Published:Updated:

ஸ்ரீதன்வந்திரி ஹோமம்: 48 நாள்களில் வந்த பிணி அகல,வருத்தும் துன்பம் நீங்க நீங்களும் சங்கல்பியுங்கள்!

ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்

ஸ்ரீதன்வந்திரி ஹோமம் : செல்வவளம் வழங்கும் இந்த திவ்யஸ்தலம் நோய்கள் தீர்க்கும் கோயிலாகவும் விளங்கி வருகிறது. இங்கிருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்கிப் பிரார்த்தித்தால் தீராத நோய்களும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.

ஸ்ரீதன்வந்திரி ஹோமம்: 48 நாள்களில் வந்த பிணி அகல,வருத்தும் துன்பம் நீங்க நீங்களும் சங்கல்பியுங்கள்!

ஸ்ரீதன்வந்திரி ஹோமம் : செல்வவளம் வழங்கும் இந்த திவ்யஸ்தலம் நோய்கள் தீர்க்கும் கோயிலாகவும் விளங்கி வருகிறது. இங்கிருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்கிப் பிரார்த்தித்தால் தீராத நோய்களும் தீர்ந்து போகும் என்கிறார்கள்.

Published:Updated:
ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்
ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்
ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்

சேலத்தில் குறை தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகள் நீக்கும் பரிகாரக் கோயிலாகவும் விளங்கி வருகிறது ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம். இங்கு சகலவிதமான தெய்வங்களும் குடிகொண்டு மக்களின் துயரங்களைத் தீர்த்து வருகின்றனர். தெய்வங்களின் அருள் மட்டுமின்றி எண்ணற்ற சித்தர்கள்; யோகிகளின் அருள் சாந்நித்யமும் கொண்டு விளங்குவதால் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கையால் புகழ்பெற்று வருகின்றது. இந்த பிரமாண்ட ஆலயத்துக்கான விதையை ஊன்றியவர்கள் அருள்சித்தர் செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் அவர்களும்தான் என்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் ரோடில் ஜாகீர் அம்மாபாளையம் அருகே ஸ்ரீவீரமாதுருபுரியில் இந்த ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தை உருவாக்கிய இந்த இரண்டு சித்தர்களும் இங்கேயே வாழ்ந்திருந்து துன்பத்தில் உழன்றவர்களுக்கு துயர் தீர்க்கும் ஞான வள்ளலாக இருந்து வந்தனர். தம்மை தேடி வரும் பக்தர்களுக்கு அவர்கள் கூறாமலே அவர்களைப் பற்றி அருள் வாக்கு கூறி, குறைகள் தீர உபாயமும் சொல்லி நல்வழிப்படுத்தினர். அந்த காலத்தில் சித்தர் பாவாயம்மாள் திங்கள், வெள்ளி நாள்களில் செப்பு ஆணி பாதரட்சை அணிந்து வாக்கு சொன்னால் அது தேவவாக்காகவே இருக்கும் என்று மெய்சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். இன்று அவர்களின் திருக்குமாரர் திரு.சோமசுந்தரம் அந்த சேவையை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி செய்து வருகிறார்.

ஸ்ரீதன்வந்திரி ஹோமம்
ஸ்ரீதன்வந்திரி ஹோமம்

இங்கு வந்து குறைகளும் துன்பங்களும் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம். இதனால் பக்தர்கள், ஆன்மிக அன்பர்களின் ஒத்துழைப்பால் இந்த ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமமும் வேகமாக வளர்ச்சி அடைந்தது. நாள்தோறும் விழாக்கள், பரிகார ஹோமங்கள் என இன்றும் நடைபெற்று வருகின்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீவள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீகாவடி பழனியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீதீர்த்த பிள்ளையார், ஸ்ரீஅலமேலுமங்கா சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீதன்வந்திரி பகவான், ஸ்ரீசரபேஸ்வரர், 18 ஐம்பொன் சித்தர்கள், சீரடி சாய்பாபா என எண்ணற்ற சந்நிதிகள் இங்கு வெகு சாந்நியத்துடன் உள்ளன. இங்கு மட்டுமே 108 திருமகள் வடிவங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. இங்கு நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி தேசங்களைத் தாண்டியும் இருக்கும் பக்தர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு பலன் பெறுவார்கள்.

மஹாதன்வந்திரி
மஹாதன்வந்திரி

செல்வவளம் வழங்கும் இந்த திவ்யஸ்தலம் நோய்கள் தீர்க்கும் கோயிலாகவும் விளங்கி வருகிறது. இங்கிருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்கிப் பிரார்த்தித்தால் தீராத நோய்களும் தீர்ந்து போகும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் ஸ்ரீதன்வந்திரி மஹாஹோமத்தில் கலந்து கொண்டால், சகல வியாதிகளும் நீங்கி ஆரோக்கிய வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். எனவே ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.

சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் ஆரோக்கியத்துக்காகவும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்! ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் உடல் - மனநோய்கள், சகலவிதமான தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் அவை எல்லாம் நீங்கி நிச்சயம் பலன் பெறுவர். உடல் குறைபாடுகள் நீங்கி நோய் அச்சமின்றி பூரண ஆயுளை அடைவர் எனப்படுகிறது. தீராத வியாதிகளை உடையோர், வியாதி குறித்த பயம் கொண்டோர், பூரண ஆரோக்கியம் வேண்டுவோர், நீண்ட ஆயுள் வேண்டுவோர் என அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது நல்லது என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சூழ இந்த அபூர்வ ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+ ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.