Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்மகன் கோவிந்தாசார்யாவை அழைத்து அவருக்குப் பிறக்கப் போகும் பெண் குழந்தைகள் குறித்த ரகசியங்களை விவரித்தார் ஸ்வாமி வீர பிரம்மேந்திரர்.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்


`உனக்குப் பிறக்கப் போகும் நான்கு பெண்களும் யோகினிகளாகத் திகழ்வார்கள். அவர்களில் மூத்தவள் ஈஸ்வரம்மா பார்வதிதேவி அம்சம். முக்காலமும் உணர்ந்த பிரம்மஞானியாகத் திகழ்வாள்...’ என்றெல்லாம் விவரித்த வீரபிரம்மேந்திரர் தன் சீடன் சித்தய்யாவின் சிறப்பையும் விவரித்தார்.

``சித்தய்யாவை சாமான்ய மனிதனாக நினைத்துவிடாதே. அவர் எங்கும் நிறைந்த எல்லாம்வல்ல மகேஸ்வரனின் அவதாரம். பூர்வ ஜன்மத்தில் காசி நகரில் தவசீலராகத் திகழ்ந்தவர். ஒருமுறை ஒரு பசுவை சிறுத்தைப் புலியிடமிருந்து காப்பாற்றுவதற்காக அம்பு தொடுத்தார். ஆனால் அந்த அம்பு பசுவின் உயிரைக் குடித்துவிட்டது.

அதன் காரணமாகவே இந்த ஜன்மம் எடுத்து என்னிடம் வந்து சேர்ந்துள்ளார். எனது சமாதிக்குப் பின்னர், வருங்காலத்தில் நீயும் உன் சகோதரர்களும் அவரின் மனம் புண்படும்படி ஒரு வார்த்தையும் பேசக்கூடாது. அவரை உங்களில் ஒருசகோதரராக எண்ணி, அவர் கூறுவதை ஏற்று நடக்கவேண்டும். நிறைவாக உன் மூலம் எல்லோருக்கும் ஓர் அறிவுரையை வழங்குகிறேன்...

உலகில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள். குல வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்றே என்ற சமநிலையின் மகத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்துங்கள். நான் சமாதி நிலையில் இருப்பினும் உங்களுடன்தான் இருப்பேன். ஆகவே, உங்கள் அன்னைக்கு விதவைக் கோலம் வழங்காதீர்கள். அவள் நித்திய சுமங்கலி ஆவாள். அவளை இறுதி வரை ஆதரவுடன் கவனித்துக்கொள்ளுங்கள்’’ என்று அறிவுரை வழங்கினார் வீரபிரம்மேந்திரர்.

அதேநேரம், ஸ்வாமி சமாதி நிலை அடையப் போகிறார் என்ற தகவல் திக்கெட்டும் பரவியது. நாலாதிசைகளிலும் இருந்து மக்கள் கூட்டம் வந்து கூடியது. ஸ்வாமி அவர்களிடம், ``குழந்தைகளே! என்னிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கவேண்டும் எனில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இனி இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்காது’’ என்றார். அதன்படியே மக்களில் பலரும் கேட்ட கேள்விகளுக்குப் பதில்களைக் கூறி ஆசி வழங்கினார். மேலும் பல விஷயங்களையும் எடுத்துரைத்தார்.

``நம் தேசத்திலிருந்து பல நாடுகள் பிரியும். மகதப் பேரரசு உருவாகும். மகத மன்னன் ஒருவன் தன் மகளின் சாபம் காரணமாகக் கல்லாக மாறுவான். பின்னர் காளிமாதாவின் அருளால் மீண்டும் உயிர் பெறுவான். ஈசான்ய மூலையில் உள்ள ஓரிடத்திலிருந்து விஷ வாயு உருவாகி எண்ணற்ற உயிர்கள் பலியாகும் (போபால் விஷவாயு சம்பவத்தை ஸ்வாமி அப்போதே கணித்துக் கூறியுள்ளார் என்பர்). வெள்ளைய இனத்தவர்களின் ஆட்சிக்குப் பிறகான காலத்தில் ஒரு மங்கை நம் தேசத்தை நீண்டநாள் ஆட்சி செய்வாள். வருங்காலத்தில் பாவங்கள் பெருகும். ஆகவே, இறைச் சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள்...’’ என்றெல்லாம் உபதேசித்தார் வீரபிரம்மேந்திரர்.

உபதேசங்களைக் கேட்டு சிலிர்ப்படைந்த மக்கள், அவரைவிட்டு எங்கும் செல்வதில்லை என்ற தீர்மானத்துடன் அவ்வூர் எல்லை யிலேயே குழுமியிருந்தனர்.

இந்த நிலையில் ஸ்வாமி தன் மனைவியிடம், ``தேவி நான் சமாதியில் அமரும் நேரம் வந்துவிட்டது. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் இறக்கப்போவதாக நீ நினைக்காதே. சமாதி நிலை எனக்கு முடிவல்ல; ஆரம்பம். ஜீவ சமாதியில் உயிருடன் தவம் செய்துகொண்டிருப்பேன். கலியுகத்தின் முடிவில் வீரபோக வசந்தராயராக வருவேன். ஆகவே, நீ சுமங்கலிக் கோலத்தை நீக்கவேண்டாம். உன் பயத்தையும் தயக்கத்தையும் களைந்துவிடு. இதுவே எனது விருப்பமும் உத்தரவும் ஆகும்’’ என்றார்.

அத்துடன் புத்திரர்களை அழைத்து, ``மைந்தர்களே! நான் இங்கு கூடியிருக்கும் அனைவரின் சாட்சியாக ஓர் உண்மையை வெளிப்படை யாகக் கூறப் போகிறேன். அதைக் கேட்டு நீங்கள் வருந்தவேண்டாம். இதுவும் இறைவனின் சங்கல்பமே!’’ என்றார்.

ஸ்வாமியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அவரின் மைந்தர்கள் மனம் பதைபதைத்தார்கள். எனினும் அவர் சொல்லப்போகும் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்கள்.

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர்
ஸ்வாமி வீரபிரம்மேந்திரர்

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் அமைதியாக, ``புத்திரர்களே எமது பரம்பரை உங்களோடு நிறைவடையும். அதேநேரம், ஈஸ்வரம்மா என்ற புனித தேவதை சக்தியின் அம்சமாக கோவிந்தாசார்யாவுக்குப் பிறப்பார். அவருடைய உபதேசத்தை எல்லோருக் கேட்டு முக்தி அடைவார்கள். நீங்கள் உங்களின் வாழ்நாள் முழுவதும் மடத்தில் சேவை செய்து வாருங்கள்.

என் சீடர்களும் நான் காட்டிய வழியில் செல்ல விரும்புவோரும் அனைத்துச் சமயத்தினரையும் சகோதரர்களாக மதித்து அன்பு காட்டவேண்டும். இப்போது எனக்குச் சமாதியை நெருங்கும் தருணம் வந்துவிட்டது. இறைவன் என்னை அழைக்கிறார். நான் சித்தய்யா வருவதற்குள் சமாதிக் குழிக்குள் அமரவேண்டும். அவன் வந்து விட்டால், என் சமாதிக் கோலத்துக்கு அனுமதி வழங்க மாட்டான். சூரிய-சந்திரர் இருக்கும் வரை சித்தய்யாவின் புகழும் ஓங்கியிருக்கும்’’ என்றார்.

பின்னர், சமாதி மேடையைத் தயார் செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் அவரின் புத்திரர்கள் அவரிடம், ``ஸ்வாமி! எங்களுக்கு உங்களுடைய பாதுகைகளும் நீங்கள் இவ்வளவு காலம் உபயோகித்த கைத்தடியும், சிக்கமுத்ரிகா எனப்படும் சிறிய - புதிய அணிகலனையும் தந்தருள வேண்டுகிறோம்’’ என்றனர்.

ஸ்வாமி சிரித்தபடியே ``நீங்கள் கேட்கும் பொருள்கள் யாவும் என் அன்புக்குரிய சித்தய்யாவையே சாரும். இந்தப் பவித்ரமான பொருள்களைத் தொடுவதற்குக்கூட சித்தய்யாவைத் தவிர, வேறு எவருக்கும் உரிமை இல்லை!’’ என்றார்.

பின்னர் மடத்தை சூழ்ந்து நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, சமாதிக்குழியில் பத்மாசனத்தில் அமர்ந்தார் வீரபிரம்மேந்திரர். தன் அருகில் அகண்ட ஜ்யோதியாக ஒரு விளக்கை ஏற்றிவைத்தபிறகு, நாலாபுறமும் தன்னைச் சுற்றி சுவர் எழுப்ப உத்தரவிட்டார்.

