Published:Updated:

பயங்களைப் போக்கும் பைரவருக்கான 3 மகாஹோமங்கள்... ராகு-கேது பெயர்ச்சியில் பலன் பெற சங்கல்பியுங்கள்!

ஸ்ரீசொர்ணகால பைரவர்

பைரவ மகாஹோமங்கள்: திருவையாறு வைரவன் கோயில் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் கோயிலும் தமிழகத்தில் சிறப்பானது. இது தென்னாட்டு வாரணாசி என்றும் போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை.

Published:Updated:

பயங்களைப் போக்கும் பைரவருக்கான 3 மகாஹோமங்கள்... ராகு-கேது பெயர்ச்சியில் பலன் பெற சங்கல்பியுங்கள்!

பைரவ மகாஹோமங்கள்: திருவையாறு வைரவன் கோயில் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் கோயிலும் தமிழகத்தில் சிறப்பானது. இது தென்னாட்டு வாரணாசி என்றும் போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை.

ஸ்ரீசொர்ணகால பைரவர்
'அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் யாவும் தீரும்' என்பது ஆன்றோர் மொழி. பயங்களைப் போக்கும் பைரவர் நவகிரகங்களுக்கு தலைமை வகிப்பவர். 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். இதனால் இவரை வழிபட துன்பங்கள்-தோஷங்கள்-பாவங்கள் யாவும் விலகி சகல செல்வங்களும் பெருகும். ஒவ்வொரு தேய் பிறை அஷ்டமி நாளில் பைரவரை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
திருவையாறு வைரவன் கோயில்
திருவையாறு வைரவன் கோயில்

சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவரும் ஒருவர். இவரே சிவாலயங்களில் காவல் தெய்வம். 12 கரங்களுடன், சந்திரனை தலையில் சூடி, ராகு- கேதுவைப் பூணூலாகவும், கையில் சூலாயுதம், அங்குசம், பாசக்கயிறு ஏந்தி நாயை வாகனமாகக் கொண்டவர் இவர். தீயவர்களுக்கு அச்சமூட்டும் வடிவம் கொண்ட இவர், நல்லவர்களுக்கு நன்மைகள் செய்யக் கூடியவர்.

'விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி...' என்று பைரவ கோலத்தை வியந்து பாடுவார் திருநாவுக்கரசர். காலத்தின் கடவுளான இவரை வணங்க காலபயம் நீங்கும். நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீடித்தப் புகழும் நீங்காத ஆரோக்கியமும் கிட்டும் என்பதும் ஆன்றோர் வாக்கு. நலங்கள் யாவும் அருளும் பைரவரை காசியில் வழிபடுவது சிறப்பு.

அதேபோல் திருவையாறு வைரவன் கோயில் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் கோயிலும் தமிழகத்தில் சிறப்பானது. இது தென்னாட்டு வாரணாசி என்றும் போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை. இதனால் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர் ஆலய நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து இந்த மகாபைரவ ஆராதனையை நடத்த இருக்கிறோம். வெகு அபூர்வமான, துடியான இந்த ஹோமங்களில் நீங்களும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

ஸ்ரீகாலபைரவர் கோயில்
ஸ்ரீகாலபைரவர் கோயில்

ராகு கேதுவை முப்புரி நூலாக ஏற்று இருப்பவர் பைரவ மூர்த்தி. இதனால் இந்த மாதம் நடைபெற இருக்கும் ராகு - கேது பெயர்ச்சியால் அச்சம் கொண்டிருக்கும் ராசிக்காரர்கள் (முக்கியமாக கடகம், கன்னி, துலாம், விருச்சிகம்) இவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்க நன்மைகள் உண்டாகும். வாழ்க்கை பற்றிய பயம், எதிரி பயம், தீராத நோய், அச்சமூட்டும் கடன் சுமை, நீக்காத தரித்திரம், சரியாக அமையாத மணவாழ்வு, பொருளாதார வழக்குகள், வீண் வம்புகள், என எந்த பயமாக இருந்தாலும், அது நீங்க, பைரவரை வணங்கினால் நீங்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் சகல நன்மைகளும் வேண்டி, அதேபோல் உலக அமைதிக்காகவும் இந்த வைபவத்தை நடத்த இருக்கிறோம். மார்ச் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் என 3 ஹோமங்கள் நடைபெற உள்ளன. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், அபூர்வமான ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமங்கள் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமங்கள் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம். 3 ஹோமங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு எல்லா நலன்களும் பெறுங்கள்.

பைரவ மகாஹோமங்கள்
பைரவ மகாஹோமங்கள்
"ஓம் கால காலாய வித்மஹே கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" - பைரவ காயத்ரி மந்திரம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+விபூதி) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.