Published:Updated:

உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் விரும்பியதை அருளும் மகாஸ்கந்த ஹோமம்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

மகாஸ்கந்த ஹோமம்

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.

உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் விரும்பியதை அருளும் மகாஸ்கந்த ஹோமம்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.

Published:Updated:
மகாஸ்கந்த ஹோமம்
இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம்
ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம்

நமது தொன்மையான வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிப்பது முருக வழிபாடு. குறிஞ்சி நிலக்கடவுளாக வழிபடப்படும் முருகப்பெருமான் ஆற்றல், துணிவு, தீமைகளை அழித்தல், அதிகாரம், நல்ல சேர்க்கை போன்றவற்றின் அடையாளமாக விளங்குகிறார். தாரகாசுரன் உள்ளிட்ட அசுரர் சக்திகளை அழிக்க முருகன், ஈசனின் திருக்கண்ணில் தோன்றி வளர்ந்தான் என்கின்றன புராணங்கள். வைகாசி மாத விசாக நட்சத்திர தினமே முருகப்பெருமானின் அவதார தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நாளில் முருகனை வழிபட வேண்டியது யாவும் கிட்டும் என்கின்றன ஆன்மிக நூல்கள். அதிலும் முருகப்பெருமானுக்கு பெருவிருப்பமான மகாஸ்கந்த ஹோமம் நடத்தி வழிபட்டால் கூடுதல் பலன் என்றும் கூறுகிறது.

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். மேலும் வைகாசி விசாக நாள் முழுவதும் பால் குட ஊர்வலம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாகங்கள், அர்ச்சனைகள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பிரம்மரந்தீஸ்வரர் கோயில்
பிரம்மரந்தீஸ்வரர் கோயில்

உச்சுவாடி கிராமத்தில் ஏன் இந்த ஹோமத்தை நடத்த வேண்டும்? முருகப்பெருமான் சிறுபிள்ளையாக இருந்தபோது விளையாட்டாக தந்தைக்கே பிரணவ மந்திரத்தை குருபீடத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தார் இல்லையா, இதனால் தகப்பன் சுவாமி என்றும் திருநாமம் கொண்டார் இல்லையா! இதற்கு மாற்றாக; பிராயச்சித்தமாக திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் ஈசனை வழிபட்டு, அவரிடம் இருந்து சித்த யோகக்கலைகளைக் கற்றார் என்கிறது இந்த ஊர் தலபுராணம். அதுமட்டுமா, இங்குள்ள ஈசன் பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இங்குள்ள முருகப்பெருமானும் யோக வடிவாக ஞான குருவாக அருளுகிறார். மேலும் மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த பாஷாண மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார் முருகன்.

வெண்ணாற்றங்கரையில் உள்ள இந்த திருத்தலம் யோக-சித்த கலைகளைப் பயில்பவருக்கு அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக்கலையில் பிரம்மரந்திரம் என்றால் ஆதாரச் சக்கரங்களில் சகஸ்ராரம், அதற்கு மேல் துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார். அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக எழுந்தருளி இருக்கிறாள். இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்! அதுமட்டுமா, இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. ஈசனிடம் ஆசி பெற, இங்கு வந்து சகாதேவன் வழிபாடு செய்து வரங்கள் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது.

பிரம்மரந்தீஸ்வரர்
பிரம்மரந்தீஸ்வரர்

புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த ஊரில் மகத்தான மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, செவ்வாய் ஆகிய ஐவரின் அம்சத்தையும் தன்னுள் கொண்டவன் முருகப்பெருமான். இதனால் முருகனை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். செவ்வாய் உண்டாக்கும் சகல தடைகளும் விரயங்களும் நீங்கும். குருபார்வை பலமாகி மங்கல காரியங்கள் நடைபெறும். அதிகார பலமும் அளவற்ற செல்வ வளமும் சேரும். நல்ல உறவுகளை உருவாக்கித் தருபவன் முருகன், எனவே மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் உறவுச் சிக்கல்கள் நீங்கி உன்னத நிலையை அடையலாம்.

மேலும் ஆயுள் ஆரோக்கியம் கூடும். நீடித்த புகழ் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, அச்சமற்ற நிலை, விரயமற்ற செல்வம், துணிவு; தைரியம் பிறக்கும், பிள்ளைகளின் தீய பழக்க வழக்கங்கள் மாறும். நிம்மதியான வாழ்வு, திருஷ்டி-எதிரிகளின் பிரச்னைகள் நீங்கும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்)

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism