பிரீமியம் ஸ்டோரி

கா காளர் - சிவபெருமானின் தலையாய தொண்டர்கள் வரிசையில் முதல் மூவரில் ஒருவர். பெரிய பாம்பு வடிவம் கொண்டவர். இவர் அடிக்கடி பூமிக்கு வந்து சிவபூஜை செய்து மேன்மை பெற்றுள்ளார். அவர் அமைத்த சிவலிங்கங்கள் மகாகாளேஸ்வரர் என்ற திருப்பெயரில் திகழ்கின்றன.

இந்தச் சிவலிங்கங்கள் அருளும் தலங்கள் மாகாளம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளன. இரும்பை மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய தலங்கள் மகா காளர் வழிபட்ட தலங்களாகும்.

இரும்பை மாகாளத்தில் அருளும் ஈச்சன் மாகாள நாதர் ஆவார்; இறைவி குயில்மொழி நாயகி. இவ்வூர் புதுச்சேரிக்கு அருகிலுள்ளது. இங்கே காளியும் மாகாளரும் பாம்பு வடிவில் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி புடைப்புச் சிற்பமாகத் திகழ்கிறது.

அதேபோல் சோழநாட்டுத் தலமான அம்பர்மாகாளம் தற்போது `கோயில் திருமா(கா)ளம்' எனப்படுகிறது. இங்கே ஈஸ்வரன் காள கண்டேசர் என வணங்கப்படுகிறார். இங்குள்ள அம்பிகைக்குப் பயபக்ஷ நாயகி என்று திருப்பெயர். பயத்தைப் போக்குபவள் என்று பொருள்.

காளகஸ்தியும் மகா காளர் வழிபட்ட தலங்களில் ஒன்று. இங்கே அவருடன் யானையும் சிலந்தியும் பூஜித்து வழிபட்டுள்ளன. இந்த மூன்று அடையாளங்களையும் காளத்திநாதர் தன்னுடைய திருமேனியில் தரித்துள்ளார். காளத்திநாதரின் லிங்கத்திருமேனியில் உச்சியில் ஐந்து தலைப் பாம்பின் வடிவம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட்டால் நாகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

- பூசை ச.அருணவசந்தன், சென்னை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு