
ஏழைக்கு இரங்கிய ஈசன்!
பசி பொறுக்காத பரமன்!
திருவானைக்கா, திருவெறும்பூர் தலங்களை தரிசித்துவிட்டு களைப்போடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அவர் பசியைப் பொறுக்காத ஈசன் அந்தணராக உருமாறி, வழியில் ஒரு சோலையையும் குளத்தையும் உருவாக்கிக் காத்திருந்தார். அப்பர் அங்கு வந்ததும் 'தாங்கள் மிகவும் களைத்து இருக்கிறீர்கள். இங்கு சோறு உண்டு விட்டு இளைப்பாறி செல்லுங்கள்!' என்றார்.

அப்பரும் இசைந்து இளைப்பாறினார். பிறகு அவர் மீண்டும் கிளம்ப, அந்தணர் 'எங்கே செல்கிறீர்கள்' என்று வினவினார். அவர் திருப்பைஞ்ஞீலி என்று சொல்ல, 'நானும் அவ்வழியே செல்கிறேன், வாருங்கள்' என்று வழி காட்டியும் நடந்தார். திருப்பைஞ்ஞீலி கோயிலை அடைந்ததும் அந்தணர் மறைய, வந்தவர் ஈசனே என்று உணர்ந்து அப்பர் பெருமான் நெக்குருகி பதிகம் பாடினார்.
ஏழைக்கு இரங்கிய ஈசன்!
அனவரதமும் தன்னை எண்ணியே வாழும் அந்த பக்தனுக்கு அருள் புரிய ஈசன் விருப்பம் கொண்டார். பக்தனின் பெயர் பெரியான். அவன் தினையை விதைத்துக் கொண்டிருக்கும்போது ஈசன் நாடோடியாக வந்து உணவு வேண்டி யாசித்தார். அடியார் பசி தீர்க்க பெரியான் வீடு நோக்கி ஓடினான்.
அவன் உணவு கொண்டு வருமுன், விதைக்கப்பட்ட தினை முழுக்க விளைந்து பக்குவமாக்கிவிட்டு ஈசன் மறைந்து போனார். திரும்பி வந்த பெரியான் திகைத்து நிற்க, அவனுக்கு ரிஷபாரூடராகத் தோன்றி அருள் செய்தார். தினை விளைந்த ஊர் இன்றும் கடலூர்-சிதம்பரம் வழியில் திருத்தினை நகராக உள்ளது. இங்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து திருப்பதிகமும் பாடி உள்ளார்.