புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

கண்டோபா பைரவர் தரிசனம்!பாவம் தீர்க்கும் மஞ்சள் பொடி!

கண்டோபா பைரவர்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டோபா பைரவர்

கண்டோபா பைரவர்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகில் இருக்கும் `ஜிஜூரி' எனும் பகுதியில் அமைந்துள்ளது கண்டோபா திருக்கோயில். 6 நூற்றாண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில், மார்த்தாண்ட பைரவர் ரூபத்தில் அருள்கிறார் சிவபெருமான்.

கண்டோபா திருக்கோயில்
கண்டோபா திருக்கோயில்
கண்டோபா பைரவர்
கண்டோபா பைரவர்


புனே நகரிலிருந்து கோலாப்பூர் செல்லும் ரயிலில் பயணித்து, கண்டோபா கோயிலுக்குச் செல்லலாம். வேண்டுதல்கள் விரைவில் பலிக்க, ஆலயத்தின் மீதும் ஈசனின் மீதும் மஞ்சள் பொடி வீசுவது இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்புப் பிரார்த்தனை ஆகும். இதற்காகவே, இங்குள்ள கடைகளில் சிறிய துணிப்பைகலில் மஞ்சள் பொடி விற்பனை செய்யப்படுகின்றன.

ஒருமுறை, சிவபெருமானுக்கான நிவேதனப் படையலைச் சாப்பிட்ட கிருஷ்ணர், சிவனாரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானார். பின்னர் அவர் ருத்ர தாண்டவம் புரிந்த சிவனாரை வணங்கிச் சரணடைந்தார்.

சிவபெருமான் சினம் தணிந்து, கிருஷ்ணரின் மீது மஞ்சள் பொடியை எடுத்து வீசினார். அதனால் கிருஷ்ணரின் சாபம் நீங்கியது. அவர் தமது புல்லாங்குழலை சிவனாரின் பாதத்தில் சமர்ப்பித்தார். அதிலிருந்து வெளியான இசையில் `முரளிகள்’ எனப்படும் பெண்கள் தோன்றினர். அவர்கள் கண்டோபாவில் சிவ பக்தைகளாக மாறி, அவரின் புகழைப் பாடி வழிபட்டார்களாம்!

இன்றைக்கும் கண்டோபாவில் இந்த முரளிகள் உண்டு. ஜிஜூரி யில் எந்த வீட்டில் நல்ல காரியம் நடந்தாலும், இந்தப் பெண்களே அங்கு ஆடல்-பாடலுடன் கண்டோபாவின் கதையைக் கூறி பூஜை செய்து கொடுக்கிறார்கள்.

கண்டோபா கோயில்
கண்டோபா கோயில்
பாவம் தீர்க்கும் மஞ்சள் பொடி
பாவம் தீர்க்கும் மஞ்சள் பொடி
கண்டோபா
கண்டோபா

பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்ற மணி, மல்லா ஆகிய அசுரர்கள், தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினர். அவர்களை அழித்துத் தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் சரண் புகுந்தனர். சிவனாரும் மார்க்கண்டேய பைரவராக வடிவம் கொண்டு அசுரரை அழிக்கப் புறப்பட்டார்.

`மனிசுர்னா' எனும் மலைப்பகுதியில் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் சிவனுடன் பார்வதியும் மோகினி அவ தாரமாகக் கருதப்படும் மஹால்சாவும் கலந்துகொண்டனர். கார்த்திகை அமாவாசை அன்று தொடங்கிய போர், 6 நாள்கள் நடந்தது. சம்பசஷ்டி தினத்தில் அசுரர்கள் வீழ்ந்தனர்.

அசுரர்களை அழித்த கண்டோபா சுயம்பு லிங்கமாக ஜிஜூரி மலையில் வாசம் செய்ய ஆரம்பித்தார். அசுரனான மணி, தான் இறக்குமுன் சிவனாரைச் சரணடைந்து, தன் குதிரையைச் சமர்ப்பித்தான். மட்டுமன்றி, கண்டோபா இறைவன் குடிகொள்ளும் இடத்தில் தாங்களும் இடம்பெற வேண்டும் என அசுரர்கள் இருவருமே வேண்டிக்கொண்டார்களாம். இன்றைக்கும் வருடம்தோறும் குறிப்பிட்ட ஆறு நாள்கள் இங்கே திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இறைவன் கண்டோபாவாக மாறி போர் புரிந்தபோது, வாள் ஒன்றைப் பயன்படுத்தினார். விளக்கு ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாள் அது. இப்போதும் விழாக் காலங்களில் அதை ஊர்வலமாக எடுத்துச் செல் கின்றனர்.

மலைமீது இருக்கும் கோயிலுக்கு சுமார் 700 படிகள் ஏறிச் செல்ல வேண் டும். இந்தப் படிகள் முதற்கொண்டு ஆலயத்தின் கட்டுமானங்கள் பலவும் பக்தர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டது. பக்தர்கள், தங்களின் வேண்டுதல் பலித்ததும் காணிக்கையாக, தேவைப் படும் கட்டுமானத்தைத் தங்களின் செலவில் செய்துகொடுக்கிறார்களாம்.

இங்கே இறைவன் சிவன், பைரவர், கார்த்தியா, சூர்யா ஆகியோர் அம்சமாக அருள்கிறார் என்பது நம்பிக்கை. மணி, மல்லா பெயரை உள்ளடக்கி `மல்ஹெரி’ என்றும் கண்டோபாவை பக்தர்கள் அழைக்கின்றனர்.

கண்டோபா கோயில்
கண்டோபா கோயில்
கண்டோபா முரளிகள்
கண்டோபா முரளிகள்
கண்டோபா வழிபாடு
கண்டோபா வழிபாடு


கோயிலில் மூலவர் தேவியருடன் அருள்கிறார். கோயிலுக்குள் தனியாகவும் குதிரை வாகனத்தில் கண்டோபா காட்சிகொடுக்கிறார். இவரின் இரண்டு மனைவியரில் ஒருவர், ஆடு மேய்க்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆதியில் ஆடு மேய்க்கும் தன்கர் சமுதாயத் தினர் கண்டோபாவை தங்களின் குலதெய்வ மாக வழிபட்டு வந்தார்களாம்.

கண்டோபா கோயில் முதன் முதலாக 1608ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பிறகு, 1637-ல் மராத்தா மன்னன் ரகோ மாம்பாஜி இதர பகுதிகளைக் கட்டினார். இங்குள்ள பெரிய ஆலய மணி, மும்பை-வசாயைச் சேர்ந்த போர்ச்சுக்கல் சர்ச் சார்பாக காணிக் கையாகக் கொடுக்கப்பட்டதாம். மூலவர் சிலை தஞ்சையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

புனே - பெஷாவா மன்னர் நானா பட்நவிஸ் 10 ஆயிரம் வெள்ளி நாணயங் களைக் காணிக்கையாக இந்தக் கோயிலுக்குச் செலுத்தினார். அவற்றைக் கொண்டு தற்போது உள்ளவாறு கருவறை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும் வேண்டு தலை மனதில் நினைத்தபடி தீபத்தில் எண்ணெய் ஊற்றி வழிபடுகிறார்கள். அதேபோல், கோயிலில் பக்தர்கள் வீசியெறியும் மஞ்சள் பொடி, உடம்பில் பட்டால் சகல பாவங்களும் விலகும் என்பது ஐதிகம்.

அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள், மலையடிவாரத்தில் ஓடும் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து கண்டோபாவுக்குக் காணிக்கை செலுத்துவதைக் காணலாம்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியர் அவசியம் இங்கு வந்து வழிபடுகிறார்கள். கண்டோபாவை தரித்தால் முற்பிறவி பாவங்கள் தொலையும்; மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.