Published:Updated:

மாலிகனும் சுதர்சனமும்!

short story
பிரீமியம் ஸ்டோரி
short story

short story

மாலிகனும் சுதர்சனமும்!

short story

Published:Updated:
short story
பிரீமியம் ஸ்டோரி
short story

யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன் மாலிகன். அவனுக்குச் சகல கலைகளையும் கற்றுத் தந்தார் கண்ணன். கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் மாலிகனை ஆட்டிப்படைத்தன!

கண்ணன்
கண்ணன்


ஒருமுறை அவன் கண்ணனிடம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்கவும் பயிற்சி தரவேண்டும் என்று விண்ணப்பித்தான். `அது அபாயகரமானது. அந்த ஆசை உனக்கு வேண்டாம் மாலிகா' என்று புத்திமதி கூறினார் கண்ணன். ஆனால், அவரின் அறிவுரையை மாலிகன் ஏற்கத் தயாராக இல்லை. வேறு வழியின்றி சக்ராயுதப் பிரயோகப் பயிற்சிக்கு சம்மதித்தார் பகவான்.

சக்ராயுதத்தை விரலில் ஏந்திய கண்ணன், தனது விரலால் ஒரு சுழற்று சுழற்றி இலக்கை நோக்கி ஏவினார். சுழன்று மேலெழும்பிய அந்த வீரச் சக்கரம் காற்றில் விரைந்து பயணித்தது. மிகச் சரியாக இலக்கைத் தாக்கிய பிறகு, மறுபடி யும் கிருஷ்ணரின் விரலை வந்தடைந்தது.

அடுத்து மாலிகன் முறை! கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை விரலால் ஒரு சுழற்று சுழற்றினான். விண்ணில் எழும்பியது சக்கரம். குதூகலம் அடைந் தான் மாலிகன். `ஆஹா... சாதித்து விட்டேன். இனி, இரண்டு கண்ணன்கள். யதுகுலத்தை நானும் ரட்சிப்பேன்!' என்று ஆணவம் தலைதூக்கக் கூவினான்.

மட்டுமன்றி... திரும்பி வரும் சக்ராயுதத்தை ஏற்க, விரலைத் தயாராக வைத்திருக்க வேண்டியவன், வியப்பால் தனது கரத்தை முகவாயில் வைத்து நின்றிருந்தான். இதனால், மாலிகனின் கரத்தை அடைய வேண்டிய சக்ராயுதம் அவன் கழுத்தைத் துண்டித்தது. மண்ணில் வீழ்ந்தான் மாலிகன்.

அகந்தையால் அழிந்துபோனவனைக் கண்ட கண்ணன் ``மாலிகா! உன்னை அழித்தது சக்ராயுதம் அல்ல; உனது ஆசையும் ஆணவமுமே!'' என்று உரைத்தார். ஆண்டவனுக்கு அருகிலேயே இருந்தாலும் அகந்தை கொண்டிருந்தால், அதுவே அவரை அழித்துவிடும் என்பதற்கு சான்று இந்த கதை!

- ஆர்.அலமேலு, சென்னை-85