Published:Updated:

தோரண மலையில் திருக்கல்யாணம்!

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

மகா ஸ்கந்த ஹோம வைபவம்

தோரண மலையில் திருக்கல்யாணம்!

மகா ஸ்கந்த ஹோம வைபவம்

Published:Updated:
தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
தோரணமலை

அமர்ந்திருக்கும் களிறாய் தோற்றம் அளிக்கும் வாரணமலை, குகைநாதன் எனும் பரிபூரணன் எழுந்தருளி நிற்கும் பூரணமலை, நீண்டிருக்கும் மலைத் தொடர்களின் வாசலாக அமைந்திருக்கும் தோரணமலை, சித்தக் கலைகள் யாவும் உருவாகக் காரணமான காரணமலை, அன்று கோலாகலக் கொண்டாட்டங்களோடு காட்சி தந்தது.

தோரண மலையில் திருக்கல்யாணம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை. அகத்தியர், தேரையர், வாலைச் சித்தர் எனத் தொடங்கி சித்தர்கள் பலரும் ஞானிகளும் வாழ்ந்த திருத்தலம் இது. ஶ்ரீராமர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை பலரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டுள்ளனர் என்று தலவரலாறு கூறுகிறது. `மலை திருச்செந்தூர்' என்று இப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படும் திருத்தலம் இது.

64 புனிதச் சுனைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபூர்வ மூலிகைகளும், எண்ணற்ற வன உயிரினங்களும் வாழும் எழில் வாய்ந்த மலை இது. இங்குதான் மலையடிவாரத்தில் உற்சவராகவும் மலையின் மேல் மூலவராகவும் கோயில் கொண்டிருக்கிறான் தோரணமலை முருகப்பெருமான்.

மலையின் அடிவாரத்தில் பாலமுருகன், வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, குருபகவான், மகாலட்சுமி, சரஸ்வதி, சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நாகர்கள் சந்நிதிகளும் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளைக் கடந்து சென்றால், ஞானக் குகையில் `குகை நாதராக' முருகப்பெருமான் எழுந்தருளி நிற்கிறார். இந்த முருகனே அகத்தியரும் தேரையரும் போற்றி வழிபட்ட தொன்மையான முருகன் என்கிறார்கள்.

மலை சார்ந்த பரந்து விரிந்த இந்தப் பகுதியில்தான் உலகமே வியந்த மாபெரும் மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்று இயங்கி வந்தது என்பதை அறிந்தபோது வியந்தோம். ஆம், சிவ -பார்வதி திருமணத்தின் பொருட்டு தென்னகத்தைச் சமன்படுத்த இங்கு வந்த அகத்தியர் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர், முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார்.

தோரண மலையில் திருக்கல்யாணம்!
தோரண மலையில் திருக்கல்யாணம்!

அகத்தியருக்குக் காட்சி தந்த குகை முருகப் பெருமான் அவ்வப்போது ஆலோசனை தந்து அந்த இடத்தில் மாபெரும் சர்வகலா சாலையை நிறுவச் செய்து 72 விதமான பாட வகுப்பு களையும் சொல்லித் தந்தார் என தலவரலாறு கூறுகிறது. அகத்தியரோடு இணைந்து அவரின் சீடரான தேரையரும் இங்கு தங்கி இருந்து மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்து களைக் கண்டறிந்தார். 700 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்து சேவை புரிந்த தேரையர், பின்னர் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. முருகப்பெருமானின் அருளால் பல கலைகளும் வளர்ந்த இந்த இடம் பிறகு பல ஞானியர், ரிஷிகள் தவம் இருக்கவும் பயன்பட்டது.

கால வெள்ளத்தால் இந்த பகுதி மறைந்து போக, முருகப்பெருமான் திருவுருவச் சிலையும் காணாமல் போனதாம். வனவாசிகள் மட்டுமே உலாவி வந்த இந்த மலையைப் பற்றி இந்த ஊரைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் தெரிய வந்ததாம். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய முருகன், தான் மலைமீது குகையில் இருப்பதாக வெளிப்படுத்த, அவர்கள் முருகப் பெருமானைக் கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்தனர்; அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாயின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற ஆரம்பித்தன. தற்போது அவர் வாரிசான பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் இந்த கோயிலையும் அங்கு நடைபெறும் விழாக் களையும் வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்.

குழந்தைப்பேறு, திருமண வரம் குறிப்பாக சகல வியாதிகளுக்கும் பரிகாரத் தலமாக விளங்கும் இந்த கோயிலில் நிகழும் தைப்பூசப் பெருவிழா, தென்மாவட்டங்களி பிரசித்தி பெற்றது என்கிறார்கள்.

தோரண மலையில் திருக்கல்யாணம்!
தோரண மலையில் திருக்கல்யாணம்!
தோரண மலையில் திருக்கல்யாணம்!

இந்த ஆண்டு 18.1.22 (செவ்வாய்க்கிழமை) அன்று தைப்பூச விழாவைச் சிறப்பிக்கும் வகையில் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பு வெளியானதும் வாசகர்கள் பலர் சங்கல்பப் பிரார்த்தனைக்கு முன்பதிவு செய்து கொண்டார்கள். தொடர்ந்து தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது.

அதிகாலையில் மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கி, அடுத்து மகாஸ்கந்த ஹோமம் நடை பெற்றது. முன்பதிவு செய்த வாசகர்களுக்குச் சிறப்பு சங்கல்பத்துடன், அவர்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்தனை செய்யப்பட்டது. பிறகு மூலவர் – உற்சவ மூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகம், திருக் கல்யாணம், போன்ற வைபவங்கள் நடை பெற்றன. உரிய வகையில், பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது விழா.

விழாவின் சிறப்பாக விடுதலைப் போராட்ட தியாகிகள், சாதனை புரிந்த நல்லோர் என சிறப்பு விருந்தினர்களுக்குப் பாராட்டும் மரியாதையும் வழங்கப்பட்டன.

தைப்பூசத்தில் மட்டுமே தோரணமலையில் நடக்கும் அதிசயம் ஒன்று இந்த ஆண்டும் நடந்தது. ஆம், இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச வைபவங்கள் நடைபெறும்போது, மிகச்சரியாக அதிகாலையில் ஒரு பாம்பு வந்து தனது தோலை உரித்துவைத்து விட்டுப் போகுமாம். இந்த ஆண்டும் அந்த அதிசயம் நடந்தது! விழா இறுதியானதும் அந்த பாம்பு தென்பட, வனத்துறையினர் அந்த பாம்பைப் பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விட்டுவிட்டு வந்தனர். இதுவும் முருகப்பெருமான் லீலை என்று சிலிர்த்துப்போனோம்.

விழாவில் காலையும் மதியமும் அன்னதான மும் நடைபெற்றது. அன்னதான உணவு பக்தர் களின் இருப்பிடத்துக்கே கொண்டுசேர்க்கப் பட்டது. இவையாவும் அரசின் வழிகாட்டு தலுக்கு ஏற்ப நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது. ஆரோக்கியம் பெருகவும், ஐஸ்வர்யங்கள் கூடவும், நோய் அச்சமற்ற உலகம் மலரவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism