சிவபெருமான் காலகாலனாக அருள்பவர். அவரைச் சரணடைந்த மார்க்கண்டேயன் மரணத்தை வென்றான். ஆம்! தன் பாதார விந்தங் களைச் சரண்புகும் அடியவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நீடித்த செல்வத்தையும் அளித்து அருள்பாலிப்பவர் ஈசன். அவரே அநாதி என்று வேதங்கள் கூறுகின்றன.

அவரின் பேரருளைப் பெற்றுத் தரும் வைபவங்களில் ஒன்று மிருத்யுஞ்சய ஹோமம். `ம்ருத்யு' என்றால் மரணம்; ஜெயம் என்றால் வெற்றி. மரணத்தை வெற்றி கொள்ளும் சிறப்பான உத்தி மிருத்யஞ்சய ஹோமம். அறுபது ஆண்டுகள் ஆயுஷ் ஹோமம் செய்த பலனை அளிப்பது மகாமிருத்யஞ்ச மகா ஹோமம்.
இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த் திக்கும் அன்பர்கள், மரணபயமின்றி நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வார்கள் என்கின்றன ஞான நூல்கள். குறிப்பாக புனிதமிகு மகா சிவராத்திரி அன்று இந்த ஹோமம் செய்யப் படுவதும், அதில் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதும் மிகவும் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள்.
அவ்வகையில் சக்தி விகடன் சார்பில், உலக நன்மைக்காகவும் வாசகர்களும் அவர்களின் குடும்பத்தாரும், உற்றார் உறவினரும் சகல நன்மைகளையும் பெறும் பொருட்டும், பிணித் துன்பங்கள் நீங்கி, பூரண ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து சிறக்க வேண்டியும் உரிய சங்கல்பப் பிரார்த்தனையோடு மிருத்யுஞ்சய மகா ஹோமம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகில் இறையானூர் கிராமம் மங்களாம்பிகை உடனாகிய மங்களேஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரி அன்று சக்தி விகடன் மற்றும் ஆலய நிர்வாகம் இணைந்து வழங்கும் மிருத்யுஞ்சய மகாஹோம வைபவம் நடைபெறவுள்ளது. மார்ச்-1 அன்று மாலை 5 முதல் 2-ம் தேதி காலை 6 மணி வரையிலும் ஹோம வைபவங்கள் நிகழும். அத்துடன், மகாசிவராத்திரி நான்கு கால வழிபாடுகள், கோபூஜை, திருமுறை முற்றோதல்கள் ஆகிய வைபவங்களும் சிறப்புற நடைபெறவுள்ளன.
வடஉத்திரகோசமங்கை என்று அறியப்படும் புண்ணிய க்ஷேத்திரம் இறையானூர். அம்பிகை, சூரியன், அகத்தியர், இந்திரன், ஊர்வசி முதலானோர் வழிபட்டு அருள் பெற்ற தலம். பதினெட்டு சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப் பட்ட கால பைரவர் இங்கு ‘கால சம்ஹார மூர்த்தியாக’ அருள்கிறார். மட்டுமன்றி ஈசன் மிருத்யுஞ்சயராக தேவர் களுக்கு மந்திரம் அருளிய தலம் இது. இத்தகு மகிமை வாய்ந்த இந்தத் தலத்தில் நிகழும் மிருத்யஞ்ச மகாஹோம வைபவத்தில் நீங்களும் சங்கல்பித்து பிரார்த்திப்பது மிகவும் விசேஷம். அதன்மூலம் சிவனருளைப் பெற்று சகலவிதமான அச்சங் களும் நீங்கி, சிந்தை மகிழ நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்வும் பெறலாம்!
வாசகர்களின் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். வாசகர்கள், தங்களின் தெளிவான முகவரியைக் குறிப்பிடுவது அவசியம். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.