புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

'அதிருத்ரம் பண்றியா?' காதில் ஒலித்த குரல்!

சிவன் சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் சார்

சிவன் சார்

சத்குரு சிவன் சார் பற்றியும் அவருடைய பக்தர்கள் பற்றியும் எழுத எழுதத்தான் அந்த மகானுடைய மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. தன்னைச் சரணடைந்தவர்களுக்கு, தாமதமின்றி கேட்டதைக் கொடுக்கும் மகா வள்ளல் அவர். அந்த அனுபவத்தைப் பெற்றவர்களில் சென்னை அடையாரைச் சேர்ந்த கோவிந்தராஜனும் ஒருவர்.

சிவன் சார்
சிவன் சார்


“நான் ஒரு பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்றேன். எனக்குக் குருமார்களுடனான அனுபவங்கள் நிறைய! எதுவாக இருந்தாலும் நான் வணங்குவது குருமார்களைத்தான்! எனக்கு அவங்க எல்லாரும் அருள் பண்ணியிருக்காங்க... பண்ணிட் டிருக்காங்க... இன்னும் பண்ணுவாங்க!

மகாபெரியவா, சேக்ஷாத்ரி ஸ்வாமி, ரமணர், ஷீர்டி பாபா... இவங்கள்லாம் நான் வணங்கும் முக்கியமான குருமார்கள். அதோடு என் ஐயப்ப குழுவின் லக்ஷ்மண குருசாமியும் உண்டு.

2015-ம் வருஷம்னு நினைக்கிறேன். மயிலாப்பூரில் கணேச சர்மா பெரியவாளுக்கு அனுஷ பூஜை பண்ணுவார். அதன் பிறகு புறப்பாடு இருக்கும். ஒரு முறை புறப்பாடுக்கு நான் போயிருந்தபோது, சிவசாகரம் சிவராமண்ணாவும் அங்கே வந்திருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ‘இவர்தான் சிவசாகரத்தில் சிவன் சாருக்குப் பூஜை பண்ணிட்டிருக்கும் சிவராமன்’னு அறிமுகப் படுத்தினாங்க. சிவன் சாரின் ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புத்தகத்தை அன்னிக்கு வாங்கினேன். அதோடு அவ்வளவுதான்! பார்த்துட்டு வந்தாச்சு!

சிவன் சார் பக்தர் கோவிந்தராஜன்
சிவன் சார் பக்தர் கோவிந்தராஜன்
Deepak Prabhakaran

பிறகு 2016-ல் எனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு. நான் ஒரு மாரத்தான் ரன்னர். அந்த ஆக்ஸி டென்ட்டால் என்னால ஓட முடியல. அதனால மனதளவில் பாதிக்கப்பட்டு ஒரு மாதிரி அப்செட்டா இருந்தேன். சரியா தூங்க முடியல. திடீர்ன்னு ஒரு நாள்... அது சொப்பனமா என்னன்னு தெரியல... மகா பெரியவா வந்து ‘அதிருத்ரம் பண்றியா?’ன்னு காதில் கேட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அப்போ எனக்கு அதிருத்ரம்னா என்னன்னுகூட தெரியாது. கூகுளில் தேடியபோது ‘அதிருத்ரம்’ என்பது எவ்வளவு பெரிய விஷயம்னு புரிஞ்சுது.

121 வைதிகாளை வச்சு, 11 நாள் பண்றது. ஒவ்வொரு நாளும் 11 முறை ருத்ரம் சொல்வாங்க. நிறைய ஹோமங்கள் இருக்கும். அதைப் பார்த்ததுடன் விட்டுட்டேன். கொஞ்ச நாளில் உடம்பு கொஞ்சம் தேறி, ஓடறதுக்குப் பயிற்சி எடுத்துட்டிருந்தப்ப, ஒரு நாள் பிள்ளையார் கோயில் அருகில் போறச்சே ‘அதிருத்ரம் பண்றியா?’ன்னு திரும்பவும் பெரியவா கேட்பது போன்ற உணர்வு!

வீட்டில் வந்து சொன்னேன். அவங்க, ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பார். உங்களுக்கு எல்லாம் சரியாயிடும்’னு சொன்னாங்க. இது நடந்து ஒரே வாரத்தில், எல்.பி.ரோட்டில் சமுச்சித்த விநாயகர் கோயிலருகே போறச்சே, திருப்பி அதேமாதிரி ‘அதிருத்ரம் பண்றியா?’ன்னு குரல் கேக்குது. கோயில் வாசலில் நின்னுட்டேன்.

‘என்ன பெரியவா.. நீங்க இதையே சொல்லிண்டிருக்கேளே... என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு தெரியலயே!’ன்னு மனசுக்குள்ள சொன்னேன். ‘சிவன் சாரைக் கேளு’ என்கிற மாதிரியும் எனக்குள் குரல் ஒலித்தது. சிவன் சார் பற்றியெல்லாம் எனக்கு அப்போ ரொம்பத் தெரியாது. இருந் தாலும், `சார்... நீங்களே சொல்லுங்கோ சார்’ என்று சிவன் சாரை நினைத்துக்கொண்டும் கேட்டு வேண்டினேன். ‘நீ காஞ்சிபுரத்துக்கு அதிஷ்டானத்துக்கு வா’ என்பது போல ஒரு குரல்... உள்ளுணர்வு எனக்குள்!

அடுத்த வாரத்தில் ஒரு நாள் அதிஷ்டானத்துக்குச் சென்றோம். சிறப்பான தரிசனம். ‘பெரியவா வழி காமிச்சிடுவார்’ன்னு நம்பிக்கையோட கிளம்பிவந்துட்டோம். அன்னிக்கு சிவராமண்ணாவும் அவர் அக்காவும் பிரதட்சணம் பண்ணிட் டிருந்தாங்க.

ஒரு புன்முறுவல் நலம் விசாரிப்புன்னு சுருக்கமா இருந்தது அந்தச் சந்திப்பு. ஆனால், சிவன் சார் எனும் மகானின் அருளே எங்களைத் தொடர்புபடுத்துது; அந்தத் தொடர்பும் பந்தமும் காலம்காலமா நீடிக்கப் போகுதுங்கற உண்மை அப்ப எங்களுக்குத் தெரியலை. என் விஷயத்தில் பெரியவா, சிவன் சார் அனுக்கிரஹம் அப்பவே தொடங்கிடுச்சு போல!

அடுத்து வழிகாட்டுதலுக்காக வேண்டி ரங்கத்துக்குப் போய் அதிருத்ரம் ரவி அண்ணாவைப் பார்த்தோம். அவரும் ‘பெரியவா வழி காட்டுவார்... விட்டுடு’ன்னு சொல்லிட்டார்.

நான் ரெகுலரா சபரிமலைக்குப் போவேன். 2017 மார்ச்சில் நான் சபரிமலைக்குப் போறச்சே, ஒரு மாமிகிட்டே ‘இந்த மாதிரி அதிருத்ரம் பண்ணப் போறோம்’னு சொல்லி வச்சிருந்தேன். ஏன்னா அதிருத்ரம் பண்றதுன்னா சாதாரண விஷயம் இல்லை... அதுக்குக் கிட்டத்தட்ட 80, 90 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. அதனால தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் சொல்லி வெச்சிருந்தோம்.

ஒரு நாள் திடீர்னு என் மனைவி செளம்யா ஓடிவந்து, அந்த மாமி 2 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத் திருக்கறதா சொன்னார். நான் பதறிப் போய்ட் டேன். அவங்ககிட்ட கேட்டப்போ, அதிருத்ரம் பண்றேன்னு சொன்னதால் ஃபிக்ஸட் டெபாஸிட்டை க்ளோஸ் பண் ணிட்டுக் கொடுத்ததா சொன்னாங்க. ஆடிப் போய்ட்டேன் நான். மீண்டும் அதிருத்ரம் ரவி அண்ணாவைப் பார்த்து மாமி செக் கொடுத்த விஷயத்தைச் சொன்னேன். `எல்லாம் பெரியவா, சிவன் சார் அனுக்கிரஹம்னுதான் அவருக்குத் தோன்றியது போல. என்னிடம் அதுபற்றி பகிர்ந்துகொண்ட வர், எல்லோரும் துணை இருப்பாங்க பணியை ஆரம்பிச் சுடலாம்னு சொன்னார்.

`எங்கே வெச்சு நடத்துவது திருவண்ணாமலையில் நடத்தலாமா...’ என்று நாங்கள் பேச ஆரம்பித்தபோதே `பேஷா பண்ணலாம்’ என உத்தரவு கொடுப்பது போல, `சந்திர சேகர சரஸ்வதி...’ என ரவியண்ணாவின் செல் போனின் காலர்டியூன் ஒலித்தது. அடுத்து சேஷாத்ரி ஸ்வாமி மடத்தில் வைத்து நடத்த லாமா என்று பேசத் தொடங்கியதும், மீண்டும் அதேபோல் உத்தரவு. சிலிர்த்துப் போனோம் நாங்கள்.

ஆனாலும் அந்த இடம் சின்னதாயிற்றே என்றும் ஒரு சிந்தனை எங்களுக்கு. அந்தத் தயக்கத்தைக் களைவதுபோல் `தேவைக்கேற்ப எல்லாம் வசதியா இருக்கும்... இடம் விரிவா இருக்கும்’னு அருள்வாக்கு கிடைத்தது.

இப்படித் தொடங்கியதுதான்... திருவண்ணா மலையில் உத்தரவு கேட்டு, அங்கேயே அதிருத்ரத்தை நல்லபடியா நடத்த முடிஞ்சதுக்குக் காரணம் மகா பெரியவாளும் சிவன் சாரும்தான். ஏன்னா ‘சாரைப் போய் கேளு’ன்னு பெரியவா குரல் கேட்டது பிரத்யட்சமான உண்மை!

அதேபோல்... பணம் எல்லாம் திரட்ட ரெண்டு வருஷமாவது ஆகும்னு நினைச்சோம். ஒரு மலைப்பு இருந்துச்சு உள்ளுக்குள்ளே. அப்ப ரவியண்ணா எங்ககிட்ட, ‘நீங்க குரு மார்கள் கிட்ட கையைத் தூக்கல’ என்றார். அவர் சொல்வது உண்மைதான்னு புரிஞ்சது.

ஆத்மார்த்தமா கையைத் தூக்கி வணங்கி, ‘பெரியவா... சார் நீங்கதான்’னு சரணடைஞ் சோம். நீங்க நம்ப மாட்டீங்க... அடுத்த மூணு வாரத்துக்குள்ள 48 லட்சம் கலெக்ட் பண்ணி னோம். அனைத்தும் மிகச் சிறப்பா நடந்தது. அதிருத்ரம் பண்ணினது எனக்குக் கிடைச்ச பெரிய பாக்கியம்! பெரியவாளுக்கும் சாருக்கும் பெரிய நமஸ்காரம்!

சிவன் சார்
சிவன் சார்
Jerome K

அதுக்கப்புறம் 2019-ல் சிவராமண்ணாவின் இன்டர்வியூ ஒன்றைக் கேட்டோம். ரொம்ப உருக்கமா இருந்தது. குரு பக்தின்னா என்னன்னு பேசியிருந்தார். அதைக் கேட்டதும் உடனே சாரைப் போய்ப் பார்க்கணும்னு தோணிச்சு. சிவசாகரத்துக்கு முதல் முறையா போனேன். நாங்க போய் சாரைப் பார்த்தேன் என்பதை விட, அவர் எங்களைப் பார்த்தார்ன்னுதான் சொல்லணும்.

அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் எங்களுக்கு எல்லாமே சார்தான். அவர் எங்க வாழ்க்கையில் பல அற்புதங்களைப் பண்ணி யிருக்கார். ஒவ்வொண்ணும் பெரிய பெரிய அற்புதங்கள்!

- சிலிர்ப்போம்...