Published:Updated:

மதுரை சித்திரை விழாவில் இத்தனை வழிபாடுகளா! வியக்க வைக்கும் தகவல்கள்; அழகர் திருவிழா அற்புதங்கள்!

மதுரை சித்திரை விழா

மதுரை சித்திரை விழா: தம்மிடம் நம்பிக்கை இல்லாத மக்களிடம் பக்தி சிரத்தை வரும் நோக்கிலும், நம்பிய பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் எண்ணத்திலும் கள்ளழகபெருமான் மதுரையை நெருங்கும்போது குதிரையோடு மயக்கமாக விழுகிறார்

மதுரை சித்திரை விழாவில் இத்தனை வழிபாடுகளா! வியக்க வைக்கும் தகவல்கள்; அழகர் திருவிழா அற்புதங்கள்!

மதுரை சித்திரை விழா: தம்மிடம் நம்பிக்கை இல்லாத மக்களிடம் பக்தி சிரத்தை வரும் நோக்கிலும், நம்பிய பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் எண்ணத்திலும் கள்ளழகபெருமான் மதுரையை நெருங்கும்போது குதிரையோடு மயக்கமாக விழுகிறார்

Published:Updated:
மதுரை சித்திரை விழா

மதுரைக்கு உள்ள சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமாக சித்திரை திருவிழா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருவிழா. மதுரை அரசி மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர் பெருமானுக்கும் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் அதனை ஒட்டி நிகழும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்தவை.

சொக்கநாதர் - மீனாட்சி
சொக்கநாதர் - மீனாட்சி

இதைக் காண மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் இருந்தும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து காத்திருந்து தரிசனம் செய்வார்கள். இதனைத் தொடர்ந்து அழகர் திருவிழா நடைபெறும் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், பூப்பல்லக்கு போன்ற வைபவங்களும் நடைபெறும். இந்த அழகர் திருவிழாவின்போது பக்தர்கள் பல்வேறுபட்ட வேண்டுதல்கள் வைத்து அதற்காக விரதம் இருந்து அதனை நிறைவேற்றுவர். பலவித வழிபாடுகள் நேர்த்திகடன்கள் நடக்கும். அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா

சர்க்கரை பூஜை, பீய்ச்சாங்குழல், தூபம் - நோக்கம்:

தம்மிடம் நம்பிக்கை இல்லாத மக்களிடம் பக்தி சிரத்தை வரும் நோக்கிலும், நம்பிய பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் எண்ணத்திலும் கள்ளழகபெருமான் மதுரையை நெருங்கும்போது குதிரையோடு மயக்கமாக விழுகிறார். இது அவருடைய லீலைகளில் ஒன்று. அவர் மயக்கம் அடைந்து விட்டாரே என்று பீச்சாங்குழல் மூலமாக தண்ணீர் அடிக்கப்படுகிறது. அதிலும் அவர் எழுந்திருக்காததால் அவரின் நாசியில் தூபம் காண்பிக்கப்படுகிறது. மயக்கம் தீருவதற்காக ஆகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு மயக்கம் தெளிந்து குதிரையில் வண்டியூர் சென்றுவிடுகிறார். முன்னோர்கள் செய்த இந்த வழிமுறைகளை காலப்போக்கில் வழிபாடாக தற்போது மக்கள் செய்து வருகிறார்கள்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்

வைகை ஆற்றில் ராமராயர் மண்டபத்தில் நாமம் போடும் வழிபாடு:

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி ராமராய மண்டபத்தில் குதிரை வாகனத்துடன் வந்து சேர்ந்ததும் ஆண்களும் பெண்களும் சில வழிபாடுகளை செய்வார்கள். இந்த வழிபாடுகளை செய்வதற்கு முன் அமாவாசையில் இருந்து 15 நாட்கள் விரதம் இருப்பார்கள். ஆண்கள் அங்கபிரதட்சணமும் பெண்கள் கைரேகையை மண்ணில் படும்படி நாமம் போல் போடுவார்கள்.

கள்ளழகர்
கள்ளழகர்

அஷ்டாங்கம் என்பதற்கு எட்டு என்பது பொருள். கால், காலின் விரல்கள், முழிக்கட்டை, வயிறு, மூக்கு, ரெண்டு கண்கள், சிரசு இந்த எட்டும் தரையில் பட வேண்டும். அதாவது, ஒரு மரத்தை வெட்டினால் எப்படி கீழே விழுகுமோ அதன் போல் ஆண்களின் எட்டு அங்கங்களும் தரையில் பட வேண்டும். இது ஆண்களுக்கு மட்டும் உரியது. பெண்களுக்கு சாஷ்டாங்கம் என்று சொல்லக்கூடிய சிரசும் கையும் சேர்ந்து குனிந்து கைரேகை தரையில் படும்படி ஒரு கோடு போல் பதிக்க வேண்டும். அதாவது, பெண்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்தபடி கையில் ஒரு மஞ்சள் பூசிய தேங்காயை வைத்துக்கொண்டு கீழே குனிந்து தரையில் நாமம் போட்டுக்கொண்டே மண்டபத்தை சுற்றி வலம் வருவார்கள். இது பெண்களுக்கு உரியது.

இந்த வழிபாட்டிற்கான காரணம் குதிரை வாகனத்தில் இருக்கும் பெருமாளின் திருவடியில் இருக்கும் மண் நம் அங்கத்திலே பட வேண்டும். ஆண்கள் செய்யும் அங்கபிரதட்சணம் மூலம் பெருமாளின் திருவடி மண் அவர்களின் அங்கத்தில் படுவதால் சகல பாவ விமோச்சனம், தரித்திர தோஷம், சத்ரு பயம் இவையெல்லாம் விலகும்.

கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள்
கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள்

பெண்கள் அவர்களின் கைவிரல்களை பிரதானமாக வைத்துக்கொண்டு அதனை பெருமாளின் திருவடியில் படச்செய்கிறார்கள். அவர்களின் கைவிரல் படுவதால் தீர்க்கமாங்கல்யம் உண்டாகும். அந்த விரல் நமக்கு சகல காரியங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும். கன்னிகா ஸ்ரீகளுக்கு படிப்பும் உத்தியோகமும் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது கருத்தாக உள்ளது. இதனால் பெண்கள் கைரேகையை பிரதானமாக வைத்துக்கொண்டு நாமம் போல் போடுகிறார்கள். ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism