Published:Updated:

மகாசிவராத்திரியில் நகரியில் காட்சி தரும் மகாசிம்மக்னர்!

மகாசிம்மக்னர்

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்! ரெளத்திர மூர்த்தியான ருத்திரன் மட்டுமே நரசிம்மரை சாந்தப்படுத்த முடியும் என்றாகி ருத்திரன் சிம்மக்ன மூர்த்தியாக அவதரித்தார்.

மகாசிவராத்திரியில் நகரியில் காட்சி தரும் மகாசிம்மக்னர்!

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்! ரெளத்திர மூர்த்தியான ருத்திரன் மட்டுமே நரசிம்மரை சாந்தப்படுத்த முடியும் என்றாகி ருத்திரன் சிம்மக்ன மூர்த்தியாக அவதரித்தார்.

Published:Updated:
மகாசிம்மக்னர்

திருத்தணிக்கருகே ஆந்திர மாநில எல்லையில், நகரியின் ஒரு பாகமான கீளப்பட்டு கிராமத்தில், 15 கிலோ சோழிகள், 30 கிலோ கடல் கிளிஞ்சல்கள், 5 கிலோ கோமதி சக்கரங்கள், 80 கிலோ யானமுள்ளி சங்குகள் என 100 கிலோ எடையுள்ள பொருட்களைக்கொண்டு சிம்மக்னரை வடிவமைத்துள்ளனர்.

சாலுவேஸ்வரன்
சாலுவேஸ்வரன்

புருஷரில் உத்தமன் புருஷோத்தமன் என்பது போல, பக்தியில் சிறந்தவன் பிரகலாதன் என்கிறது பிரகலாத சரிதம். சதா சர்வகாலமும் 'நாராயணா' எனும் நாமம் உச்சரித்த பிரகலாதனைக் காக்க, தந்தை இரண்யனை வதம் செய்வதற்கு திருமால் எடுத்த அவதாரமே 'நரசிம்ம அவதாரம்'. இரண்யன் பெற்ற வரமோ, உள்ளும் இல்லாத, வெளியிலும் இல்லாத, பகலும் இல்லாத, இரவும் இல்லாத பொழுதில், மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத ஒன்றினால் மட்டுமே தனக்கு மரணம் சாத்தியமாக வேண்டும் என்பதே.

அதன்படி ஸ்ரீவிஷ்ணு நரசிம்ம வடிவம் எடுத்து இரண்யன் வதம் முடித்தார். இருப்பினும் நரசிம்மரின் உக்கிரம் மூவுலகையும் தகித்தது, தேவர்களின் பிரார்த்தனைகளும் எடுபடவிலை! அவரை யார் சமாதானப்படுத்துவது!

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்! ரெளத்திர மூர்த்தியான ருத்திரன் மட்டுமே நரசிம்மரை சாந்தப்படுத்த முடியும் என்றாகி ருத்திரன் சிம்மக்ன மூர்த்தியாக அவதரித்தார். அவ்வடிவத்தை, 'நன்னாலிரண்டு திருவடியும், நனி நீள் வாலும் முகம் இரண்டும் கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும்பேரார்ப்பும் எதிர் தோற்றி...' என காஞ்சி புராணம் போற்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிம்ஹாரி
சிம்ஹாரி

சிவன் , விஷ்ணு , காளி, துர்க்கை என நால்வரும் இணைந்த துடியான வடிவே சரபர். இவர், 'பட்சி ராஜா, சாலுவேஸ்வரன், நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி, சிம்மக்ன மூர்த்தி, சிம்ஹாரி, நரசிம்ம சம்ஹாரர், சூலினி சமேதர் என பல திருநாமங்கள் கொண்டவர். சரபேஸ்வரர் எனும் இந்த சிம்மக்ன மூர்த்தி, பறவை, மனிதன், விலங்கு எனும் மூன்றின் உருவம் கொண்டவர். இரணியனை அழித்த நரசிம்மரின் கோபம் தணிக்க ஈசன் சரபேஸ்வர உருவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் இரு இறக்கைகளாக இருப்பவர்கள் பிரத்யங்கரா தேவியும், சூலினி என்கிற தேவியும் என்கின்றன ஞான நூல்கள்.

தகதகக்கும் கருடனைப் போன்ற பொன்னிறம், இரண்டு சிவப்பேறிய மூன்று கண்கள், கூரிய நகங்கள் கொண்ட சிம்ம கால்கள் நான்கு. மனித உடல், மணிமகுடம் கொண்ட சிம்ம முகம். யானையின் தந்தங்களைப் போன்ற கோரைப் பற்கள் என காண்பவரை அச்சமுறுத்துபவர் சரபர். எனினும் தம்மை சரண் அடைந்த பக்தர்களுக்கு அவர் தாயும் தந்தையுமாய் நின்று ஆதரிப்பவர். சூரியன், சந்திரன், அக்னியே சரபரின் மூன்று கண்கள். இந்திரனே கால் நகங்கள். யமனே தொடைகள், செவ்வாய் பாதம் என வர்ணிக்கின்றன நூல்கள்.

காண்பதற்கரிய இந்த மூர்த்தியை கண்டால் சகல தோஷங்களும் அச்சங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் உங்களுடைய எத்தனை பெரிய கடனும் தீர்ந்து விடும். திருஷ்டி, பொருள் விரயம், வியாபார நஷ்டம் யாவும் மறையும். செவ்வாய், சனி கிரக சேர்க்கையால் நீங்கள் படும் துன்பங்கள் நீங்கும். கர்ம வினைகளும் பாவங்களும் நீங்கும் என்கிறார்கள். நரசிம்மரை அடக்கி ஆட்கொண்ட சிம்மக்ன மூர்த்தி எனும் சரபர் அரிதாகக் காணக்கிடைப்பவர். இத்தகைய சிம்மக்னரை மகாசிவராத்திரியன்று தரிசிக்க வேண்டுமா? வாருங்கள் நகரிக்கு!

சென்னையைக் கடந்து, திருத்தணிக்கருகே ஆந்திர மாநில எல்லையில், நகரியின் ஒரு பாகமான கீளப்பட்டு கிராமத்தில், அமைந்திருக்கும் அருள்மிகு திருபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் ஆலய வளாகத்தில், 10 அடி உயரம் , 16 ஆடி அகலத்தில் பிரம்மாண்டமான சிம்மக்னரை தரிசிக்க உங்களை வரவேற்கிறோம்.

மகாசிவராத்திரியில் நகரியில் காட்சி தரும் மகாசிம்மக்னர்!

இந்த தரிசனத்தில் என்ன சிறப்பு!

ஏறத்தாழ ஒரு மாதம் காலம், கீளப்பட்டு கிராமத்தின் திரு,கணேசன் அவர்கள் தலைமையில், 5 நபர் நண்பர் குழுவினர், கடலில் கிடைக்ககூடிய 15 கிலோ சோழிகள், 30 கிலோ கடல் கிளிஞ்சல்கள், 5 கிலோ கோமதி சக்கரங்கள், 80 கிலோ யானமுள்ளி சங்குகள் என 100 கிலோ எடையுள்ள பொருட்களைக்கொண்டு சிம்மக்னரை வடிவமைத்துள்ளனர். இதைக் காணக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள் அவ்வூர் மக்கள். ஆண்டுதோறும் வித்தியாசமான சிவவடிவங்களை செய்துவரும் இந்த ஊர் மக்கள் இந்த ஆண்டு இந்த திருவடிவத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். போய்வர வாய்ப்பு உள்ளவர்கள் இந்த பெருமானை தரிசித்து அருள் பெறக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் உண்டான துயரங்கள், அச்சங்கள் யாவும் நீங்கி மகிழ்ச்சி பொங்கிட எல்லாம் வல்ல சிவத்தையும் சிம்மக்ன மூர்த்தியையும் வேண்டிக் கொள்கிறோம். மகாசிவராத்திரி நன்னாளில் மகாசிவத்தை தரிசித்து ஈசன் அருள் பெறுங்கள்!

வழி மற்றும் விவரங்களுக்கு : கணேசன் : 6304692951 வி.சுப்பிரமணியன்: 9444259362 ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism