Published:Updated:

இனிதே நடைபெற்றது மிருத்யஞ்சய மகாஹோமம்

மிருத்யஞ்சய ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மிருத்யஞ்சய ஹோமம்

மிருத்யஞ்சய ஹோமம்

இனிதே நடைபெற்றது மிருத்யஞ்சய மகாஹோமம்

மிருத்யஞ்சய ஹோமம்

Published:Updated:
மிருத்யஞ்சய ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மிருத்யஞ்சய ஹோமம்

சிவாலயத்தில் மூத்ததான உத்திரகோசமங்கைக்கு நிகரான தலம் மங்களபுரி எனும் இறையானூர்; இதன் கால அளவைக் கூற முடியாது என்கிறது வரலாறு. திண்டிவனம் இந்தத் தலம் அற்புதங்கள் பல நிறைந்தது. நடுநாட்டில் அகத்தியரால் எழுப்பப் பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.
ஸ்ரீ

ஸ்ரீமிருத்யுஞ்சய மகாஹோமம்
ஸ்ரீமிருத்யுஞ்சய மகாஹோமம்


இவ்வூர்க் கோயிலின் ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி அருள்பாலித்தவராம். தற்போது, இவர் `ஆதிசிவன்' என்ற திருப்பெயருடன் ஆலயத்தின் பின்புறம் கோயில் கொண்டுள்ளார். கருவறை மூலவராக ஸ்ரீமங்களேஸ்வரர் கம்பீரமாக அருள்கிறார். இவருக்குத் துணையாக மங்களாம்பிகை அன்னையும் எழுந்தருளி இருக்கிறாள்.

18 சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட கால பைரவர் இங்கு ‘கால சங்கார மூர்த்தியாக’ அருளுகிறார். இவரை வழிபட்டால் யம பயம் நீங்கும் என்கிறார்கள். துர்வாசரால் சாபம் பெற்ற இந்திரன் இங்கு வந்து பலன் அடைந்தார் என தலவரலாறு கூறுகிறது.

இந்திரன் இங்கு வந்து வழிபட்டு அழகும் இளமையும் பெற்றதால், இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுவோருக்கு தேகபலமும் பொலிவும் கிட்டும். மேலும் சரும நோய்கள் உள்ளவர்களும் இங்கு வந்து வணங்கி பலன் பெறலாம் என்கிறார்கள்.

ஸ்ரீமங்களேஸ்வரர்
ஸ்ரீமங்களேஸ்வரர்


ஒருமுறை, பார்வதி மீது கோபம் கொண்ட இறைவன், பூமிக்குச் செல்லுமாறு உமையவளுக்குக் கட்டளையிட்டார். அதை ஏற்று, பூமியில் இந்தத் தலத்துக்கு வந்த அம்பிகை, இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் வழிபட்டால் இழந்த செல்வங்களைப் பெறலாம். ராகு - கேது தோஷ நிவர்த்தித் தலமாகவும் உள்ளது.

இவ்வாலயத்தில் 18 சித்தர்கள் மட்டுமின்றி இருநூற்றுக்கும் மேற்பட்ட வேறுபல சித்தர் பெரு மக்களும் வழிபட்டு ஞானம் பெற்றதாகச் சொல்கிறார்கள். சித்தர்களின் சாந்நித்தியமும் நிறைந்த தலம் இது. அகத்தியரின் சாபத்தால் ஒளியிழந்த சூரியதேவன், இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றான். ஒரு சிவராத்திரி நன்னாளில் தேவர்கள் சகலரும் கூடி நான்கு கால பூஜைகளையும் அனுஷ்டித்த ஊர் இந்த இறையானூர் என்கிறது புராணம்.

ஸ்ரீமிருத்யுஞ்சய மகாஹோமம்
ஸ்ரீமிருத்யுஞ்சய மகாஹோமம்


அற்புதமான இந்தத் தலத்தில்தான் கடந்த சிவராத்திரி அன்று (மார்ச் 1 மற்றும் 2-ம் தேதிகளில்) ஸ்ரீமிருத்யுஞ்சய மகாஹோமம், கோபூஜை, நான்கு கால பூஜைகள், திருவாசக முற்றோதல் உள்ளிட்ட சிறப்பான ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த மகாஹோமத்தில் பிரார்த்தனை களைச் சங்கல்பிக்க ஏராளமான வாசகர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற சிறப்பு சங்கல்பத் துடன், ஹோம வைபவங்களும் வழிபாடுகளும் நடைபெற்றன.


மகத்துவங்கள் பல நிறைந்த இந்த ஆலயத்தில் இன்னும் பல திருப்பணிகள் நிறைவுறாமல் இருக்கின்றன என்கிறார்கள், கோயிலைச் சேர்ந்த பக்தர்கள். சுற்றுச்சுவர், கொடிமரம் போன்ற அவசியமான திருப்பணிகள் இன்னும் மீதமிருக்கின்றன. இந்தத் திருப் பணிகளுக்கு நாமும் இயன்ற பங்களிப்பை வழங்கலாம். அதன் மூலம் சித்தர்கள் போற்றும் இறையானூர் ஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழலாம்!

எப்படிச் செல்வது..?: திண்டிவனம் புதுச்சேரி வழியில் திண்டிவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியின் எதிரில் இறையனூரில் ஆலயம் அமைந்துள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

Arulmigu Sri Mangalambigai Udanaya

Sri Mangalyeswarar Alayam Trust

Account Number : 510101006289267

Bank Name : CORPORATION BANK,

Branch : Rajaji Street, Tindivanam

IFSC Code : CORP0001584

மேலும் விவரங்களுக்கு: 9367677760