வரும் பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி நாள். இந்தத் திருநாளில் ஈசனைப் போற்றி பூஜித்து செய்யப்படும் வழிபாடுகள் அதீத மகத்துவம் கொண்டவை. மகாசிவராத்திரி நாளின் இரவில் 4 காலமாகப் பிரிக்கப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. அது ஏன் 4 கால பூஜை!
எல்லாமுமாக நிறைந்து நிற்கும் உருவமற்ற ஈசன், முதலில் ஒளியாகவும், பிறகு மால், அயனுக்காக அருவுருவமான லிங்க வடிவமாகவும், அவர்களுக்கு அருள் புரிய உருவமான சுந்தர வடிவத்தையும் எடுத்த நாள் இது. அதன்பொருட்டே நான்கு கால பூஜைகளாக மகாசிவராத்திரி நாள் இரவில் ஈசனை வழிபடுகிறோம்.
கண்ணப்பர் முக்தி கொண்டதும், மார்க்கண்டேயன் மரணத்தில் இருந்து மீண்டதும், ஆதி கயிலை முனிவர்கள் (சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர், சுந்தரநாதர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனி) 8 பேரும் ஞானம் பெற்றதும், திருமூலர் திருமந்திரம் எழுதியதும், பகீரதன் கங்கையைக் கொண்டதும், அர்ஜுனன் ஈசனைத் தரிசித்து பாசுபதம் பெற்றதும் மகாசிவராத்திரி நாளிலேயே என்கின்றன புராணங்கள். சிவராத்திரியில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் கோடி மடங்கு உயர்வானவை என்கிறார்கள் ஞானிகள். சித்தர்கள் ஈசனை வழிபடும் புண்ணிய நாள் இது.
இந்நாளில் செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள், தியானம், யோகம் அத்தனையுமே நல்ல பலன் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. இரவு முழுக்கத் தூங்காமல் சிவபூஜை செய்து வழிபடுவது வழக்கம். பலர் 4 கால பூஜைகளுக்கு 4 சிவாலயங்கள் சென்று வழிபடுவதும் உண்டு. மகாசிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்து முடியாதவர்களுக்கு என்றே உங்கள் சக்தி விகடன் சிறப்பு சங்கல்ப பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளது.

சக்தி விகடன் வாசகர்கள் பயன் அடையும் விதம், அவர்களின் குடும்பத்தாரும், சுற்றத்தாரும், நண்பரும் நன்மைகளையும் பெறும் பொருட்டு, திருவாவடுதுறை ஆதினத்துக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற 4 சிவாலயங்களில், சிறப்பு சங்கல்பப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மகா சிவராத்திரி நான்கு காலமும் முறையே...

முதல் காலம்: தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்
2-ம் காலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம்
3-ம் காலம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்
4-ம் காலம்: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.
தேவாரப் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். எண்ணியவை யாவையும் அருளும் இந்த சிறப்புச் சங்கல்ப வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப முன்பதிவு செய்து உங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
மிக மிக அற்புதமான இந்தத் தலங்களில் நிகழும் மிக அரிதான வழிபாட்டில் நீங்களும் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதன் மூலம் சிவனருள் கைகூடும். சகல காரியங்களிலும் வெற்றி பெறலாம். காரிய ஸித்தி கிட்டும். கிரக தோஷங்கள், தீவினைகள் நீங்கும். தீரா கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். தீராத நோய்கள் தீரும், மனஅமைதி கிட்டும். ஓயாத உழைப்பால் சலிப்பு கொண்டோருக்கு அமைதியும் மகிழ்வும் அளிக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். விரயச் செலவுகள் நீங்கும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொந்தங்களின் பகை தீரும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும், கடன் தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு: இந்த வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்ப வழிபாட்டுக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பெயர் நட்சத்திரத்துடன் சிறப்பு வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு நான்கு திருத்தலங்களின் விபூதிப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404