Published:Updated:

மகாசிவராத்திரி... சில தகவல்கள்!

மகாசிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி... சில தகவல்கள்!

மகாசிவராத்திரி

Published:Updated:
மகாசிவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
மகாசிவராத்திரி

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவ ராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைகண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்' என்று சிவபெருமான் சொன்னதாக சிவராத்திரி புராண மகிமையைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கிறது.

சிவராத்திரி புராண மகிமை
சிவராத்திரி புராண மகிமை

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி... அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி... சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி. இவற்றுள் மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.

ஈசன், உமையவளைத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டு, அவருக்கு ஆகமங்களின் நுண்பொருளை விளக்கிய காலம் சிவராத்திரி.

சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் பஞ்ச வில்வங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது. லிங்கோற்பவ காலத்திலாவது (3-வது காலம்) பஞ்சமுக அர்ச்சனை செய்து, பஞ்சமுக (ஐவகை) தீபாராதனை மற்றும் பஞ்ச அன்னங்கள் நிவேதித்தல் வேண்டும். சிவ லிங்கம், விபூதிப் பை, ருத்திராட்சம், பொற் காசு, பசு, பூமி ஆகியவற்றை சிவராத்திரியன்று தானம் அளித்தல் நல்லது.

மகா சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் நான்கு. அவை: கோகர்ணம் (கர்நாடக மாநிலத்தில் ஹுப்ளிக்கு அருகிலுள்ளது), சைலம் (ஆந்திர மாநில நந்தியாலுக்கு அருகேயுள்ளது), காளஹஸ்தி மற்றும் திருவைகாவூர் (கும்பகோணத்துக்கு வடமேற்கே கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது).

சிவராத்திரி இரவில் நாகராஜனான வாசுகியும், அவனைச் சார்ந்த நாகங்களும், நான்கு ஸ்தலங்களில் வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அவை: நாகூர், நாகப்பட்டினம், திருநாகேஸ்வரம், குடந்தை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism