Published:Updated:

சிவமயம் - 9

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

சிவமயம் - 9

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

Published:Updated:
சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!

கடந்த சித்திரை சதய நாளில் (26.4.22)அப்பர் பெருமானின் குருபூஜை விழா தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்றது. தாண்டகவேந்தாராம் நம் ஆளுடைய அரசரின் விழாவை, தஞ்சையை அடுத்த களிமேடு என்ற ஊரில் உள்ள அப்பர் கோயிலிலும் கொண்டாடினார்கள். அப்போது விபத்து உண்டாகி 11 அன்பர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி நம் எல்லோர் மனதையும் உலுக்கியது.

சிவமயம்
சிவமயம்

எவ்வளவு திட்டமிட்டாலும் இதுபோன்ற விபத்துக்களும் உயிர் இழப்புகளும் நடைபெறத்தான் செய்கின்றன. இறந்த ஆன்மாக்கள் ஈசனடி சேரவும், காயம் அடைந்த அன்பர்கள் விரைவில் பூரண குணம் அடையவும் வேண்டிக்கொள்வோம். இனி இப்படி எங்கும் எப்போதும் நிகழாமல் இருக்க ஈசனைப் பிரார்த்திப்போம்.

அவரின்றி நமக்கு வேறு யார் துணை? இடர் களைய இந்தப் பதிகத்தைப் படியுங்கள். இடர் உற்றவர் தீர்வு பெறட்டும்.

மறையுடையாய் தோலுடையாய்

வார்சடை மேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே

என்றுன்னைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய்

கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய்

நெடுங்களமேயவனே

`சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வதன் தாத்பர்யம் என்ன? அதனால் என்ன சிறப்பு?' எனும் கேள்வியை அன்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, நாம் எல்லோருமே சங்காபிஷேகத்தின் சிறப்பை அறியவேண்டும்.

சங்காபிஷேகம் செய்வதால் சொர்ணாபிஷேகம் செய்த பலன் கிடைக்கும். எல்லோருமே எல்லா கோயில் களிலுமே சொர்ணா பிஷேகம் செய்துவிட முடியாது. அந்தக் குறையைக் களைய உருவானதே சங்காபிஷேகம். ஆதியில் ஈசனிடமே பாஞ்சஜன்யம் எனும் சங்கும், சுதர்சனம் எனும் சக்கரமும் இருந்தன. திருமால் சலந்தரனை வதம் செய்ய, ஈசனிடம் வேண்டி 1000 தாமரை மலர்களைக் கொண்டு தொடர்ந்து அர்ச்சித்து சக்கரத்தை வேண்டினார்.

ஒருநாள் ஒரு தாமரை மலர் குறைய, தனது கண்ணையே எடுத்து அர்ச்சித்து திருமால் வேண்டினார். இந்த அன்புக்காக ஈசன் சக்கரத்தைக் கொடுத்துவிட்டார். அதுபோல கிருஷ்ணாவதாரத்தின் போது, சங்க நிதியையும் திடமான வெற்றியையும் அளிக்கும் ஈசனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும் வேண்டினார். சொர்ணாகர்ஷண பைரவராக அவருக்குக் காட்சி தந்த ஈசன், சகல நிதிகளையும் வெற்றிகளையும் அளிக்கும் அந்த சங்கையும் பரிசாக அளித்தார்.

அந்த சங்கின் துணை கொண்டே சங்கநாதம் எழுப்பி, பாண்டவர்களுக்கு வெற்றியை அளித்தார் கிருஷ்ணர். இல்லாவிட்டால் 11 அக்ரோணி சேனைகளையும் மாபெரும் ஆசார்யர்களையும் வீரர்களையும் கொண்ட கௌரவர்களை வெல்வது முடியுமா என்ன!

ஈசனின் திருக்கரத்தில் திகழ்ந்த, செல்வங்களில் எல்லாம் சிறந்த சங்கால் அபிஷேகம் செய்யும் போது நவ மணிகளையும் பொன்னையும் கொண்டு அபிஷேகித்த பலன் கிட்டும். அதுவும் சோம வாரத்தில் செய்யும் அபிஷேகத்துக்கு பலன் நூறு மடங்கு. இன்னும் சிறப்பாக... நன்னீர் குளத்தில் சங்கு பூக்கும் - பூவுலகின் அதிசய தலமான திருக்கழுக்குன்றத்தில் இந்த சங்காபிஷேகத்தை நடத்தினாலோ, பார்த்தாலோ கோடி முறை பலன் என்கின்றன சாஸ்திரங்கள். இங்கு மட்டுமே 12 ஆண்டுக்கு ஒருமுறை... கடலில் மட்டுமே தோன்றும் சங்கு, திருக்குளத்தில் தோன்றும். ஆலயங்களில் 108, 1008 என சங்காபிஷேகம் செய்வது வழக்கம். வசதியில்லாத கோயிலில் உங்கள் கையால் ஒரே ஒரு சங்கால் அபிஷேகம் செய்து பாருங்கள். அந்த கோயிலில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு செல்வ பலம் கூடும்!

சங்காபிஷேகம்
சங்காபிஷேகம்


`ஈசனின் திருவடிவான வீரபத்திரர், பைரவர் வடிவங்களை வீட்டில் வைத்து வணங்கலாமா?' என்று வேறோர் அன்பர் கேட்டிருந்தார்.

தாராளமாக வணங்கலாம். ஆணவம், அறியாமை ஆகிய தீமைகளை விலக்க வந்த ஈசனின் திருவடிவங்களே இவர்கள். பிரம்மனின் அகந்தையை அழிக்க உருவானவர் பைரவர். இவர் இருக்கும் வீட்டில் தீய சக்திகள் அண்டாது. மேலும் இவர் சந்தான பாக்கியம் அருளும் தெய்வமும்கூட. பைரவரே க்ஷேத்திர பாலகர்; சிவாலயத்தின் சகல சொத்துக்களுக்கும் இவரே சொந்தக்காரர். ஆலயம் இரவில் பூட்டப்படும்போது இவரிடமே எல்லா சாவிகளும் ஒப்படைக்கப் படும். நாமும் இவரை வணங்கும்போது கையை விரித்து காண்பித்தே வணங்குவோம். பைரவரை வணங்கினால் சகல அச்சங்களில் இருந்தும் விடுபடலாம்.

அதேபோல ஈசனை மதிக்காத தட்சனை தண்டிக்க மகாசிவனின் அம்சத்தில் தோன்றியவர் வீரபத்திரர். மந்திர சாஸ்திரங் களில் பெரியதும் அட்சர எண்ணிக்கையில் 1000 எழுத்துக்கள் கொண்டதுமான யந்திரம் கொண்டவர் வீரபத்திரரே. இவர் இருக்கும் இடத்தில் எந்த தீமைகளும் பலிக்காது. ஸ்கந்த புராணம், சிவமகாபுராணம், காசிக்காண்டம், தக்கயாக பரணி, காஞ்சிப் புராணம் போற்றும் மூர்த்தி இவர். கங்கை முதலான தீர்த்தங்களின் காவலர் இவரே. வீரபத்திரரே சிவகணங்களின் சேனாதிபதி. திருப்பூவல்லியில் மாணிக்கவாசகப் பெருமான் வீரபத்திரரை புகழ்கிறார்.

'பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே

எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்

விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்

புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.'

ஆக பைரவர் வீரபத்திரர் இருவரையும் வணங்கினால் நன்மைகளே விளையும் அன்றி ஒரு தீதும் வராது!

- பேசுவோம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிவமயம் - 9

கண்கண்ட தெய்வம் யார்?

கேள்வியும் பதிலுமாக நமக்கு அவசியமான விளக்கங்களைத் தருகின்றன ஞானிகள் அருளிய ஞானநூல்கள்.

அவற்ற்றில் சில...

மரியாதைக்குரியவன் யார்?:

எவரிடமும் எதையும் வேண்டாதவன்

உலகை வெல்ல எவரால் முடியும்?:

சத்தியமும் பொறுமையும் உடையவரால்

எவரை தேவர்களும் வணங்குவார்கள்?:

தயை உடையவரை

எது அலங்காரம்?:

நற்குணங்கள்

வாக்குக்கு அழகு?:

சத்தியம்

உடலுக்குப் பாக்கியம் எது?:

ஆரோக்கியம்

சுகம் எது?:

திருப்தி

கண்கண்ட தெய்வம் யார்?:

தாயார்

பூஜிக்கவேண்டிய குரு?:

தந்தை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism