Published:Updated:

ஸ்ரீ வாகீஸ்வரி உடனாகிய ஸ்ரீ பதினெண் புராணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ வாகீஸ்வரி உடனாகிய ஸ்ரீ பதினெண் புராணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Published:Updated:

ஸ்ரீ வாகீஸ்வரி உடனாகிய ஸ்ரீ பதினெண் புராணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

ஸ்ரீ வாகீஸ்வரி உடனாகிய ஸ்ரீ பதினெண் புராணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசான்யதெருவில் சட்டநாத சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ வாகீஸ்வரி ஸ்ரீ பதினெண் புராணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பழைமையான இந்த ஆலயம் சிதிலமடைந்திருந்த நிலையில் கடந்த ஓராண்டாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

மகா கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேகம்

அனைத்துப் பராமரிப்புப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர் கடங்கள் மங்கள வாத்தியம் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அங்கு சிவாசார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானக் கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

மகா கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேகம்

தருமை ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.