வளித்து அருளிய பெருமான், வாழ்க்கைத் துணைவேண்டி, வேண்டும் எவர்க்கும் அருள்பவராகக் கோயில்கொண்டிருக்கிறார்.

நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே

நீவந்த வாழ்வை கண் டதனாலே

மால்கொண்ட பேதைக்குண் மணம்நாறும்

மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே

வீரங்கொள் சூராக்குன் குலகாலா

நாலந்த வேதத்தின் பொருளோனே

நான் என்று மார்தட்டும் பெருமாளே

முருகன்
முருகன்

மகப்பேறு அருளும் சுவாமிமலை திருப்புகழ்

சுவாமிமலையில் முருகன் தகப்பன் சாமியாய் எழுந்தருளி அருள்பாலிக்கிறான். தந்தையும் மகனும் தம் இடம்மாறி அமர்ந்தருளும் அருள் கோலம் கொஞ்சும் தலம். ஞானவடிவான அந்த சுவாமிநாதனைப் போற்றிப்புகழ இக பர சுகங்கள் கிட்டும். பிள்ளை வரம் வேண்டி அவன் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டால் அவன் அறிவும் அழகும் நிறைந்த அற்புத மகவை நமக்குத் தந்தருள்வான். அருணகிரி பாடித் தந்திருக்கும் இந்த அழகிய திருப்புகழைப் பாடி, அந்த மயிலோனைப் போற்ற மகப்பேறு கிட்டும்.

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த

திருமாது கெர்ப்பம் உடல்ஊறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

திரமாய ளித்த பொருளாகி;

மகவாவின் உச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தில் உறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்தம்

மணிவாயின் முத்தி தரவேணும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு

முலைமேல் அணைக்க வருநீதா

முதுமாம றைக்குள் ஒருமாபொ ருட்குள்

மொழியேஉ ரைத்த குருநாதா

தகையாதெ னக்குன் அடிகாண வைத்த

தனிஏர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்

சமர்வேல் எடுத்த பெருமாளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism