Published:Updated:

மகா சுவாமிகளின் வழிகாட்டல்

மகாபெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகாபெரியவா

காஞ்சி மகாபெரியவா

மகா சுவாமிகளின் வழிகாட்டல்

காஞ்சி மகாபெரியவா

Published:Updated:
மகாபெரியவா
பிரீமியம் ஸ்டோரி
மகாபெரியவா

டமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மகாபெரியவரின் மகிமைகளை, அவருடைய வழிகாட்டல் சிறப்புகளை எப்போது யார் பேசினாலும் கேட்டாலும் பரமானந்தம்தான். சமீபத்தில் நான் படித்த அருள் சம்பவம் இங்கே உங்களுக்காகவும்.

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி. அவருக்கு இரண்டு பையன்கள், ஒரு பெண். மகா சுவாமிகளிடம் அபார பக்தி. மகாபெரியவா எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார்.

அப்படித்தான் ஒருமுறை மகா பெரியவரை தரிசிக்க வந்தார். மகா சுவாமிகளை வணங்கி, “இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

“செய்யேன்...”

“பையனின் கோத்திரம்... சூத்திரம் தெரியல்லே...” பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

“உன்னோட....பையன்தானே?”

``இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவ லோகம் போய்ச் சேர்ந்துட்டார். இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்சேர்ந்துவிட்டாள். கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்? நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம். ஊர், பெயர், பந்து, ஜனங்கள் தெரியலை. திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி...”

பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டரிடம், “பாரு... ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து வளர்த்துப் பூணூல் போடப் போறார். என்ன மனஸ் இவருக்கு...” என்று சிலாகித்தார்கள்.

தொடர்ந்து மனதுக்குள் பேரானந்தம் கொண்டவராய்ச் சொன்னார்கள்...

“கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதுமாதிரி சொல்லி பூணூல் போடு. ஆனா, குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே. உன் பையன்தான்.”

அந்த அருள் தெய்வமே சொன்னவுடன், ஏற்றுக்கொண்டு பிரசாதம் பெற்றுக்கொண்டு மனநிறைவுடன் நகர்ந்தார்கள், அந்த அதிகாரியும் உடன் வந்தவர்களும்.

- என்.மல்லிகா, சிதம்பரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism