Published:Updated:

ஒரே இடத்தில் ஒன்பது யாகங்கள்!

மகா சுவாதி ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மகா சுவாதி ஹோமம்

மகா சுவாதி ஹோமம்

ஒரே இடத்தில் ஒன்பது யாகங்கள்!

மகா சுவாதி ஹோமம்

Published:Updated:
மகா சுவாதி ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மகா சுவாதி ஹோமம்

க்ஞங்கள் நம் ஆன்மிகப் பண்பாட்டின் ஆணி வேர். தெய்வங்களைத் திருப்திப் படுத்தவும் தேசத்தின் நலன், இயற்கை வளம், ஆட்சித் திறன், தனி நபர்களின் வளர்ச்சி என வேண்டும் வரம் யாவும் பெறவும் மேற்கொள்ளப்படும் புண்ணிய வைபவங்கள் அவை. நம் வேதங்களில் 400-க்கும் மேலான யாகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பெரியோர்கள் கூறுவர்.

அப்படி மண்ணுலகில் யக்ஞங்கள் செய் வதற்காகவே தோன்றிய தலம் இஞ்சிமேடு என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், 14-8-2021 சனிக்கிழமை அன்று உலக நன்மைக்காகவும் சக்தி விகடன் வாசகர்களின் நலன் வேண்டி யும் சக்தி விகடன் மற்றும் ஜீ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கிய மகா சுவாதி ஹோமம் சிறப்புற நடைபெற்றது.

முதலில் செஞ்சுலட்சுமி தாயார் சமேத ஸ்ரீகல்யாண நரசிம்ம மூர்த்திக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு ஸ்ரீராமர், ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீபெருந்தேவித் தாயார், ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று யாகங்கள் தொடங்கின.

லட்சுமி நரசிம்ம யாகம்
லட்சுமி நரசிம்ம யாகம்
352482534108101


பிரமாண்ட யாக சாலையில் உற்சவ மூர்த்தங்களின் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் கூடி பாலாஜி பட்டாச்சார்யர் தலைமையில் ஹோம வைபவம் தொடங்கியது.

கல்யாண வரம் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம யாகம், தோஷங்கள் அகற்றி நலம் அருளும் ஸ்ரீசுதர்சன மகா யாகம், நிலம், வீடு தொடர் பான சிக்கல்கள் தீர்க்கும் ஸ்ரீபூவராக மகா யாகம், கலை- ஞானம் அருளும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ யாகம், ஆரோக்கியம் வழங்கும் ஸ்ரீதன்வந்திரி மகா யாகம், செல்வவளம் அருளும் ஸ்ரீபாக்கியலட்சுமி மகா யாகம், பதவி யோகம் அருளும் ஸ்ரீராம யாகம், மழலை வரம் அருளும் ஸ்ரீசந்தான கோபால யாகம், காரிய ஸித்தி அருளும் ஸ்ரீவைணதேய ஆஞ்சநேய யாகம், என 9 வகை ஹோமங்கள் விரிவாக நடைபெற்றன. ஆலய நிர்வாகம் சார்பில் ஹோம வைபவ ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

இந்த வைபவத்தில் சங்கல்ப முன்பதிவு செய்துகொண்ட வாசகர்களின் பிரார்த்தனை கள் முறைப்படி சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப் பட்டு, சிறப்பு வேண்டுதலுடன் வழிபாடுகள் நடைபெற்றன.

மகா சுவாதி ஹோமம்
மகா சுவாதி ஹோமம்

`நாளை என்பதே இல்லை நரசிம்மரிடம்' என்பார்கள். அந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அருளால் வாசகர்களின் அத்தனை வேண்டு தல்களும், பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறட்டும் என்று பெருமாளை வணங்கி வழிபட்டு விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism