திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

`என்றென்றும் பேரானந்தம்!' - கீழ்ப்பசார் மகா சிவராத்திரி விழா

கீழ்ப்பசார் சந்திரமெளலீஸ்வரர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்ப்பசார் சந்திரமெளலீஸ்வரர்!

படங்கள்: பாலாஜி, கீழ்ப்பசார்

சித்த விகாரக் கலக்கம் தெளிவிக்கும் வித்தகத் தேவராம் ஈசனை ஆராதித்து யோக நிலையை அனுபவிக்கும் உன்னத விழாவே மகாசிவராத்திரி.

உலக சுபிட்சத்துக்காகவும், வாசகர்களின் நன்மை வேண்டியும் சக்தி விகடன் சார்பில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி வைபவம், திண்டிவனம் அருகிலுள்ள கீழ்ப்பசார் கிராமம் ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத் தில் சிறப்புற நடைபெற்றது.

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

11-3-2021 வியாழனன்று காலையில், அடியார்களின் மகாசிவராத்திரி புண்ணிய யாத்திரையுடன் வைபவம் தொடங்கியது. புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகளுடன், நீதியரசர் டாக்டர். பி. ஜோதிமணி ஐயா யாத்திரையைத் தொடங்கி வைத்தார். வழியில் 6 சிவத் தலங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தரிசனத்துடன் தொடர்ந்த யாத்திரை, கீழ்ப்பசார் கிராமத்தில் நிறைவு பெற்றது.

ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தில் இரவு 8 மணியளவில் முதல் கால பூஜை தொடங்கியது. மிருதங்கம், பம்பை, சிவவாத்திய முழக்கம், இசைக் கச்சேரிகளுடனும் விசேஷ ஆராதனை களுடனும் கோலாகலமாக நடைபெற்றது மகா சிவராத்திரி வைபவம். வாசகர்களின் பிரார்த்தனை சங்கல்பத்துடன், ஒவ்வொரு காலத்துக்கும் உரிய பதிக பாராயணம், மலர்கள் - நைவேத்திய சமர்ப்பணங்கள் முறைப்படி நிகழ்ந்தன. மூன்றாவதான லிங்கோத்பவ காலத்தில் 208 மூலிகைக் கலவையால் மகா மூலிகை அபிஷேகம் கொல்லிமலை அகோரி சுவாமிகளால் நடத்தப்பட்டது. இந்தப் பிரத்யேக பூஜையிலும் வாசகர்களின் பிரார்த்தனைகள் பெயர் நட்சத்திரத்துடன் சங்கல்பிக்கப்பட்டன.

ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர்
ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர்
ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர்
ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர்

வண்ண அலங்காரங்கள், பிரசாத விநியோகம், பாராயண வைபவங்கள் என விழா ஏற்பாடு களைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் சிறப்புற செய்திருந்தனர். அடியார்கள் மட்டுமன்றி உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பக்தர்களும் சிவதரிசனம் செய்து சிந்தை மகிழ்ந்தனர்.

நான்கு காலமும் விதவிதமான அலங்காரத்தில் ஜொலித்த ஶ்ரீசந்திரமௌலீஸ்வரரும் அன்னை ஶ்ரீமரகதாம்பிகையும் `இனி என்றென்றும் உங்களுக்குப் பேரானந்தமே' என்று தன் பிள்ளைகளுக்கு வரம் வாரி வழங்கும் கற்பகத் தருக்களாய் காட்சி தந்தார்கள். அந்தச் சிவ சக்தியின் திருவருளால், நம் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் பலிக்கும்; நாளும் நன்மையே நடக்கும்!