Published:Updated:

பதினாறு நெய் விளக்கு பவானி அஷ்டகம்!

வாசகர் ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் ஆன்மிகம்

மகாபெரியவர் வழிகாட்டிய கல்யாண வழிபாடு - வாசகர் ஆன்மிகம்

பதினாறு நெய் விளக்கு பவானி அஷ்டகம்!

மகாபெரியவர் வழிகாட்டிய கல்யாண வழிபாடு - வாசகர் ஆன்மிகம்

Published:Updated:
வாசகர் ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் ஆன்மிகம்

நம் வாழ்க்கை, பாதை தெரியாத பயணம் இல்லையா? இன்னைக்கு இங்கு இப்படி இருக்கோம். நாளைக்கு... என்ன செய்வோம், எப்படி இருப்போம்கிறது அந்த சர்வேஸ்வரனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்படியொரு ரகசியப் பாதையில் பயணிக்க, நமக்குக் கிடைச்ச வழித்துணைதான் பக்தி.

இருட்டா இருக்கிற இடத்துல ஒரு விளக்கு எப்படி உதவுமோ, அப்படி ஒரு விளக்குதான் நம் நம்பிக்கை. எனக்கு பகவான் மேல பக்தியும் மகாபெரியவா மேல நம்பிக்கையும் உண்டு. இந்த இரண்டும்தான் வாழ்க்கையில் எனக்குப் பிடிமானம்.


நம்பிக்கைன்னா... சக மனுஷன் மேல வைக்கிற, அசைச்சா ஆடிப்போற நம்பிக்கை இல்லை; எவ்வளவு அசைச்சாலும் ஆடாத நம்பிக்கை. இத்தனைக்கும் என் வாழ்க்கைல, எனக்கு ஒருமுறை கூட மகா பெரியவாளை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைச்சதே இல்லை. ஆனால் அவரை தரிசனம் பண்ணி, அவர்மேல் பக்தி செய்தவர் என் வாழ்க்கைத் துணையாய் கிடைச்சார். அவர்கிட்ட இருந்துதான் எனக்கு மகாபெரியவா மேல் இவ்வளவு அன்பும் பக்தியும் உண்டாச்சுன்னுகூட சொல்லலாம்.

என் கணவர் மகாபெரியவாளிடம் மானசீகமா உரிமையோட பேசுவார். அவர் அளவுக்கு எனக்குப் பக்தி இருக்கான்னு சொல்லத் தெரியலை. ஆனால், என் வாழ்க்கையில் எந்தப் பிரச்னைன்னாலும் நான் போய் நிக்கிறது மகாபெரியவா சந்நிதிலதான்.

குறையே இல்லாத வாழ்க்கையைத்தான் அந்த மகான் எனக்கு ஆசீர்வாதம் பண்ணிருக்கார். ஆனாலும் அப்பப்போ ஏற்படுகிற சின்னச் சின்னக் குழப்பங்களையும் நான் அவர் பாதத்துல சமர்ப்பிச்சிடுவேன். அடுத்த கணமே அதற்கு ஒரு தீர்வும் கிடைச்சிடும். அப்படி சமீபத்துல நடந்த ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்கள்...

ஒரு மாமி எங்களுக்கு சமையல் பண்ணிக் கொடுப்பாங்க. அவங்க வீட்டுல லட்சுமி கடாட்சம் குறைவா இருந்தாலும், சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாயிருந்தது. அவங்களுக்கு ஒரு பொண்ணு. நல்ல படித்து பெரிய சாப்ட்வேர் கம்பெனில வேலைக்கும் போய்ட்டா. அவளுக்குக் கல்யாணம் பார்க்கிற கட்டம் வந்தது.

எப்படிப் பார்க்கிறது... யார் மூலம் பார்க் கிறது... சொந்தத்துல பார்க்கச் சொன்னா, எப்படிப்பட்ட சம்பந்தம் கிடைக்கும்... மாமிக்குக் குழப்பமான குழப்பம். இந்தத் தருணத்துலதான் யாரோ ஒருத்தருக்கு மகாபெரியவா சொன்ன யோசனை பற்றிக் கேட்க நேர்ந்தது.

அது வேற ஒண்ணுமில்லை... ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் நெய்விளக்கு ஏற்றணும். முதல் வாரம் ஒரு விளக்கு, இரண்டாம் வாரம் இரண்டு விளக்கு. மூன்றாம் வாரம் மூணு விளக்குன்னு பதினாறு வாரம் ஏற்றணும். கூடவே பவானி அஷ்டகத்தையும் சொல்லணும்.

நான் அந்தப் பெண்ணிடம் இந்த விவரத்தைச் சொன்னதுடன், பவானி அஷ்டகத்தையும் எடுத்துக்கொடுத்து படிக்கச் சொன்னேன்.

முதல் இரண்டு வாரம் விளக்கு ஏற்றியிருப்பாள்... அதுக்குள்ள ஒரு சம்பந்தம் தேடி வந்தது. பையன் அவள் படிப்புக்கு இணையா படிச்சிருக்கான். பையன் குடும்பத் துக்கும் பொண்ணை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

லாக்டௌன் நேரத்துல எப்படிப் பண்றதுன்னு ஒரே கவலை. ஆனா, காரியங்களை மனுஷங்க நடத்துறதாயிருந்தா கவலைப்படனும். நடத்துறது அந்த மகான் இல்லையா? எங்கிருந்து எல்லாமோ உதவிகள் வந்தன. ஒரு விக்னமும் இல்லாம கடந்த ஏப்ரல் 25-ம் தேதி கல்யாணம் நல்லவிதமா நடந்து முடிஞ்சிடுச்சி. அடுத்த நாலு வாரமா, அந்தப் பொண்ணும் பையனும் சேர்ந்து வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாங்க.

என்றைக்கோ, யாருக்கோ அந்த மகான் சொன்ன உபதேசம் இன்றும் எப்படிக் கைகண்ட மருந்தா பயன்படுறதுன்னு பார்த்தீங்கள்ல.

மகாபெரியவா எப்போதும் சூட்சுமமா நம் கூடவே இருந்து நம்மைப் பாத்துக்கிறார்ங்கிறதுக்கு இதைவிட வேற என்ன சாட்சி வேண்டும். அந்தப் பாதுகாப்பைப் பெற நமக்குத் தேவையானதெல் லாம் ஒண்ணுதான். அவர் மேல் வைக்க வேண்டிய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும்தான்.

- சாந்தி பாலசுப்பிரமண்யம், சென்னை

வழிபாட்டில் ஐந்து உபசாரங்கள் ஏன் தெரியுமா?

ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரணச் சந்திரனின் காட்சி ஆகிய இவை அனைத்தும் ஐம்புலன்களால்தான் நமக்கு அனுபவத்துக்கு வருகின்றன.

ஐம்புலன்களை நமக்குத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலான அழகு களையும் வைத்திருப்பவர் இறைவனே. பரம்பொருளின் கிருபையால்தான் சகல இன்பங் களும் கிடைக்கின்றன.

ஆக, அவருக்கே இந்த இன்பங்களை முதலில் அர்ப்பணித்து அவருடைய பிரசாதமா கவே நாம் ஏற்கவேண்டும். அப்போது, ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கத் தகாத எதையும் நம் புலன்களால் அனுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.

பஞ்ச இந்திரியங்களால் அனுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவத்தில் உண்டானதுதான் பஞ்ச உபசாரங்கள்.

கோயிலிலும் வீட்டிலும் சுவாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரங்கள் செய்ய வேண்டும். ஸ்வாமிக்குச் சந்தனம் இடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாரதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியவையே பஞ்ச உபசாரங்கள்.

சந்தனம் இடுவது பிருதிவி தத்துவம் மண்ணைக் குறிப்பது.

மலர்கள் சமர்ப்பிப்பது ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது.

தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அம்ருதமாகிய நீரைக் குறிப்பது.

ஆகவே, பஞ்ச உபசாரத்தில் ஐம்பூதங்களும் அடக்கம். இதில் ஈஸ்வரன், பிரப்பஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுப்படுத்தப்படுகின்றன!

- காஞ்சி மகாபெரியவரின் அருள் மொழிகள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism