Published:Updated:

சாப்பிட வந்தார் பாண்டுரங்கன்!

பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
பாண்டுரங்கன்

சி.மீனாட்சி

சாப்பிட வந்தார் பாண்டுரங்கன்!

சி.மீனாட்சி

Published:Updated:
பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
பாண்டுரங்கன்

பாண்டுரங்கனின் தீவிர பக்தர் சோகாமேளர். அதீத பக்தியுடன் தினமும் பாண்டுரங்கனை வழிபடுவதும் நாமஜபம் செய்வதுமாக வாழ்ந்து வந்தார். இவரின் பக்தியில் மகிழ்ந்த பாண்டுரங்கன், இவரின் இல்லம் தேடி வருவதும் அன்புடன் அவர் பரிமாறும் உணவைச் சாப்பிடுவதுமாக இருந்தார்.

பகவான் பாண்டுரங்கன்
பகவான் பாண்டுரங்கன்


ஒருநாள் பகவான் பாண்டுரங்கன் இவரின் இல்லத்தில் சாப்பிட அமர்ந்தார். அப்போது, தான் கொண்டுவந்த தயிர்ப் பாத்திரத்தைத் தவறுதலாகக் கீழே போட்டுவிட்டாள் சோகாமேளரின் மனைவி. கீழே சிந்திய தயிர் பகவானின் பட்டுப் பீதாம்பரத்திலும் தெறித்து விழுந்தது.

அதைக் கண்ட சோகாமேளர், இப்படிக் கவனம் இல்லாமல் நடக்கலாமா? பகவானின் மீது தயிரைக் கொட்டிவிட்டாயே..’’ என்று மனைவியைக் கடிந்துகொண்டார். அந்தச் சத்தம் வீதியில் போய்க்கொண்டிருந்த கோயில் அர்ச்சகரின் காதில் விழுந்தது. அவருக்குச் சோகாமேளரைக் கண்டாலே பிடிக்காது.

உரையாடலைக் கேட்டவன் ``பகவான் வீட்டுக்கு வந்திருப்பதாகப் புரளி பண்ணுகிறானோ சோகாமேளன்’’ என்று எண்ணி, சாளரத்தின் வழியே வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். புண்ணிய சீலர்களுக்கு மட்டுமே வசப்படுபவர் அல்லவா பகவான்?! ஆகவே, அவனுடைய கண்களுக்குப் பகவான் தென்படவில்லை.

ஆகவே வேகவேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன் ``என்னடா புரளியா பண்ணுகிறாய்?’’ என்று கேட்டு சோகாமேளரின் கன்னத்தில் அறைந்துவிட்டான். அவரின் கன்னம் வீங்கிப்போனது.

மறுநாள் காலையில் கோயில் கருவறையைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே பகவானின் கன்னம் வீங்கியிருந்தது. அவரின் பீதாம்பர ஆடையில் தயிர்த் துளிகள்!

அவனுக்கு உண்மை விளங்கியது. சோகாமேளரின் வீட்டுக்கு ஓடோடிச் சென்றான். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். பூரணக் கும்ப மரியாதையுடன் அவரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். இது ஊருக்குள் பரவ எல்லோரும் கோயிலுக்கு வந்தார்கள்; சோகாமேளரைப் போற்றினார்கள். பகவானை தரிசித்து ஆனந்தம் அடைந்தார்கள்!

- சி.மீனாட்சி, கோவில்பட்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism