Published:Updated:

இனிதே நடைபெற்ற ஶ்ரீமஹாஸ்கந்த ஹோமம்

மஹாஸ்கந்த ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மஹாஸ்கந்த ஹோமம்

மஹாஸ்கந்த ஹோமம்

இனிதே நடைபெற்ற ஶ்ரீமஹாஸ்கந்த ஹோமம்

மஹாஸ்கந்த ஹோமம்

Published:Updated:
மஹாஸ்கந்த ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
மஹாஸ்கந்த ஹோமம்

நட்சத்திரங்கள் 27. அவற்றில் விசாகம் முருகப்பெருமான் அவதரித்ததால் பெருமை பெற்றது. வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் முருகப்பெருமானைப் போற்றுவதும் வழிபடுவதும் பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயில்
உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோயில்


அவ்வகையில், கடந்த வைகாசி விசாக நன்னாளில் (12.6.22 - ஞாயிறு) சக்தி விகடன் வாசகர்களும் அவர்களின் உற்றார் உறவுகளும் நட்புகளும் சகல நன்மைகளையும் அடையும் பொருட்டு, முருகப்பெருமானை வேண்டி மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது.

அற்புதமான இந்த ஹோமம், திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரம்மரந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பாக நடந்தேறியது.

முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டு, சித்தக் கலைகளைப் பயின்ற தலம் இது என்கின்றன புராணங்கள். மட்டுமன்றி, அர்ஜுனன் சிவபிரானிடம் பாசுபத ஆயுதம் பெற்றதும் இங்குதான் என்கிறது தலவரலாறு. அர்ஜுனனும் சகாதேவனும் வழிபட்ட ஈசன், பிரம்மரந் தீஸ்வரர் என்ற திருப்பெயரில் தலையில் வடுவோடு இங்கு கோயில் கொண்டிருக் கிறார். இந்தத் தலத்தில் யோக வடிவாக ஞான் குருவாக முருகப்பெருமான் அருள்வது விசேஷ அம்சம் என்கிறார்கள்.

வெண்ணாற்றங் கரையில் உள்ள இந்தத் தலம் யோக-சித்த மார்க்கத்தில் அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக் கலையில் பிரம்மரந்திரம் என்றால், சகஸ்ராரத்தையும் அதற்கு மேல் உள்ள துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகள் ஸித்திக்க அருளும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார்.

அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக அருள்பாலிக் கிறாள். ஆக, இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்ஙனம் புராணச் சிறப்புகள் நிறைந்த இந்தத் தலத்தில் சக்திவிகடனும் உச்சுவாடி பிரம்மரந் தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் இணைந்து வழங்கிய மஹா ஸ்கந்த ஹோமம், வைகாசி விசாகத் திருநாளன்று மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. சங்கல்ப முன்பதிவு செய்த வாசகர்கள் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப் பட்டு, சங்கல்ப பூஜையோடு ஹோமம் தொடங்கியது. நவதானியங்கள், பழங்கள், அபூர்வ ஸமித்துக்கள், நெய், அருகம்புல், தேங்காய் போன்ற ஹோம திரவியங்கள் கொண்டு இரவு 8:30 மணி வரை ஹோம வைபவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும் சிறப்புற நடந்தேறின. அதிகாலை தொடங்கி அன்று முழுவதும் பக்தர்களின் பாற்குட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்
Muralinath


ஹோமத்துக்குப் பிறகு உச்சிவாடி முருக பெருமான் அலங்கரிக்கப்பட்டு கயிலாய வாத்தியங்கள் முழங்க வழிபாடு நடத்தப் பட்டது. இந்த நிகழ்வில் ஜோதிமலை இறைப்பணி கூட்ட ஆதீனகர்த்தர் திருவடிக்குடில் ஸ்வாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளையும் சொற் பொழிவும் நடத்தினார். வாசகர்கள் நலம் பெற அவருடைய விசேஷ வழிபாட்டிலும் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்பட்டது. சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாசகர்கள் பலர் ஹோமத்தில் நேரில் வந்து கலந்துகொண்டார்கள்.

சங்கல்ப முன்பதிவு செய்துகொண்ட வாசகர் களுக்காக சிறப்புப் பிரர்த்தனைகள் நடைபெற்றன. நவகிரகம் சார்ந்த தோஷங்களை விலகி, அவர் களின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகவும் செல்வ வளம் செழிக்கவும் வேண்டிக்கொண்டோம். விழா வைபவ ஏற்பாடுகள், ஆலய நிர்வாகத்தின் சார்பில் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

மகா ஸ்கந்த ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபட்டால் உறவுச் சிக்கல்கள் நீங்கும். கடன் தொல்லைகள், தீராத நோய்கள், வியாபார-தொழில் மந்தம் ஆகிய பிரச்னைகள் தீரும் என்கின்றன ஞானநூல்கள். ஆகவே ஊர்மக்களும் திரளாக வந்திருந்து வழிபட்டனர்.

`வைகாசி விசாக நாளில் அறுபடையப்பனை வழிபடுவது மிகவும் விசேஷம். அவர் அருளால் தீராத பகை தீரும்; பாவங்கள் பொசுங்கும்; முன்வினைகள் அகலும், கல்யாண வரம் கைகூடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி யிருக்க விசேஷ ஹோமத்தோடு விசாக தரிசனம் கிடைத்தது எங்களின் கொடுப் பினையே' என்று சிலிர்ப்போடு பகிர்ந்து கொண்டார்கள் உள்ளூர் பக்தர்கள்.

`விகடன் இணையதளத்தின் மூலம் இந்த ஹோமம் பற்றி அறிந்து முன்பதிவு செய்தோம். எனக்குத் திருமண தடை உள்ளது. தடை நீங்கி கல்யாணம் அமையவேண்டும் என்ற பிரார்த்தனை யோடு வந்தேன். ஹோமத்தில் கலந்துகொண்டதில் பூரண மனநிறைவு; என் மனம் முழுக்க திருப்தி. முருகனின் அருளால் என் வேண்டுதல் விரைவில் பலிக்கும்' என்று நம்பிக்கையோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் வாசகர் ஒருவர்.

இந்த அன்பருக்கு மட்டுமல்ல, சங்கல்ப முன்பதிவு செய்த அனைத்து வாசகர்களின் வேண்டுதலையும் முருகப்பெருமான் விரைவில் நிறைவேற்றி வைப்பார். எல்லோர் வாழ்விலும் சகல நன்மைகளும் நடந்தெறும்.

கந்தன் துணையிருக்கக் கவலைகள் இல்லை!