Published:Updated:

வராத பணம் வந்து சேரும்; தீராத துன்பங்கள் தீர்ந்து போகும்! பைரவ ஹோமங்களின் நன்மைகள்! சங்கல்பியுங்கள்!

காலபைரவர்

இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை

வராத பணம் வந்து சேரும்; தீராத துன்பங்கள் தீர்ந்து போகும்! பைரவ ஹோமங்களின் நன்மைகள்! சங்கல்பியுங்கள்!

இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை

Published:Updated:
காலபைரவர்

காரிய வெற்றியை அளிப்பதில் காலபைரவருக்கு இணையான தெய்வம் இல்லை என்பார்கள். எந்த காரியம் தடைபட்டு நிற்கிறதோ, அந்த காரியம் விரைவாக சுபமாக நடைபெற காலபைரவரை வேண்டிக்கொள்ள இனிதே நிகழும் என்பது கண்கூடு! தீயவருக்கு காலனாகவும் நல்லவருக்கு நண்பராகவும் விளங்கும் காலபைரவருக்கு தென்னாட்டில் ஒரு விசேஷமான கோயில் உண்டென்றால் அது வைரவன் கோயில் காலபைரவர் கோயில் தான் எனலாம்.

வைரவன் கோயில் காலபைரவர்
வைரவன் கோயில் காலபைரவர்

முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் ஈசனின் ஆணைப்படி வைரவன் கோயில் எனும் இடத்தில் காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் ஐவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.

இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை. இதனால் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர் ஆலய நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து இந்த மகாபைரவ ஆராதனையை நடத்த இருக்கிறோம். வெகு அபூர்வமான, துடியான இந்த ஹோமங்களில் நீங்களும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவ பைரவர் ஹோமம்
நவ பைரவர் ஹோமம்

வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு சிக்கல்கள் தரலாம். எனவே ராகு கேதுவின் அதிபதியான பைரவரை நீங்கள் ஆராதித்தால் அந்த துன்பங்களில் இருந்து விடுபடலாம். ராகு கேதுவை முப்புரி நூலாக ஏற்று இருப்பவர் பைரவ மூர்த்தி. இந்த மகாஹோமத்தில் கலந்து கொண்டால்... வரவேண்டிய பணம் வந்து சேரும். கடன் தொல்லைகள் நீங்கும். நோய்கள் தீரும். முதியவர்களுக்கு உண்டாகும் அத்தனை உபாதைகளும் சரியாகும். சனியின் கஷ்டங்கள் நீங்கும். பதவி உயர்வு உண்டாகும். அரசியலில் வெற்றி உண்டாகும். எல்லா வழக்குகளும் சாதகமாகும். கர்ம வினைகள் நீங்கி காரிய ஸித்தி உண்டாகும்.

சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் சகல நன்மைகளும் வேண்டி, அதேபோல் உலக அமைதிக்காகவும் இந்த வைபவத்தை நடத்த இருக்கிறோம். மார்ச் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் என 3 ஹோமங்கள் நடைபெற உள்ளன. மேலும் பைரவ மூல மந்திரங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் போன்றவையும் நடைபெற உள்ளது. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், அபூர்வமான ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமங்கள் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமங்கள் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம். மூன்று ஹோமங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு எல்லா நலன்களும் பெறுங்கள்.

பைரவ மூர்த்தி
பைரவ மூர்த்தி

"ஓம் கால காலாய வித்மஹே கால தீத்தாய தீமஹீ

தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" - பைரவ காயத்ரி மந்திரம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+விபூதி) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism