Published:Updated:

சுபிட்சமான வாழ்வை அருளும் மகாசுதர்சன ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

சக்கரம், கதை, உலக்கை, சூலம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம் எனப் பதினாறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் இந்தப் பெருமானை 'சுதர்சனாஷ்டகமும், ஷோடசாயுத ஸ்தோத்திரமும்' சொல்லி வழிபடுவர் பக்தர்கள்.

சக்கரத்தாழ்வார், சக்கரபாணி, ஸ்ரீசுதர்சனர், சக்ரரூபி விஷ்ணு, மகாசுதர்சனர், ஹேதி ராஜன், சுதர்சனாழ்வார், திருவாழியாழ்வார், திருமால்நேயர், சக்கரராஜர், நேமி ராஜர், திகிரி, ரதாங்கன் என்றெல்லாம் வணங்கப்படுபவர் ஸ்ரீசக்கர சுதர்சனப் பெருமான். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையான ஸ்ரீசக்கரத்தை ஆழ்வாராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். 8 அல்லது 16 திருக்கரங்களுடன் சகல விஷ்ணு ஆலயங்களிலும் காவல் தெய்வமாகக் கம்பீரத் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் இவர் எழுந்தருளி இருப்பார். சில விசேஷ ஆலயங்களில் 32 திருக்கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் நீங்கள் வழிபட்டு இருக்கலாம்.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

'எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி' என ஆழ்வார்கள் போற்றிய சுதர்சன சக்கரம், திருமால் விரும்பிய இடங்களில் விரைந்து சென்று வெற்றி கொண்டது. சக்கரம், கதை, உலக்கை, சூலம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம் எனப் பதினாறு ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் இந்தப் பெருமானை 'சுதர்சனாஷ்டகமும், ஷோடசாயுத ஸ்தோத்திரமும்' சொல்லி வழிபடுவர். 'ஸ்ரீசுதர்சன நவ ஸ்துதி, ஸ்ரீசுதர்சன சதகம் போன்றவையும் சுதர்சனப் பெருமானுக்குரிய ஸ்தோத்திரப் பாடல்களே. கும்பகோணம் சக்ரபாணி திருக்கோயில், திருவரங்கம், திருமலைவையாவூர், திருமோகூர், மதுரை கூடலழகர் கோயில், சென்னை பைராகி மடம் திருவேங்கடமுடையான் திருக்கோயில், கடலூர் அரிசி பெரியாங்குப்பம் சுயம்பு சக்கரத்தாழ்வார் திருக்கோயில் என பல ஆலயங்கள் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷமானவை. மண்ணுலகில் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நீங்காத ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை பரந்தாமன் சுதர்சனரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ கூறுகிறது.

‘ஸஹஸ்ரார ஹூம்பட்’ எனும் சடாட்சர மந்திரத்தால் வழிபடப்படும் இவரை வழிபட்டால் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் என்பது ஐதிகம். ராஜ மந்திரங்களுள் சிறப்பானதான மகாசுதர்சன மந்திரம் சொல்பவர்கள் அச்சங்கள் நீங்கிய வாழ்வை அடைவர் என்பதும் ஆன்மிகம் சொல்லும் ரகசியம். ஆற்றலைப் பெருக்கி, செல்லும் இடமெங்கும் ஜயத்தை அருளும் வழிபாடு சுதர்சன வழிபாடு. வீண் அச்சங்கள், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள், தீராத பகை என அனைத்தையும் நீக்க வல்லது சுதர்சன மகாஹோமம். எண்ணியவைகளை எண்ணியவாறே அருளும் அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்வார்கள்.

சுதர்சன மகா ஹோமம்!
சுதர்சன மகா ஹோமம்!

மகா சுதர்சன ஹோமத்தின்போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீசுதர்சன மூர்த்தியை தியானித்து வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் விபத்துக்கள், எதிரிகளின் தாக்குதல் போன்றவை நடைபெறாமல் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும். தீமைகள் நீங்கவும் துர் சக்திகள் விலகவும் வினைப்பயனால் உண்டாகும் பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது ஸ்ரீசுதர்சன ஹோமம்.

செய்வதற்கு சிரமமானதும் அதிக சிரத்தை வேண்டியதுமான இந்த ஹோமத்தை உங்கள் சக்தி விகடன் உங்களுக்காக, உங்கள் குடும்ப நல்வாழ்வுக்காக செய்ய இருக்கிறது. சக்தி விகடனும் திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலய நிர்வாகக் குழுவினரும் இணைந்து நடத்தும் மகா சுதர்சன ஹோமம், நிகழும் சார்வரி வருடம் மாசி மாதம் 11-ம் தேதி (பிப்ரவரி-23) செவ்வாய்க்கிழமை அன்று, திருவள்ளூர் பூங்காநகரில் அமைந்துள்ள அருள்மிகு சிவாவிஷ்ணு ஆலயத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மாசி ஏகாதசிப் புண்ணிய தினத்தில் ஹோமம் நடைபெற இருப்பது குறிப்பிடத் தக்கது.

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), திருவள்ளூர் - பூங்காநகர் சிவாவிஷ்ணு ஆலயத்தில் அருள்மிகு ஜலநாராயணர் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட காப்பு ரக்ஷை ஆகியவை (5.3.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

சுதர்சன மகா ஹோமம்!
சுதர்சன மகா ஹோமம்!

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம - வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன் பதிவு செய்ய க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 89390 30246

அடுத்த கட்டுரைக்கு