Published:Updated:

மனித சேவையும் பகவத் சேவையும்

காஞ்சி மகாபெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி மகாபெரியவர்

காஞ்சி மகாபெரியவர்

மனித சேவையும் பகவத் சேவையும்

காஞ்சி மகாபெரியவர்

Published:Updated:
காஞ்சி மகாபெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி மகாபெரியவர்

மனிதர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்படி செய்வது, நோயை குணப்படுத்துவது, கல்வி அறிவு தருவது எல்லாமே பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது, `மனித சேவை, பகவத்சேவை' என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை என்று தெரிகிறது. அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது, அதுவே மற்ற சேவைகளைக் காட்டிலும் மனிதனுக்கு நிரந்தரமான நலனைத் தருவதாகும்.

மனித சேவையும் பகவத் சேவையும்


ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளைச் சொஸ்தம் செய்து அனுப்புகிறோம். அவர்கள் அப்புறம் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அனர்த்தம் செய்து கொள்பவர்களாகவும் இருப்பவர்கள் சொஸ்தமடைந்து, திரும்பி வந்து அக்கிரமமான காரியங்களைத் தொடர்வதால், லோகத்துக்கு என்ன பயன்? அந்த வியாதி அனுபவம், அவர்களுக்குத் தெய்வ சோதனையாக வந்து அவர்களைப் புனிதப்படுத்துவது என்ற பலன் கிடைக்க வேண்டாமா? அதற்கு ஆலயம் உதவும் அல்லவா? ஆஸ்பத்திரி வைத்து நோயாளியின் உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது, நோயாளிகளது மனத்தில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்!

- காஞ்சி மகாபெரியவர்