Published:Updated:

இனிதே நடைபெற்ற மஹாலட்சுமி ஹோமம்!

மஹாலட்சுமி ஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
மஹாலட்சுமி ஹோமம்!

மஹாலட்சுமி ஹோமம்!

இனிதே நடைபெற்ற மஹாலட்சுமி ஹோமம்!

மஹாலட்சுமி ஹோமம்!

Published:Updated:
மஹாலட்சுமி ஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
மஹாலட்சுமி ஹோமம்!

அன்னையின் திருவருளை நம் வாசகர் களும் பெற்றுப் பலன் அடையும் விதமாக, கடந்த 15.5.22 ஞாயிறு அன்று இந்த ஆலயத்தில் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

மகாலட்சுமி ஹோமம்
மகாலட்சுமி ஹோமம்

மதுரை மாவட்டம், மதுரை - விருதுநகர் நெடுஞ் சாலையில், திருமங்கலம் அருகே இராயப்பாளையம் எனும் கிராமத்துக்குச் செல்லும் வழியில் அமைந் துள்ளது சத்ய யுக சிருஷ்டி கோயில். இங்கு 108 சந்நிதிகளும் 600-க்கும் மேற்பட்ட தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தெய்வச் சந்நிதிகளில் 18 கரங்களுடன் கூடிய அஷ்ட தசபுஜ மகாலட்சுமி அருளும் சந்நிதியும் ஒன்று. கலை மகள், அலைமகள், மலைமகள் என முப்பெருந்தேவியரின் அம்சத்துடன் திகழ்கிறாள் இந்த லட்சுமிதேவி. இந்த அன்னை 18 கரங்களுடன் தேவர்களுக்கும் மானிடர்களுக்கும் வேண்டியதை எல்லாம் வழங்கும் தேவியாக அருள்கிறாள்.

மகாலட்சுமி
மகாலட்சுமி


குறையில்லா செல்வத்தோடு பொறுமை முதலான நற்குணங்களையும் சகல நன்மைகளையும் அருள்பவள் இந்த லட்சுமிதேவி. அபூர்வ கோலத்தில் அருளும் இந்த அன்னையை வணங்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் சௌபாக்கிய வாழ்வும் உண்டாகும். வாழ்வில் சகல செல்வங்களும் நிச்சயம் வந்து சேரும் என்பது ஐதிகம்.

இந்த அன்னையின் திருவருளை நம் வாசகர் களும் பெற்றுப் பலன் அடையும் விதமாக, கடந்த 15.5.22 ஞாயிறு அன்று இந்த ஆலயத்தில் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

சக்தி விகடனும் `சத்ய யுக சிருஷ்டி' கோயில் நிர்வாகத்தினரும் இணைந்து நடத்திய இந்த ஹோமம், மே-15 அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி - சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரையில் நடை பெற்றது. அன்றைய தினத்தில் வைகாசி மாதப் பிறப்பு மற்றும் நரசிம்ம ஜயந்தி இணைந்து வந்தது மிகவும் விசேஷம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்தனர் கோயில் தரப்பினர்!

மகாலட்சுமி ஹோமம்
மகாலட்சுமி ஹோமம்


வாசகர்களின் பெயர்-நட்சத்திரத்துடன் சங்கல்பம் செய்து, அவர்களின் பிரார்த்தனை கள் விரைவில் நிறைவேற உரிய வேண்டுதலுடன் ஹோமம் தொடங்கியது. மஹாலட்சுமிக்கு உகந்த தங்கம், தாமரை, நெல்லிக்காய், வெள்ளைப் பூக்கள், அபூர்வ சமித்துகள் மற்றும் மூலிகை பொருள்களால் இந்த ஹோமம் அற்புதமாக நடைபெற்றது. 108 முறை விஷ்ணு, மகாலட்சுமி மூல மந்திரம் சொல்லியும், நெல்லி, தாமரை, மூலிகைகள் ஆகிய ஒவ்வொன்றையும் 16 முறை சமர்ப்பித் தும் ஹோமம் நடந்தேறியது.

யாகங்களால் மகிழ்பவள் திருமகள். அந்த அன்னைக்கான ஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்திக்கும் அன்பர்களுக்கு நீங்காத செல்வம், நிலைத்த புகழ், அதிகார பலம், மன அமைதி, காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், சொந்த வீடு, வேலை வாய்ப்பு முதலான சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.

அஷ்ட தசபுஜ மகாலட்சுமி
அஷ்ட தசபுஜ மகாலட்சுமி


இவை யாவும் வாசகர்களுக்குக் கிடைக்கவும், அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வில் சிறக்கவும் ஆலயத்தின் சார்பில் சிறப்பு அபிஷேக - ஆராதனைகள், அன்னதானம் போன்றவையும் நடைபெற்றன. அனைவரின் இல்லங்களிலும் அலைமகளின் திருவருள் பொங்கிப் பெருகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism