Published:Updated:

இனிதே நடைபெற்றது மஹா தன்வந்திரி ஹோமம்!

தன்வந்திரி ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
தன்வந்திரி ஹோமம்

தன்வந்திரி ஹோமம்

இனிதே நடைபெற்றது மஹா தன்வந்திரி ஹோமம்!

தன்வந்திரி ஹோமம்

Published:Updated:
தன்வந்திரி ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
தன்வந்திரி ஹோமம்

சித்த புருஷர்கள், நூற்றியெட்டு லட்சுமிதேவியர், மும்மூர்த்தியர் என சகல தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தரிசிக்க முடியுமா? நிச்சயம் முடியும்! மாம்பழத்துக்குப் பேர்போன சேலம் மாநகரம் ஆன்மிகச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது.

தன்வந்திரி ஹோமம்
தன்வந்திரி ஹோமம்


அவ்வகையில், சேலத்தில் குறை தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம். சேலம் ஜங்ஷன் - ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் அருகே வீரமாதுருபுரியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

முருகப்பெருமானின் 9-ம் படை வீடு என்று பக்தர்கள் போற்றும் இந்தப் பிரமாண்ட ஆலயத்துக்கான விதையை ஊன்றியவர்கள் அருள்சித்தர் செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் தான் என்கிறார்கள், ஆலய நிர்வாகத்தினர். இறையருள் பெற்ற இவர்கள் இருவருமே துன்பத்தில் உழன்றவர்களுக்குத் துயர் தீர்க்கும் ஞான வள்ளலாகத் திகழ்ந்தனராம். இவர்களின் குமாரர் சோம சுந்தரம், தற்போது இறை சேவையைத் தொடர்ந்து வருகிறார்.

காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம். சேலம் ஜங்ஷன்
காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம். சேலம் ஜங்ஷன்
தன்வந்திரி
தன்வந்திரி
அஷ்டலிங்க தரிசனம்
அஷ்டலிங்க தரிசனம்
திருப்பதி வேங்கடாசலபதி
திருப்பதி வேங்கடாசலபதி


தீர்த்தப் பிள்ளையார் தொடங்கி ஷீர்டி சாயிபகவான் வரை இங்கு சகல தெய்வங்களின் திருச்சந்நிதிகளும் உள்ளன. 18 சித்தர்கள், வள்ளி - தெய்வயானை சமேத காவடி பழனியாண்டவர், சர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், அலமேலுமங்கை சமேத திருப்பதி வேங்கடாசலபதி, தன்வந்திரி பகவான், சரபேஸ்வரர், 18 ஐம்பொன் சித்தர்கள், சீரடி சாய்பாபா என எண்ணற்ற சந்நிதிகள் இங்கு வெகு சாந்நியத்துடன் அமைந்துள்ளன.

இங்கு மட்டுமே 108 திருமகள் வடிவங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் பன்னிரு ராசியினரும் வழிபட்டுப் பலன் பெறும் வகையில் அமைந்திருக்கும் அஷ்டலிங்க தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும்.

ஸ்படிக லிங்கம் - துலாம், ரிஷப ராசியினர் வழிபடலாம்.

அக்னி லிங்கம் - செம்பில் உருவாக்கப்பட்ட இந்த லிங்கத்தைச் சிம்ம ராசியினர் வழிபட்டுப் பயன்பெறலாம் என்கிறார்கள்.

எம லிங்கம் - விருச்சிகம் ராசிக்கு உகந்தது.

நிருதி லிங்கம் - வெண்கலத்தால் ஆனது; மேஷ ராசியினர் வழிபடலாம்.

வருண லிங்கம் - பச்சையத்தால் ஆனது. மகரம் மற்றும் கும்ப ராசியினர் வழிபட்டு வரம் பெறலாம்.

வாயு லிங்கம் - பாதரசத்தால் ஆனது. கடக ராசிக்கு உகந்தது.

குபேர லிங்கம் - சொர்ணத்தால் ஆனது. தனுசு மற்றும் மீன ராசிக்கு உகந்தது.

ஈசான லிங்கம் - வெள்ளியால் ஆனது; மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு உகந்தது.

சந்நிதிகளால் மட்டுமன்றி அனுதினமும் நிகழும் வழிபாட்டு வைபவங்களாலும் பங்குனிப் பிரம்மோற்சவப் பெருவிழாவாலும் புகழ்பெற்றுத் திகழ்கிறது இந்தத் திருத்தலம். சகல தெய்வங்களின் சாந்நித்தியமும் பொங்கிப்பெருகும் தலமாக இருப்பதால், இந்த அஸ்ரமத்துக்குச் சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

தன்வந்திரி ஹோமம்
தன்வந்திரி ஹோமம்


அற்புதமான இந்தத் தலத்தில்தான் சக்திவிகடன் சார்பில் மஹா தன்வந்திரி ஹோமம் சிறப்புற நடைபெற்றது. சக்திவிகடனும் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம் - ஆலய நிர்வாகமும் இணைந்து வழங்கிய இந்த ஹோமம், கடந்த ஆகஸ்ட் 20 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

ஆவணி 4-ம் நாள் தேய்பிறை நவமியும் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய விஷ்ணுவுக்கு உகந்த சனிக்கிழமையில் காலை 10.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுடன் ஹோம வைபவங்கள் தொடங்கின. விழா வைபவத்துக்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகம் சார்பில் மிகவும் சிறப்புற செய்யப்பட்டிருந்தன. பிரதான தெய்வமான முருகப் பெருமானுக்கு அன்றைய தினம் தன்வந்திரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு.

நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற சிறப்புப் பிரார்த்தனையும் வேண்டுதலையும் சங்கல்பித்தோம். முன்பதிவு செய்திருந்த அனைத்து வாசகர்களின் பெயர் நட்சத்திரம் கூறி, அவர்களின் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய சங்கல்பத்தோடு ஹோம வைபவ வழிபாடுகள் நடந்தேறின. நிறைவில் அனைவருக்கும் பிரசாத விநியோகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் அருளும் சித்தபுருஷர்கள், மும்மூர்த்தியர், 108 லட்சுமிதேவியர் உள்ளிட்ட சகல தெய்வங்களின் திருவருளாலும் முருகப்பெருமானின் அனுக்கிரஹத்தாலும் வாசகர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கட்டும்; அனைவருக்கும் சகலவிதமான நன்மைகளும் கைகூடட்டும்; தன்வந்திரி பகவான் திருவருளால் தேக ஆரோக்கியம் சிறக்கட்டும் என்று நாமும் வேண்டி வழிபட்டு விடைபெற்றோம்.

ஆலயத் தொடர்புக்கு - 94432 47505