Published:Updated:

அன்னதானத்துக்கு ஏழுமலையான் கொடுத்த பரிசு!

ஏழுமலையான்
பிரீமியம் ஸ்டோரி
ஏழுமலையான்

பிரேமா நாராயணன்

அன்னதானத்துக்கு ஏழுமலையான் கொடுத்த பரிசு!

பிரேமா நாராயணன்

Published:Updated:
ஏழுமலையான்
பிரீமியம் ஸ்டோரி
ஏழுமலையான்

'நிலையூர், சக்கி மங்கலம் போன்ற கிராமங்களில் வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்த ஏழை நெசவாளர்களுக்கும் உணவு வழங்கினோம். இப்படி 120 நாள் இந்தச் சேவை தொடர்ந்தது. மன நிறைவான பணி அது!'

ஏழுமலையான்
ஏழுமலையான்

ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள் கடவுள் சேவை செய்வதும், அதன் பொருட்டு அர்ப்பணிப்புடன் கடும் உழைப் பைக் கொடுப்பதும் வழக்கமாக நடப்பவைதான். ஆனால், 49 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு, அதனால் இதயத்தில் ஒரு கருவியைப் பொறுத்தி அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட ஒருவர், அதன் பின்னரும் ஆண்ட வன் சேவையில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத் திக் கொள்கிறார் எனில், அவரின் இறைத் தொண்டு போற்றத்தக்கதுதான்.

இப்படியான இறைத்தொண்டுக்கும் அறப்பணிக்கும் சொந்தக்காரார், மதுரையைச் சேர்ந்த ராதா மோகன்ராம்.

ராதா மோகன்ராம்
ராதா மோகன்ராம்


``சின்ன வயசிலிருந்து எனக்குப் பொதுச் சேவைகளில் ரொம்ப ஈடுபாடு. அதிலும் முக்கியமா, பிறருக்கு சாப்பாடு போடுறதுன்னா அவ்வளவு பிடிக்கும். 14 வயசில் கல்யாணமாயிடுச்சு. கணவர் மோகன்ராம். ரெண்டு பையன்; ஒரு பொண்ணு. எல்லோரும் கல்யாணம் முடிந்து செட்டிலாயிட்டாங்க. அதனால் 40 வயசிலேயே குடும்பக் கடமை களை எல்லாம் முடிச்சு, ஃப்ரீ ஆயிட்டேன். என் விருப்பம் போல ஆன்மிகத்தில் நுழைய அது வசதியா இருந்தது.

அதுக்கப்புறம் முழுக்க முழுக்க சேவைகளில் இறங்கிட்டேன். சதுர்த்தியில் கொழுக்கட்டை செய்து கொடுக்கறது, நவராத்திரி தருணத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோயிலில் உற்சவர் அம்மனுக்குத் தினமும் ஓர் அலங்காரம் நானே செய்து, பிரசாதம் நைவேத்தியம் செய்து விநியோகிக்கறதுன்னு எப்போதும் சுவாமி காரியங்களைப் பிரியமா செய்வேன்!’’ என்று தொடங்கினார் ராதா.

‘`1998-ல் கேட்டரிங் ஆரம்பிச்சேன். மலேசியாவில் நான் இருந்த போது அங்கேயும் ரெண்டு வருஷம் மெஸ் வெச்சு நடத்தினேன். விசா பிரச்னையால் இங்கேயே வந்துட்டேன். பிறகு, எல்லா விசேஷ ஆர்டர்களும் எடுத்து, ஆள் வெச்சு சமைச்சு அனுப்பினேன். முக்கியமா கோயில் விசேஷங்கள், ஐயப்பன் பூஜைக்கெல்லாம் ஆர்டர் வந்தால் கம்மியான விலையில் செய்து கொடுப்பேன்.

அப்படித்தான் கொரோனா ஊரடங்கு நேரத்துல லண்டனிலிருந்து ஒருத்தர் போன் பண்ணினார். அவங்க அம்மாவின் நினைவு நாளுக்கு சாப்பாடு செய்து முதியோர் இல்லத்தில் கொடுக்கணும்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லி எல்லாம் தயார் செய்துட்டேன். ஆனால், ஊரடங்கு காரணமா எந்த முதியோர் இல்லமும் திறக்கல.

அதனால் லண்டன் அன்பருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். சமைச்சு வெச்சதை சாலையோரத்தில் வசிக்கும் - சாப்பாட்டுக் கஷ்டப்படறவங்களுக்குக் கொடுக்கட்டுமா எனக் கேட்டேன். அவரும் ஒப்புக்கொள்ள என் பையன் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துச் சென்று மாட்டுத் தாவணி பக்கம் சாலையோரம் பசியோட இருந்தவங்களுக்குக் கொடுத்துட்டு வந்தான்.

`அவங்களை எல்லாம் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கும்மா’ன்னு சொன்னான். அப்பதான்... இதேபோல 100 பேருக்குச் சாப்பாடு கொடுத்தால் என்னன்னு தோணுச்சு. 100 பேருக்கு மதியம் ஒரு சாப்பாடு பொட்டலம் கொடுக்கணும்னா 3000 ரூபாய் வரும்னு ஒரு மெசேஜை வாட்ஸ்ஆப் குரூப்பில் என் சொந்த, பந்தம் எல்லாருக்கும் தட்டிவிட்டேன். 30,000 ரூபாய் சேர்ந்தது.

நாலு மாசம் தொடர்ந்து தினமும் ஒரு வெரைட்டி ரைஸ், துவை யல் செய்து கொண்டு போய் ஏழை பாழைங்களுக்குக் கொடுத்தோம். அந்த ஊரடங்குக் காலத்துல சாப்பாடு கிடைக் காம கஷ்டப்பட்ட அந்த சனங்க சந்தோஷமா பசியாறினாங்க. சாப்பாட்டுடன் தண்ணீர் பாட்டிலும் விநியோகித்தோம். அதுக்காகவே ஆர்.ஓ. யூனிட் ஒண்ணு போட்டோம். தெரிஞ்ச அன்பர் ஒருத்தர், 5000 பாட்டில் ஸ்பான்ஸர் பண்ணினார். அதிலே தண்ணீர் பிடிச்சுக் கொண்டு போவோம்..

அன்னதானம்
அன்னதானம்


தினமும் காலையில் எந்திரிச்சு சமைச்சு, பேக் பண்ணி வண்டியில் எடுத்துட்டுப் போய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் விநியோகிச்சோம். நிலையூர், சக்கி மங்கலம் போன்ற கிராமங்களில் வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்த ஏழை நெசவாளர்களுக்கும் உணவு வழங்கினோம். இப்படி 120 நாள் இந்தச் சேவை தொடர்ந்தது. மன நிறைவான பணி அது’’ என்றார் ராதா.

‘`இப்போதும் அன்னதானம் தொடர்கிறதா?’’

‘`இல்லை. ஊரடங்கு தளர்ந்து போக்குவரத்த மக்கள் நடமாட்டம் சகஜமானதும்... உதவி அவசியப்படாத மற்றவங்களும் வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. அதைத் தடுக்க முடியாதே!

இப்போ பௌர்ணமி, அமாவாசை தினங்கள்ல மட்டும் நரசிங்கம் கோயில் வாசலில் அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் கொடுக்கிறோம். பிறந்தநாள், கல்யாண நாள், நினைவு நாள் என்று யாரேனும் ஸ்பான்ஸர் பண்ணுவாங்க. அப்படி ஸ்பான்ஸர் கிடைக் காதபோது, என் சொந்த செலவில் பண்ணிடு வேன். எதுக்காகவும் அன்ன தானத்தை நிறுத்துவதில்லை!’’ என்கிறார்.

பிரதிபலன் எதிர்பார்க்காமல் இவர் செய் யும் இந்தச் சேவைக்கு ஆண்டவன் இவருக்கு அளித்திருக்கும் பரிசு மிகப் பெரியது. அதை அவரே விவரித்தார்.

‘`2007 முதல் வருஷத்துக்கு ரெண்டு, மூணு தடவை திருப்பதிக்கு வாரி சேவைக்குப் பெண்கள் குழுவைக் கூட்டிட்டுப் போய்ட்டிருந்தேன். 2011-ம் வருஷம் ஒரு ரதசப்தமி அன்று திருப்பதியில் சேவையில் இருக்கும்போதே, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

அங்கேயே மூணு நாள் ஐ.சி.யூவில் வெச்சு நல்ல சிகிச்சை கொடுத்து, பிறகு கீழ் திருப்பதியில் இருக்கிற ஆஸ்பத்திரிக்கு மாத்தினாங்க. இதயத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கு. ஆனாலும் மருந்திலேயே சரி பண்ணலாம்னு சொன்னாங்க. சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்.

2013-ல் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ‘ஸ்டென்ட்’ வெச்சாங்க. அதுக்கு அடுத்த வருஷமே, என்னுடைய இதயத்தின் ‘இ.எஃப்’ ரேட் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. 35-க்கு கீழே வந்தால் உயிர் வாழ்வது கஷ்டமாம். எனக்கு 18தான் இருந்தது.

ஸி.ஆர்.டி (CRT) என்கிற கருவியை, உள்ளேயே பொருத்தினாங்க. நான் உயிரோடு இருந்ததே அவங் களுக்குப் பெரிய ஆச்சர்யம். மாசம் ஒரு தடவை போன் பண்ணி, ‘என்னம்மா நடமாடுறீங்களா?’ன்னு கேட்பாங்க. நான் ஜோரா வழக்கம் போல கோயில் பிரசாத சேவை, அனந்தானம், கேட்டரிங்னு பிஸியாக இருந்தேன்.

லட்சக்கணக்கில் செலவு பண்ணி வெச்சுக்கிட்ட அந்தக் கருவிக்கு ஆயுள் 5 வருஷம்தான். 4 வருஷத்துக்கு ஒரு முறை ‘ரீசார்ஜ்’ பண்ணனும். 2018-ல் ரீசார்ஜ் பண்ணினோம். 2022-ல் திரும்ப ரீசார்ஜ் பண்ணனும். ஆனால் சமீபத்தில் செக்கப்புக் குப் போயிருந்தப்ப, அந்தக் கருவியை செக் பண் ணிட்டு, இன்னும் 4 வருஷங்களுக்கு நல்லா இருக் கும்னு சொல்லிட்டாங்க!

‘ரிட்டர்ன் கிஃப்ட் இவ்வளவு பெரிசா கொடுத் துட்டியே பெருமாளே’ன்னு பூரிச்சுப் போனேன். பலன் எதிர்பாராமல் அன்ன தானம் பண்ணினதுக்கு ஆண்டவன் என் ஆயுசுக்குக் கொடுத்திருக்கும் போனஸ்தான் இந்த நாலு வருஷம்னு நினைக்கிறேன்! இன்னும் சில வருஷம் மனுஷாளுக்கு சேவை செய்ய அனுமதி கொடுத்திருக்கான். எனக்கு அதுவே போதும்!’’ என்று தழுதழுக்கும் குரலில் கூறிய ராதா, அன்றைய அன்னதானத்துக்கான வேலைகளில் மூழ்கினார். சாம்பார் சாதத்தின் மணம் காற்றில் கலந்து வந்தது.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!’ என்கிறது மணி மேகலை. ‘இங்கே உண்டி கொடுத்து உயிர் பெற்றார்’ என்பது நிஜம்.

பிள்ளை வரம் அருளும் வளையல் பிரசாதம்!

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம்!

ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக் கிழமை அனுசரிக்க வேண்டிய வழிபாடு வரலட்சுமி விரதம். அன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்புக் கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.