Published:Updated:

கண்ணனை வழிபட சிவன் காட்டிய காட்சி

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

கண்ணனை வழிபட சிவன் காட்டிய காட்சி

கண்ணனை வழிபட சிவன் காட்டிய காட்சி

கண்ணனை வழிபட சிவன் காட்டிய காட்சி

Published:Updated:
கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

குஜராத் மாநிலம் புராதனகடம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த பலராம் மேத்தாவின் மகன் நரசிம்ம மேத்தா. நரசிம்ம மேத்தா சிறுவனாக இருந்த போது கல்வியில் மனம் செல்ல வில்லை. பள்ளிக்குச் செல்லாமல், வனங்களிலும் மலை முகடுகளிலும் சுற்றித் திரிந்தார்.

இதை அறிந்த அவரின் அன்னை நரசிம்ம மேத்தாவைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அதனால் மனம் வருந்திய நரசிம்ம மேத்தா காட்டு வழியே நடக்க ஆரம்பித்தார். மாலை இருட்டத் தொடங்கிவிட்டது. வனத்துக்குள் வழி தெரியவில்லை. தொலைவில் சிறு மண்டபம் போல் ஒன்று தோன்ற அங்கே சென்றார்.

அது ஒரு சிவாலயம். அந்த சிவலிங்கத்தைக் கண்டதும் நரசிம்மனின் பயம் நீங்கியது. அங்கேயே அமர்ந்து தான் அறிந்த மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரம் சென்றது. யாரோ தன்னைத் தொடுவதை உணர்ந்த நரசிம்ம மேத்தா திரும்பிப் பார்க்கிறார். சடாமுடி தாரியாக சிவபெருமானே நிற்கிறார். நரசிம்மர் மெய்சிலிர்க்க அவரைப் பணிந்துகொண்டார்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்



சிவபெருமான் அவரை எழுப்பி, "நரசிம்மா நீ விஷ்ணுவின் புகழைப் பாட வேண்டியவன். என்னோடு வா" என்று அவரை அழைத்துச் சென்றார். ஒரு தோப்பு போன்ற பகுதிக்குள் சென்று, "அங்கே பார்" என்று காட்ட, அந்த வனத்தில் கிருஷ்ணன் கோபியர்களோடு நடனமாடும் அற்புதக் காட்சி தெரிந்தது. நரசிம்ம மேத்தா மெய் சிலிர்த்தார். சிவபெருமானோ, "நரசிம்மா நீ கிருஷ்ணனின் அருள் வேண்டித் துதி" என்று சொல்ல நரசிம்ம மேத்தாவும்ஈஶ்ரீகிருஷ்ணரைத் துதிக்க ஆரம்பித்தார். ஶ்ரீகிருஷ்ணரின் ஆசியும் கிடைத்தது. மட்டுமன்றி, "நரசிம்மா, நீ கண்ட காட்சிகளைப் பாடல்களாகப் பாடு" என்று சொல்ல நரசிம்ம மேத்தாவும் இசைந்தார். அடுத்தகணம் ஹரியும் ஹரனும் மறைந்தனர். நரசிம்ம மேத்தா மீண்டும் ஆலயம் சென்று அங்கேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

நரசிம்ம மேத்தாவைத் தேடிக்கொண்டு வனத்துக்குள் வந்த ஊர்க்காரர்கள், தேகம் மெலிந்த நிலையில் நரசிம்ம மேத்தா கோயிலுக்குள் தியானம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைத் தொட்டு எழுப்பினர். கண் திறந்த கணமே நரசிம்ம மேத்தா, கண்ணன் மீது கவி பாட ஆரம்பித்தார். கல்வி வாசனையே இல்லாத நரசிம்ம மேத்தாவின் கவித்துவம் நிறைந்த பாடல்களைக் கேட்ட ஊரார் வியந்துபோயினர்.

அதன்பின் காலமெல்லாம் பாண்டுரங்கனைப் பாடுவதையே தன் தொழிலாகக் கொண்ட நரசிம்ம மேத்தாதான் `வைஷ்ணவ ஜனதோ' என்னும் புகழ்பெற்ற பாடலை இயற்றியவர்.

- சக்திதர், சென்னை-59