Published:Updated:

சிவமயம்

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

தூக்கியத் திருவடி ‘ந’காரம்; திருவுந்தி ‘ம’ காரம்; திருத்தோள் ‘சி’காரம், திருமுகம் ‘வ’காரம், திருமுடி ‘ய’காரமாகத் திகழ, ஆடல்வல்லானே தேடும் மந்திரமாகவும் நிற்கிறார்.

சிவமயம்
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

அடியேன், கடந்த 23.5.22 அன்று தில்லைக்குச் சென்றிருந் தேன். ஆடல்வல்லானாகிய நம் நடராஜபெருமானை இழுக்காகப் பேசியதைக் கண்டித்து நடைபெற்ற அடியார் கூட்டத்தில் கலந்துகொண்டேன். ஆடல் தத்துவத்தையும், அகிலத்தின் தலைவனான சிவத்தின் பெருமைகளையும் உணராத சிலரின் தகாத பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது.

எவர் மனதையும் புண்படுத்தி பேசுவதில் என்ன வந்து விடப் போகிறது. எல்லாவற்றையும் மதி; ஒன்றையே துதி என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

இந்தப் பிரபஞ்சத்தின் வடிவம், சிவலிங்க வடிவம். இந்த பிரபஞ்ச இயக்கத்தின் அடையாளம் நடராஜர் வடிவம். நடராஜரைப் போலவே இந்தப் பிரபஞ்சம் எண்திசைகளிலும் விரிந்துகொண்டே செல்கிறது என்பது சூட்சுமம். ஒரு அணுவைத் துளைத்துப் பார்த்தால்கூட நடராஜரின் வடிவம் போலவே எலெக்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டான் என சுற்றிச் சுழல்வதாக அறிவியலும் கூறுகிறது. அறியாத வர்கள்தான் என்னென்னவோ பேசுகிறார்கள்.

ஈசனின் திருவடிவங்களில் நடராஜர் வடிவம் எவ்வளவு அழகானது, எவ்வளவு நுட்பமானது, எவ்வளவு கருணைமயமானது. தூக்கிய திருவடி யின் கருணை எவ்வளவு அலாதியானது.

தெய்வங்களின் திருவடிகளைத் தரிசிக்க வேண்டும் என்பது பக்தர்களின் பெரும் விருப்பம். சில தெய்வங்கள் அமர்ந்திருக்கும், சில தெய்வங்கள் நின்றபடி அருள்பாலிக்கும். அப்போது வஸ்திரமோ, மலர்களோ மறைத்து திருவடிகள் தெரியா மல் இருக்க லாம். மேலும் கருவறைக்கு வெளியே தூரமாக நின்று இருந்தாலும் திருவடி தரிசனம் காண்பது சிரமமாக இருக்கும்!

ஆனால் அன்பே வடிவான சிவம், தன் பக்தர்களுக்காக திருவடிகளைத் தூக்கி அருள் பாலிக்கிறது. `நீ எங்கிருந்து பார்த்தாலும் என் குஞ்சிதபாதம் உன்னைக் காக்கும்' என்றபடி திருவடி தரிசனம் காட்டுகிறது.

சிவதாமோதரன் ஐயா
சிவதாமோதரன் ஐயா

நடராஜரின் வடிவம் வெறும் நாட்டிய வடிவம் மட்டுமல்ல; அன்பே வடிவான அருள் வடிவம். இன்னும் சிறப்பாக... திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவார். அங்கு தமது இடது காதுக்கு அருகே இருக்கும்படி ஒரு திருவடியை உயர்த்தி காட்சி தருவார். அதற்கு என்ன அர்த்தம்!

காளியோடு ஆடிய சிவம், தான் ஆடியபோது கீழே விழுந்த குண்டலங்களை பாதங்களால் எடுத்து காதில் பொருத்திக்கொண்டார். அதைக் கண்ட காளி, தானும் அதுபோல் செய்ய முடியாமல் தோற்றாள் என்கிறது புராணம். ஆனால், இதன் உள்ளார்த்த தத்துவம் வேறு. அண்டமதிர நிமிர்ந்தாடும் ஈசனின் இடது காதின் அருகேயுள்ள ஒரு முடியின் நுனியில் உள்ளதே இந்த பூமி. ஆக, பூமியின் ஜீவராசிகள் எல்லாமும் சிவபதத்தை எளிதில் அடையவே ஈசன் திருப்பாதம் வீசி காட்சி அளிக்கிறார் ஆலங்காட்டில்.

தூக்கியத் திருவடி உயிர்களை மீட்டு அருளும் என்றால், ஊன்றிய திருவடி மாயைகளை அழித்து நம்மைக் காக்கும். முயலகன் மாயையின் உருவகம். பெருமான் அசையாவிடில் அணுவும் அசையாது; பெருமான் ஆட்டுவிக்க அனைத்தும் ஆடுகின்றன என்பதே நடராஜ தத்துவம். `ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே, அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே' என்பது அப்பர் பெருமானின் அருள் வாக்கு அன்றோ!

