Published:Updated:

மஹாஸ்கந்த ஹோமம்: வேலன் என்றால் வீரம் வரும்; கந்தன் என்றால் கருணை தரும் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

மஹாஸ்கந்த ஹோமம்: இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்திக்கு, குழந்தைப்பேறு, மணப்பேறு, புகழ், ஆரோக்கியம், ஆயுள், செல்வம் யாவும் கிட்டும்.

சிவனின் நெற்றிக்கண் சிவமும் சக்தியும் இணைந்த பகுதி. அதனால் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகன் சிவசக்தி அம்சமாகத் தோன்றி ஆற்றலின் அளவில்லாத வடிவமாக விளங்கினான் என்கிறது புராணம். அது மட்டுமல்ல, ஈசன் நெருப்பின் வடிவமாகவும், உமையவள் நீரின் வடிவமாகவும் சொல்லப்படுகிறது. நெருப்பில் தோன்றி நீரில் மலர்ந்த கந்தன் அம்மை அப்பனின் ஒருங்கிணைந்த வடிவமாக விளங்கினான் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தணியல் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்
தணியல் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்

நவ கோள்களில் செவ்வாய்க்கு அதிபதியாக முருகவேள் விளங்குகிறார். இதனால் வீண் செலவு, விரயம், தேவையற்ற அலைச்சல்கள், அவமானங்கள், வீண் சண்டைகள், சகோதர உறவில் சிக்கல் யாவும் செவ்வாயால் நிகழக் கூடியவை. இதனால் கந்தனை வழிபட்டால் செவ்வாயை ப்ரீத்தி செய்ததாக மாறும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். முருகனை வழிபட உறவுகள் சந்தோசமாகும், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும், வந்த வினைகளும் வரப்போகும் வினைகளும் விலகியோடும் என்கின்றன ஞான நூல்கள்.

கருணைக்கும் அருளுக்கும் பெயர்பெற்ற கந்தப் பெருமானுக்கு கந்த சஷ்டி விரதம் உன்னதமானது. இந்த முறை இன்று (நவம்பர் 4-ம் தேதி) தீபாவளி நாளில் தொடங்கும் கந்த சஷ்டி விரதம், ஆறாம் நாள் சூரசம்ஹார விழா செவ்வாய் கிழமை முடிவடைகிறது. இது விசேஷத்திலும் விசேஷம் எனலாம்.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்

கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்பார்கள் பெரியோர்கள். இந்த கந்த சஷ்டி விழாவில் விரதம் இருந்து கந்தனை வழிபட்டால் காண்பவை யாவும் நலமாக அமையும். ஈசனால் தோன்றி, கங்கையால் தாங்கப்பட்ட முருகப்பெருமான், அதற்கு பிரதி உபகாரமாக கங்கையின் பெயரை தான் தாங்கி 'காங்கேயன்' என்று கருணை புரிந்தார் என கந்தபுராணம் கூறும். எதிர்த்த அசுரனுக்கும் கருணை புரிந்த குழந்தை தெய்வம் முருகன். சூரபத்மனை சேவலும் மயிலுமாக்கி கருணை புரிந்த தணிகை வள்ளல் எல்லோருக்கும் நலமே அளிப்பான். அவனை இந்த கந்த சஷ்டி நாளில் நெஞ்சில் தாங்கி வழிபடுவோம். நலமும் வளமும் பெறுவோம்.

வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி நன்னாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?

இந்த கந்த சஷ்டி விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் திண்டிவனம் மாவட்டம் மயிலத்துக்கு அருகே உள்ள தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது. தணியல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம். இங்கே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு பின்புறம் முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள முருகப்பெருமான் புராணச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டவர். சூரபத்மாதியர் வதம் முடித்து வடக்கே சென்ற முருகப்பெருமான், இந்த தலத்தில் தேவியர் இருவர் புடை சூழ சிவலிங்க பூஜை செய்தார். அப்போது அம்மை அப்பர் காட்சி தந்து கந்தனுக்கு ஆசி வழங்கினர் என்கிறது தலபுராணம்.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்

முருகப்பெருமான் சினம் தணிந்து சிறப்பு கொண்ட இந்த தலம் தணியல் என்றானது. இங்கு வந்து எவர் வேண்டினாலும் வேண்டியது எல்லாம் நிறைவேறும் என்று தலவரலாறு கூறுகிறது. திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் இந்த தலம் அருணகிரிநாத பெருமானால் பாடப்பெற்றது. 'அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா...' என்று அருணகிரி வள்ளல் இந்த ஊர் முருகனைப் பாடிப் பரவசம் கொண்டார் என்கிறார்கள் பெரியோர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி கோயில்கள் 19: பெண்களின் நோய் தீர்க்கும் பேட்டவாய்த்தலை கோயில்... பொற்றாள சித்தர் பெருமைகள்!

இத்தகு பெருமை கொண்ட தலத்தில் பெருமை கொண்ட மஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்திக்கு, குழந்தைப்பேறு, மணப்பேறு, புகழ், ஆரோக்கியம், ஆயுள், செல்வம் யாவும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், அருள் கொண்ட நீண்ட வாழ்வு பெறவும்இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

தணியல் முருகப்பெருமான் திருக்கோயில்
தணியல் முருகப்பெருமான் திருக்கோயில்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு