Published:Updated:

மஹாளய அமாவாசை: `இறந்துபோன நண்பனுக்கும் பித்ரு கடன் செய்யலாமா?' - சில கேள்விகளும் விளக்கங்களும்!

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை குறித்த சில கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்.

மஹாளய அமாவாசை: `இறந்துபோன நண்பனுக்கும் பித்ரு கடன் செய்யலாமா?' - சில கேள்விகளும் விளக்கங்களும்!

மஹாளய அமாவாசை குறித்த சில கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்.

Published:Updated:
மஹாளய அமாவாசை
மாத முதல் நாள்கள் 12, அமாவாசை நாள்கள் 12, அஷ்டகை நாள்கள் 12, வ்யதீபாத நாள்கள் 13, வைத்ருதி நாள்கள் 13, மன்வாதி நாள்கள் 14, யுகாதி நாள்கள் 4, மஹாளய பட்ச நாள்கள் 16 என மொத்தம் பித்ருக்களான நாள்கள் 96. இதில் மஹாளய அமாவாசை நாள் உத்தமமானது.
மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை

மஹாளயத்தில் ஏன் பித்ரு கடன் செய்ய வேண்டும்?

"தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை."


இறந்த முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு, விருந்தினர், சுற்றம், குடும்பம் என ஐந்தையும் அறநெறியோடு காத்தல் வேண்டும் என்கிறது குறள். தெய்வ வழிபாட்டைக் காட்டிலும் முன்னோர்கள் வழிபாடு முக்கியம். அது உங்களை சகல துன்பங்களில் இருந்தும் காத்துவிடும் என்பது நம்பிக்கை.

பித்ரு வழிபாட்டை யார் யார் செய்யவேண்டும்?

தந்தை-தாய் இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும். குழந்தை இல்லாத, கணவனை இழந்தப் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தந்தை-தாய் இழந்த பெண்கள் இந்நாளில் தானம் செய்யலாம், கோயிலுக்குச் சென்று வணங்கலாம். ஆனால் தர்ப்பணம் செய்வதற்கு விதிக்கப்படவில்லை. தில தர்ப்பணமும் சிரார்த்தமும் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது.

பித்ரு தோஷம்
பித்ரு தோஷம்


நண்பர்களுக்கும் பித்ரு கடன் செய்யலாமா?

பித்ரு, மாத்ரு, காருணீக வர்க்கம் என்று பித்ரு வழிபாடுகள் மூன்று வகை. பித்ரு வர்க்கம் என்றால் தந்தை வழி, மாத்ரு வர்க்கம் என்றால் தாயார் வழி, காருணீக வர்க்கம் என்றால் வாரிசு இல்லாத உறவினர்கள், மனைவி வழி உறவுகள், குரு, எஜமானர், நண்பர்கள் என அனைவருக்கும் அவரவர் பெயர், கோத்திரம் சொல்லி தர்ப்பணம் செய்யலாம்.  

பித்ரு கடன்களை வீட்டில் செய்யலாமா?

ஐதீகப்படி செய்யத் தெரிந்தவர்கள் தாராளமாக வீட்டில் செய்யலாம். அதில் தவறு இல்லை. சாஸ்திரங்களில் சொல்லியபடி சிரார்த்தம் செய்து உரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம். கங்கை, நர்மதா, காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளை மானசீகமாக வரவழைத்து தர்ப்பணம் செய்து அந்த நீரை கால் படாத இடத்திலோ, நீர்நிலைகளிலோ சேர்த்துவிட வேண்டும். மஹாளயத்தில் பித்ரு பூஜை செய்யாமல் தெய்வ பூஜை செய்யக்கூடாது என்பது நியதி. எனவே ஏனோதானோவென்று செய்யாமல் சிரத்தையுடன் பயபக்தியுடன் பித்ரு வழிபாடு செய்யவேண்டும் என்பதே முக்கியம்.

பித்ரு காரியங்கள்
பித்ரு காரியங்கள்

மஹாளய அமாவாசையில் செய்ய முடியாவிட்டால்?

கட்டாயம் மஹாளய அமாவாசை தினத்தில்தான் பித்ரு வழிபாடு செய்யவேண்டும். இதில் விலக்கு என்று ஒன்று இல்லவே இல்லை. சாஸ்திரம் குறிப்பிட்ட 96 நாள்களுக்கும் செய்ய முடியாதவர்களுக்கு என்றே இந்த ஒருநாள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது மாத முதல் நாள்கள் 12, அமாவாசை நாள்கள் 12, அஷ்டகை நாள்கள் 12, வ்யதீபாத நாள்கள் 13, வைத்ருதி நாள்கள் 13, மன்வாதி நாள்கள் 14, யுகாதி நாள்கள் 4, மஹாளய பட்ச நாள்கள் 16 என மொத்தம் பித்ருக்களான நாள்கள் 96. இதில் மஹாளய அமாவாசை நாள் உத்தமமானது. இதிலும் செய்ய முடியாவிட்டால் எப்படி! பித்ருக்கள் பூமிக்கு வரும் இந்த நாளில் அவர்களுக்கு வழிபாடு அவசியமானது.