ஆனால், அங்கிருந்த எவருக்கும்ம் இந்தக் காரியத்தைச் செய்ய துணிவில்லை. ஆம்! தங்களின் தெய்வத்தை சமாதியில் அடைத்து வைக்க அவர்கள் ஒருவரும் விரும்பவில்லை. எல்லோரும் மனதும் வேதனையால் விம்மியது. `ஒருவேளை நமக்காக நம் ஸ்வாமி தன் னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாரா’ என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் நின்றிருந்தனர்.

பின்னர் தெய்வச் சங்கல்பம் இது என்பது மீண்டும் அவர்களுக்கு உணர்த்தப்பட, ஸ்வாமிக்கு அருகில் அணையா விளக்கொன்று ஏற்றி வைக்கப்பட்டது. அவர் அமர்ந்திருந்த சமாதிக் குழியைச் சுற்றிலும் செங்கல் வைத்து சுவர் எழுப்பப்பட்டது. நிறைவில் கனத்த இதயத்துடன் ஸ்வாமியின் ஜீவசமாதி மூடப்பட்டது.

ஒரு வைசாக சுத்த தசமி தினத்தில், அதாவது அமாவாசையில் இருந்து பத்தாவது நாள்... கலியுகத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டி அனைவரையும் காத்து ரட்சித்த வீரபிரம்மேந்திர ஸ்வாமி தமது ஜீவ சமாதி பயணத்தைத் தொடங் கினார்.

சூழ்ந்து நின்ற மக்களோ, ஸ்வாமியைப் பிரிந்த துக்கம் ஒருபுறம் வாட்ட, மறுபுறம் வெளியூர் சென்ற சித்தய்யா குறித்த கவலையும் சேர்ந்துகொள்ள தவிப்போடு இருந்தனர். குருபக்தியில் சிறந்த சித்தய்யா, `ஸ்வாமி சமாதிநிலை அடைந்துவிட்டார்’ என்ற தகவலை அறிந்ததும் என்ன செய்வாரோ... தானும் ஸ்வாமியுடன் செல்ல தயாராகிவிடுவாரே... என்ற பதைபதைப்புடன் காத்திருந்தனர்.

அங்கே சித்தய்யா, குருவின் கட்டளையை நிறைவேற்ற பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு வனத்தின் வழியாக நடந்துகொண்டிருந்த போது, அவருக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் `சித்தய்யா’ என்று அழைத்தது.

ஒரு விநாடியும் தாமதிக்கக் கூடாது என்று கருதியிருந்தார் சித்தய்யா. ஆனால் அந்தக் குரல் `சித்தய்யா’ என்று தன் பெயரைச் சொல்லி அழைத்ததும், வேறு வழியின்றி நின்று திரும்பிப் பார்த்தார். அங்கே, ஒளி பொருந்திய சாது ஒருவர் நிற்பதைக் கண்டார்.

``எங்கே, எதைத் தேடிச் செல்கிறாய் சித்தா?’’ எனக் கேட்டார் சாது. சித்தய்யா அவருக்கு ஓரிரு வரிகளில் விவரத்தைச் சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

சாதுவோ மீண்டும் அவரைப் பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் இம்முறை சித்தய்யா திரும்பிப் பார்ப்பதாக இல்லை. ஒரு கணம் நின்று `என்ன?’ என்று மட்டும் கேட்டார்.

``சித்தய்யா! நீ உன் குருவின் ஆணைப்படி பூக்களைப் பறித்துவர பயணப்படுகிறாய். ஆனால் ஒன்றை நீ கவனித்தாயா... இரவு பகலாக விடாமல் நடந்தும்கூட செல்ல வேண்டிய இடத்தில் அருகில்கூட உன்னால் செல்ல முடியவில்லையே! அதற்கான காரணத்தை நீ யோசித்துப் பார்த்தாயா?’’ என்றார் சாது.

``வேறு விஷயங்களை நான் ஏன் யோசிக்க வேண்டும். குருவின் கட்டளையை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்’’ என்றார் சித்தய்யா.

சாது புன்னகைத்தார். பிறகு, ``மகிழ்ச்சி! உனது நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உண்மையான குருபக்தி உனக்கு உண்டு எனில், இதோ... இங்குள்ள கிணற்றில் முளைத்திருக்கும் செடியில் இருந்து மூன்று இலைகளை மட்டும் பறித்துச் செல்’’ என்றார். அதன் பிறகு அந்தச் சாதுவின் குரல் ஒலிக்கவில்லை!

- தரிசிப்போம்...