சிவ வடிவங்களில் நடராஜரே பஞ்சாட்சர வடிவாகவும் இருக்கிறார். தூக்கியத் திருவடி ‘ந’காரம்; திருவுந்தி ‘ம’ காரம்; திருத்தோள் ‘சி’காரம், திருமுகம் ‘வ’காரம், திருமுடி ‘ய’காரமாகத் திகழ, ஆடல்வல்லானே தேடும் மந்திரமாகவும் நிற்கிறார்.

அன்னை உமை, முனிவர்கள் இருவர், தேவர்கள் இவர்களுக்காக மட்டுமே ஈசன் நடம் புரியவில்லை. இந்தப் பிரபஞ்சம் உய்ய அவர் ஆடுகிறார். எப்படி ஆடுகிறார் தெரியுமா!

முயலகன் மீது நின்றருளும் திருப்பாதமும், தூக்கியருளும் மெல்லிய பாதமும், பாதங்களில் கொஞ்சும் திருச்சிலம்பும், பிரகாசம் கொண்ட திருமேனியும், ஆணவத்தின் கதியை உணர்த்தும் புலித்தோலாடையும், திருவரையிலே தரித்தருளும் கச்சின் அழகும், திருவுந்தியில் பொருந்திய உதரபந்தனச் சேர்வையும், உபவீதம் சேர்ந்த திருமார்பும், வீசியருளும் சிவந்த திருக் கரமும், பாம்பைக் கங்கணமாகக் கொண்ட கவித்தருளிய மற்றொரு திருக்கரமும், ஒலி மிக்க தமருகமும், ஒளி சூழ்ந்த தீயகலும், முன்திரண்ட திருத்தோள்களும், கழுத்தில் திரண்ட நீல கண்டமும், சாமகானம் ஒலிக்கும்; திருத்தோடு பொருந்திய செவிகளும், கோடி சூரியர்களின் காந்தியைப் போன்ற வதனமும், அதில் மின்னும் திருமுறுவலின் மோகனமும், செந்தாமரை மலர்போன்ற கண்களும், அதன் அசைவுகளும், வில்லையொத்த புருவத்தின் அழகும், சந்திரனைப் பழிக்கும் நெற்றியும், தாழ்ந்த விரிந்த குளிர்ந்த சடைக்கற்றையும், நாகாபரணமும், கொன்றைப் பூமாலையும், சந்திரப் பிறையும், கொக்கிறகும், தூயகங்கையும், திருமேனியில் துலங்கும் திருநீறுமாக நடராஜர் ஆடும் அழகைக் கண்டாலே போதுமே, சகல ஜீவன்களும் உய்வு பெறுமே.

நடன சபாபதியைச் சுற்றியிருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் சதா தாண்டவம் ஆடுவதைக் குறிக்கும். ஈசன் நின்றிருக்கும் திருவாசியின் வெளிப்புறம் காணும் ஒவ்வொரு தீ ஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகள் இருக்கும். அதுவே பிரபஞ்சத்தின் மகாகாலம். அது, காலத்தின், தொடக்கம், நடப்பு, முடிவுகளைக் குறிக்கும். நடராஜன் நின்றாடும் இரட்டைத் தாமரை பீடத்தின் பெயர் மஹாம்புஜ பீடம். இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரங்களும் விரிவடைந்து, பிறகு மீண்டும் ஒடுங்கும் என்கிறது சைவ சித்தாந்தம்.

`இனி பிறப்பே வேண்டாம்' என்று பலவாறு புலம்பிய நாவுக்கரச பெருமானே, நடராஜரைக் கண்டு அழகில் மயங்கி `மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தில்...' என்று மீண்டும் பிறவி வேண்டும் என்று கேட்டு விட்டார் இல்லையா!

நடராஜரைத் தரிசிக்கும்போது ஐவகை அசுத்தங்களையும் கண்டு கொள்ளுமாம் ஆன்மா. புலித்தோல் - குரோதம், நாகம் - மாற்சரியம், முயலகன் - அஞ்ஞானம், நெருப்பு - கோபம், நூபுரம் - கெட்ட எண்ணங்கள். இந்த ஐவகை அசுத்தங்களையும் நீக்கிக் கொள்ள நடராஜ வடிவமே துணை என்பது பண்பாளர்களுக்குப் புரியும்.

எடுத்த பொற்பாதமாம் ஈசனின் திருவடியே நம் மணிமுடி என்பதே அடியார்களின் உறுதி. நாமும் இனித்தமுடைய எடுத்த பொற் பாதத் தைப் போற்றிச் சரணடைவோம்.

- பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism