Published:Updated:

மகா பெரியவா - 37

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 37

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா

சாலை மார்க்கமாகக் காசிக்குப் போக தீர்மானித்தார் மகா பெரியவா. முன்னதாகக் காசிக்குச் செல்வதற்கு வசதியான வழிகளைத் தெரிந்துகொள்ள விரும்பினார். இதற்காக தென்காசியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ண சர்மா என்னும் இருபது வயது இளைஞனை அனுப்பிவைக்க முடிவானது. அப்போது அனந்தகிருஷ்ண சர்மாவுக்குச் சில நிபந்தனைகளையும் விதித்தார் சுவாமிகள்...

1. காசியை அடையும்வரை முழுவதும் நடந்தே செல்லவேண்டும்.

2. தேவையான உணவை அவரே தயாரித்துக்கொள்ள வேண்டும். காபி, டீ முதலிய பானங்களை அவர் அருந்தக்கூடாது.

3. உணவு தயாரித்துக்கொள்ள சில பாத்திரங்களையும் மிகவும் அவசியமான உடமைகளையே அவர் எடுத்துச்செல்ல வேண்டும்.

4. உணவு தயாரித்துக்கொள்ளத் தேவையான அரிசியையோ, கோதுமை மாவையோ போகுமிடங்களில் அன்பர்களிடம் யாசித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவரிடமும் பணம் வெகுமதியாகப் பெற்றுக்கொள்ளக் கூடாது.

5. உடல்நிலை காரணம் தவிர, ஓர் ஊரில் ஒரு நாளைக்கு மேல் தங்கக் கூடாது.

6. சுவாமிகளின் உத்தரவின்படி நடந்து காசி யாத்திரை செல்வதாக அவர் ஆங்காங்கே மக்களிடம் சொல்லிக்கொள்ளலாம் (ஆனால், அவரிடம் எவ்வித அடையாளச் சீட்டும் வழங்கப்படவில்லை).

7. அனந்தகிருஷ்ண சர்மாவிடம் கொடுக்கப்பட்ட போஸ்ட் கார்டுகளில் அவர் சென்ற ஊர்களின் பாதையின் தன்மைகளைப் பற்றியும் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் காப்பியிங் பென்சிலினால் சுருக்கமாக எழுதி மடத்துக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும். அவரிடம் கொடுத்திருந்த போஸ்ட் கார்டுகள் குறைந்தவுடன் அவ்வப்போது அவருக்குக் கார்டுகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

8. காசியிலிருந்து திரும்பும்போது இந்தியில் பேசக் கற்றுக்கொண்டு வர வேண்டும். திரும்பி வரும்போது ரயிலில் வர அனுமதி அளிக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பாத யாத்திரையாக காசிக்குச் செல்வதென்பது யாராலும் எளிதில் செய்யக்கூடியது அல்ல. மகா பெரியவாவிடம் ஒப்பற்ற பக்தியும், மன வலிமையும், உடல் வலிமையும் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்பது நிச்சயம். அனந்த கிருஷ்ண சர்மாவுக்கு இவை அனைத்துமே ஒருசேர அமைந்திருந்தன.

அவருக்குத் தமிழுடன் ஆங்கிலமும் பேசத் தெரிந்திருந்தது. சுவாமிகளின் கட்டளைகளைச் சிரமேற்று, அவர் இட்ட நிபந்தனைகளிலிருந்து சிறிதும் வழுவாமல், சுமார் ஆறு மாதங்களில் காசியை அடைந்தார். அவர் ஒவ்வொரு நாளும் மடத்துக்கு எழுதி அனுப்பிய போஸ்ட் கார்டுகளில் ரசமான சில விஷயங்கள் புலப்பட்டன.

ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு உள்ள தூரத்தையும், பாதை நிலைமையையும், தண்ணீர் வசதியையும் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தார். பெரியவா உத்தரவின்படி தாம் காசிக்கு நடந்து செல்வதாக ஆங்காங்கே உள்ள ஊர் மக்களுக்கு அவர் தெரிவித்தவுடன், பலர் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவார்களாம். அவர்களில் படித்த பெரியோர்களும் இருப்பார்கள். `நான் ரொம்ப சின்னவன். எனவே, என்னை வணங்க வேண்டாம்' என்று சர்மா எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டார்களாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1933-ம் வருடம் செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில், தஞ்சாவூரிலிருந்து யாத்திரையைத் தொடங்கினார் மகா பெரியவா. இந்த யாத்திரை பூர்த்திபெற 21 வருடங்கள் ஆயின.

அநேகமாக பகல் நேரத்தில் பயணிப்பதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், ஒருநாள் அடர்ந்த காடுகள் அமைந்த சாலை வழியே அவர் செல்லும்போது, சூரியன் அஸ்தமித்து விட்டது. ஆபத்தான மிருகங்கள் வசிக்குமிடம் அது. அதனால், சர்மா தொடர்ந்து நடந்து செல்லாமல், சாலையைச் செப்பனிடும் ஓர் இரும்பு உருளையின் உட்புறம் பதுங்கிக்கொண்டு, இரவு முழுவதும் அங்கேயே கழித்திருக்கிறார். ‘அப்போது அந்த வழியே இரண்டு புலிகள் சென்றதைப் பார்த்தேன். நல்லவேளை, உருளைக்குள் மறைந் திருந்ததால், நான் காப்பாற்றப்பட்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அனந்தகிருஷ்ண சர்மா.

இப்படிப் பல அனுபவங்களைக் கடந்து அவர் காசியை அடைந்து அங்கே சில நாள்கள் தங்கியிருந்தார். பின்னர், மகாபெரியவா உத்தரவின் படி, காசியிலிருந்து மடத்தின் ஏஜென்ட் அவரை ரயில் மூலம் கும்பகோணத்துக்கு அனுப்பிவைத்தார். திரும்பிய சர்மா, பெரியவாளை தரிசித்து தாம் பெற்ற அனுபவங்களைத் தெரிவித்தார்.

மகா பெரியவா - 37

அவரது ஆழ்ந்த பக்தியையும் விடாமுயற்சி யையும் மிகவும் பாராட்டி ஆசி வழங்கினார் பெரியவா. அனந்தகிருஷ்ண சர்மா பின்னர் மணம் புரிந்துகொண்டு, மக்கள்பேறு பெற்றார். மடத்திலேயே இறுதிவரை ஊழியம் செய்து வந்தார்.

அனந்தகிருஷ்ண சர்மா சென்ற மார்க்கத்திலேயே, கங்கா யாத்திரையை நடத்துவதென்று தீர்மானித்தார் பெரியவா. அங்கங்கே தங்குவதற்கு இட வசதிகளைக் கவனித்து வரும்படி குன்னக்குடி சுவாமிநாத ஐயர் என்பவரை 1932-ம் வருட இறுதியில் வடஇந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்.

அவர்மூலம் சுவாமிகள் கங்கா யாத்திரைக்கு வருவதை அறிந்த கங்காதீரவாசிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மடாதிபதியின் வருகையை வெகு சீக்கிரமாக எதிர்பார்ப்பதாகவும் சுவாமிகளுக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் வேண்டிய வசதிகளையெல்லாம் செய்துகொடுக்க அவர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் சுவாமிகளுக்கு வரவேற்பு பத்திரிகைகள் எழுதிச் சுவாமிநாத ஐயர் மூலம் அனுப்பிவைத்தார்கள்.

அப்போது மகா பெரியவா விஜயம் செய்திருந்த, தஞ்சை மாவட்டம் குற்றாலத்துக்கு அடுத்த கோமல் என்ற கிராமத்துக்கு 23.4.1933 அன்று வந்து சேர்ந்தார் சுவாமிநாத ஐயர். அவரிடம் பாதை செளகரியங்களையெல்லாம் விசாரித்துக்கொண்டு, அடுத்த சாதுர்மாஸம் முடிந்தவுடன் யாத்திரை தொடங்கவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டார் மகா பெரியவா. அதையொட்டி தஞ்சையில் நடந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளாகிய விஜயதசமி அன்று காமகோடி பீடாதிபதிகளின் கங்கா யாத்திரை தொடங்கியது.

ஒளரங்கசீப் காலத்திலிருந்து, பின்வந்த நவாபுகள் காலங்களிலும் பீடத்தின் அதிபர்கள் யாத்திரை செய்யும்போதெல்லாம் சுங்கச் சாவடி களில் எவ்விதச் சுங்கவரிகளும் வசூலிக்கக் கூடாது என்றும், அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் சுவாமிகளின் பயணத்துக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்துகொடுக்க வேண்டுமென்றும் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசுகள் உத்தரவு பிறப்பித்திருந்தன. பின்னர் வந்த கிழக்கிந்திய கம்பெனியாரும் இந்த உத்தரவுகளை உறுதி செய்து, உத்தரவுப் பிறப்பித்தார்கள் (18-4-1972).

மகா பெரியவா - 37

அந்தக் காலத்தில் காமகோடி பீடத்தின் ஆசார்ய சுவாமிகள் 500 சிப்பந்திகளும், 25 மாட்டு வண்டிகளும், 20 குதிரைகளும், 5 ஒட்டகங்களும், 3 யானைகளும், 10 பல்லக்குகளும் கொண்ட பரிவாரங்களுடன் காசிக்குச் சென்று வந்திருப்பது அந்த உத்தரவுகளிலிருந்து தெரியவருகிறது.

திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை முதலிய சமஸ்தானங்களில் மகா பெரியவா விஜயம் செய்தபோதும், அந்தந்த அரசுகள் மடத்தின் கால்நடைகளுக்கும் வண்டிகளுக்கும் பாதைகளில் சுங்கம் வசூலிப்பதை விலக்கியதுடன், அரசுக் கட்டடங்களில் சுவாமிகள் தங்குவதற்கு வசதியளிக்கவும், காவல்துறை, ரெவின்யூ அதிகாரிகள் மூலம் மடத்துக்கு வேண்டிய சௌகர்யங்களைச் செய்துகொடுக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

மகா பெரியவா அவர்களின் வடஇந்திய யாத்திரையின்போது, சென்னை அரசு உத்தரவு மூலம் (26-11-1933), சுவாமிகள் யாத்திரை செய்யத் திட்டமிட்டிருக்கும் மற்ற மாகாணங்களுக்கும் சுதேச சமஸ்தானங்களுக்கும்... சுவாமிகளின் யாத்திரைக்கு வேண்டிய வசதிகளை அரசு தம் சிப்பந்திகள் மூலம் செய்துகொடுக்க வேண்டுமென ஓர் வேண்டுகோளை விடுத்தனர்.

அதன்படி ஐதராபாத் ராஜ்ஜியம், மத்ய மாகாணம், ஐக்ய மாகாணம், பீகார், ஒரிஸா மாகாணங்கள், வங்காளம், கிழக்கு சமஸ்தானங் களைச் சேர்ந்த அதிகாரிகள், மகா பெரியவா யாத்திரைக்கு எல்லா வசதிகளையும் அளித்தனர்.

1933-ம் வருடம் செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில், தஞ்சாவூரிலிருந்து யாத்திரையைத் தொடங்கினார் மகா பெரியவா. இந்த யாத்திரை பூர்த்திபெற 21 வருடங்கள் ஆயின.

பதமலர் இரண்டும் இன்னல்கள் நீக்கிட

கண்மலர் இரண்டும் கருணையைப் பொழிந்திட

கைகளிரண்டும் ஆசிகள் வழங்கிட

திருவாய் மலரோ அருளுரை வழங்கிட...

என்ற பாடலுக்கேற்ப பெரியவா நடந்து சென்ற இடங்கள் எல்லாம் புனிதமடைந்தன.

- வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism