Published:Updated:

கட்டுண்டான் கண்ணன்!

மகாபாரதக் கதை
பிரீமியம் ஸ்டோரி
மகாபாரதக் கதை

மகாபாரதக் கதை

கட்டுண்டான் கண்ணன்!

மகாபாரதக் கதை

Published:Updated:
மகாபாரதக் கதை
பிரீமியம் ஸ்டோரி
மகாபாரதக் கதை

நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் வித்தாக நிறைந்திருப்பவர், பரமாத்மாவே! பாரத யுத்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வென்றது யார்? சாட்ஷாத் பகவான் கிருஷ்ணர்தான். ‘பஞ்ச பாண்ட வர்கள்தானே போரில் ஈடுபட்டார்கள்? அவர்களுக்கு அந்தப் பெருமை சேராதா?’ என்று நாம் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால், பஞ்ச பாண்டவர்களை உயர்த்துவதற்காக, தருமமே சிறந்தது என்று அறத்தின் வழியே வாழ்ந்தவர்களை கௌரவப்படுத்துவதற்காக கண்ணன் செய்த விளையாட்டு அது! அவன் லீலைகள் அத்தனையும் நமக்கான பாடங்கள்.

யசோதா பிராட்டி, குறும்பு செய்த கண்ணனைக் கட்டிப்போட முடிவு செய்தாள். கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடை வெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தாள். அவனோ இன்னும் சற்று பெருத்தான். இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது.

இன்னொரு கயிறு... இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்துகொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். பகவான் யோசித்தான். `அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்? அம்மா துவண்டுவிட்டாளே! பாவம் அவள்’ என்று எண்ணியவன், `இந்தாம்மா... என்னைக் கயிற்றில் கட்டிக்கொள்’ என்பதுபோல், பருமனைக் குறைத்துக் கொண்டு நின்றான்.

உடனே, குறும்புக் கண்ணனைக் கயிற்றில் கட்டிப்போட்டாள் தாய். நம்முடைய தாய்- தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் கண்ணபிரான். இதில் இன்னொரு தகவலும் உண்டு. பகவான், தன் அம்மா மீது ஏற்பட்ட பரிதாபத்தால் மட்டுமா கட்டுண்டார்? அவளின் பேரன்புக்குக் கட்டுப்பட்டார்.

அன்னையிடம் மட்டுமல்ல, அடியார்தம் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். இந்தச் சிறப்பையே ‘கண்ணிநுண் சிறுத் தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்...’ எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது!

தொகுப்பு: எஸ்.கண்ணன், சென்னை-74

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism