Published:Updated:

Modi குறிப்பிட்ட Chathuranga Vallabhanathar கோயில்! | Chess-ல் வெற்றி தரும் சிவாலயம்!

Modi குறிப்பிட்ட Chathuranga Vallabhanathar கோயில்! | Chess-ல் வெற்றி தரும் சிவாலயம்!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 மேலான வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சதுரங்கம் இந்திய தேசத்தில் இருந்து தோன்றிய விளையாட்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அதன் பூர்விகம் தமிழகம் என்கிறது நம் ஆன்மிகம். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருத்தலம். போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சதுரங்க வல்லப நாதர் கோயிலைக் குறிப்பிட்டுப் பேசினார். இருவரும் குறிப்பிட்ட இந்தக் கோயிலின் இறைவனுக்கு புஷ்பவனேஷ்வரர் என்பதுதான் திருநாமம். அவருக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற திருநாமம் வந்தது எப்படி? வாருங்கள், இத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொண்டு சதுரங்க வல்லபநாதரை தரிசனம் செய்வோம்.