மஹாளய பட்ச காலத்தில் செய்யும் ஒவ்வொரு நாள் வழிபாடும் கயா சிரார்த்தத்திற்கு சமம் என்கிறது சாஸ்திரம். அதேபோல மஹாளய பட்ச காலத்தில் வரும்  மஹா பரணி நாளில் செய்யப்படும் வழிபாடு 5 மடங்கு பலன் அளிக்கும். வ்யதீபாதம் நாளில் செய்யப்படும் வழிபாடு 10 மடங்கு பலன்களை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. மஹாளய மத்யாஷ்டமி நாள் 20 மடங்கு பலனும், துவாதசி புண்ணிய காலம் 100 மடங்கு பலன்களையும் அளிக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். மஹாளய அமாவாசை பித்ரு வழிபாடு 1000 மடங்கு புண்ணியத்தையும் பலனையும் தரும் எனவே இந்த நாளில் பித்ருக்களை வழிபடுவதை மறக்காதீர்கள். ஒருவேளை சூழலின் காரணமாக முடியாவிட்டால் மஹாளய அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமிக்குள் செய்யலாம்.

நீத்தார் வழிபாடு
நீத்தார் வழிபாடு

பித்ரு காரியங்களை ஆண்களுக்கு மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது சரியா?

பெண் அதாவது தாயார் நம்மை விட்டு நீங்குவதே இல்லை. நம்முடைய தொப்புள் இருக்கும்வரை தாயார் நம்முடனே இருக்கிறார். அதனால் அவருக்கு என்று தனியே தேவை இல்லை என்றும் மாத்ரு வர்க்கம் என்று தந்தைக்கு செய்யும்போதே அது தாயின் வழி வந்தவர்களுக்கும் சென்று விடுவதால் ஆண்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.

தில ஹோமம் யார் செய்ய வேண்டும்?

கறுப்பு எள்ளை அக்னியில் சமர்ப்பிக்கும் புராதானமான ஹோமம் இது. அகாலமாக மரணம் அடைந்தவர்கள், நீங்காத ஆசையோடு உயிர் விட்டவர்கள், மனவருத்தத்தோடு மறைந்தவர்களுக்கு அவர்களின் குறைகள் நீங்கும் வண்ணம் செய்யப்படும் ஹோமம் இது. முறையான வழிபாடு செய்யப்படாத ஆன்மாக்கள், பித்ரு வழிபாட்டை முறை தவறி செய்து அதனால் தவிக்கும் ஆன்மாக்களுக்கு இந்த ஹோமம் ஆன்ம சாந்தியை அளிக்கும் என்பர். இந்த ஹோமத்தால் பிரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடுவர். மேலும் இறந்த ஆன்மாக்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, முன்னேற்றம் அடையவும் பயன்படும்.

தில ஹோமத்தை வீட்டில் செய்யக் கூடாது. தேவையில்லாமலும் செய்யக் கூடாது. பித்ரு தோஷத்தால் அவதிப்படுவோரே தில ஹோமத்தைச் செய்ய வேண்டும். எள் மகாவிஷ்ணு அம்சம், அவர்  வியர்வையிலிருந்து தோன்றியதாக புராணம் சொல்லும். எனவே எள்ளை பித்ருக்களுக்கான காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைப்படியே இந்த ஹோமத்தை செய்ய வேண்டும் என்பது நியதி.

நீத்தார் வழிபாடு
நீத்தார் வழிபாடு

நீத்தார் கடன், நீத்தார் வழிபாடு, தென்புல வாழ்நர் என்றெல்லாம் சங்க இலக்கிய காலம் தொட்டே இருந்து வரும் பித்ரு வழிபாட்டின் பெருமையை உணர்ந்து வரும் செப்டம்பர் 25-ம் தேதி, புரட்டாசி 8-ம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் மஹாளய அமாவாசை நாளில் நம் குலம் தழைக்கச் செய்யும் நம் முன்னோர்களுக்கு கட்டாயம் சிரார்த்தம், தர்ப்பணம், படையல், தானம் என அனைத்தையும் சிறப்பாகச் செய்து முன்னேற்றம் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.