Published:Updated:

கந்த சஷ்டியை முன்னிட்டு அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்!

கந்த சஷ்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கந்த சஷ்டி

ஓவியம்: ம.செ

`ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்

பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்

சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு

நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்’

ந்தப்பெருமானின் மகிமையை மேற்காணும்படி பாடித் தொழுகிறது கந்த புராணம். முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் உதிக்கு முன்னரே ‘முருகா’ என்ற திருநாமம் உதித்துவிட்டது என்கிறது திருப் புகழ். நாமங்களில் சிறந்த நாமம் ‘முருகா’ என்பது. அதனாலேயே முருகப் பெருமான் நாமாவளிப் பிரியன் ஆனான் என்கின்றன புராணங்கள்.

கந்த சஷ்டியை முன்னிட்டு 
அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்!

`முருகா’ என்ற ஒரு நாமம் சொன் னால் கோடி பிரம்மஹத்தி தோஷமும் விலகியோடும் என்பது பெரியோர் வாக்கு. அப்படி பிரம்மஹத்தி தோஷம் நீங்கி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் நட்பைப் பெற்று, இறுதியில் கந்த லோகம் சென்றவன் குகன் என்ற வேடுவர்த் தலைவன்.

இப்படி `முருகா’ என்ற திருநாமம் பலகோடி பலன்களைத் தரும் என்றால், முருகப்பெருமானுக்குரிய வழிபாடுகள் எவ்வளவு பலன்களைத் தரும் என்பதைச் சொற்களால் விளக்க இயலுமா! ஞானநூல்கள் போற்றும் முருக வழிபாடுகள் பல உண்டு. அவற்றில் மிக உன்னதமானது மகா ஸ்கந்த ஹோமம்.

யாகங்களில் முதன்மையானதானது இது. அசுரச் சக்திகளின் தொல்லைகள் நீங்க, தேவாதி தேவர்கள் அனைவரும் கூடிச் செய்த மகா ஹோமம் இது. இதன் பலனாகவே விண்ணுலகும் மண்ணுலகும் தீமைகள் நீங்கி நலம் பெற்றனவாம். கைமேல் பலன் தரக்கூடிய இந்த மகா ஸ்கந்த ஹோமம், அரிதினும் அரிதாக நடைபெறக் கூடியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த ஹோமத்தின் மூலம் எண்ணிய எல்லா காரியங்களிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்; முருகனின் அருளால் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் தீயவினைகள், கொடும் வியாதிகள், தீராக் கடன்கள் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெறலாம். அதுமட்டுமா?

வீடு-மனை மற்றும் சொத்துப் பிரச்னைகள், தீராத பிணிகளால் கவலை, எதிரிகள் தொல்லை, தொழிலில் போட்டிகள், உத்தி யோகத் தடைகள், குடும்பத்தில் குழப்பம் ஆகிய பிரச்னைகள் நீங்கவும், கல்யாண வரம், சந்ததி செழிப்பு, குடும்ப உறவுகளின் அன்பு மேம்பாடு ஆகிய சகல பலன்களையும் பெறவும் அருள் வழங்கவல்லது மிக அபூர்வமான மகா ஸ்கந்த ஹோமம்.

`மந்தம்’ எனும் சோம்பல் நீங்க `ஸ்கந்தம்’ எனும் திருமந்திரம் உதவும். எனவே ஒவ்வொருவரும் இந்த அற்புதமான மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்தித்து, காரிய ஸித்தி பெறுவது இந்தக் காலகட்டத்தில் மிக அவசியம் எனலாம்.

கந்த சஷ்டியை முன்னிட்டு 
அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்!

ஆம்! நீண்ட நாள்களாக தள்ளிப்போன உங்கள் விருப்பங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து தரவல்லது இந்த ஹோமம் என்பது ஞான நூல்கள் நமக்குக் காட்டும் வழிகாட்டல்.

அந்த வகையில், முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி வைபவத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் மிக அற்புதமான மகா ஸ்கந்த ஹோமத்தை சக்தி விகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

சக்தி விகடனும் திருப்பூரைச் சேர்ந்த குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவும் இணைந்து, திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள `ஆனந்த சொக்கவிநாயகர் உடனமர் கதிர்காம வேலவர்’ திருக்கோயிலில், 17.11.2020 செவ்வாய்க் கிழமை அன்று காலையில் 8:30 மணிக்குத் தொடங்கி நடை பெறவுள்ளது மகா ஸ்கந்த ஹோமம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்தது இந்தத் திருக்கோயில். கதிர்காமம் முருகன்மீது அதீத பக்தி கொண்ட அன்பரால் அமைக்கப் பட்ட ஆலயம் இது. இங்கு அருள் பாலிக்கும் கதிர்காம வேலவன், தன்னை நாடிவந்து வழிபடும் பக்தர்கள் வேண்டும் வரங்களை வேண்டியபடி அருளும் வள்ளலா கத் திகழ்கிறார்.

ஆக, மிக அற்புதமான திருத் தலத்தில் நடைபெறும் அபூர்வ மான மகா ஸ்கந்த ஹோமத்தில் வாசகர்கள் தங்களுக்குகாகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் சங்கல்பம் செய்துகொண்டு பலன் அடையலாம்.

கந்த சஷ்டியை முன்னிட்டு 
அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்!

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர் களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத் துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷமான மகா ஸ்கந்த ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), ஹோமம் முடிந்து ஒரு வார காலத்துக்குள் (25.11.2020 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழலாம்.

அதற்கேற்ப, ஹோம-வழிபாட்டு வைபவங் களும், `ஆனந்த சொக்கவிநாயகர் உடனமர் கதிர்காம வேலவர்’ கோயிலின் சிறப்புகளும் கந்தசஷ்டி தினத்தன்று (20.11.20 வெள்ளி அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404